Thursday, 30 April 2015

கோழிக்கறி (இலங்கை முறை)

கோழிக்கறி (இலங்கை முறை)
கோழி இறச்சி ஒரு கிலோ அளவாக வெட்டியது
பச்சை மிளகாய் 10 சிறிதாய் நறுக்கியது
ஏலக்காய் 5
கருவாப்பட்டை 3
பெரிய வெங்காயம் 2 நறுக்கியது
மல்லி தூள் 2 தேக்கரண்டி
ஜீரகம் 1 தேக்கரண்டி
ஜீரகம் தூள் 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் தூள் 1 தேக்கரண்டி
கறிமசாலா 2 தேக்கரண்டி
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
மஞ்சள் 2 தேக்கரண்டி
பூண்டு 4 பற்கள்
இஞ்சி பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் 1 கப்
நல்லமிளகு தூள் தேவைக்கு
கருவேப்பிலை தேவைக்கு
உப்பு தேவையான அளவு

தயார் செய்யும் முறை:
முதலில் இறைச்சியை நன்றாக கழுவி ஓரளவு பெரிய துண்டாக நறுக்கி உப்பும் மஞ்சளும் இறைச்சியில் நன்றாக கலந்து இறைச்சியை ஊற வைக்கவும்.
வெங்காயங்களை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு எண்ணை சூடானதும் ஏலக்காய் கருவாப்பட்டை பூண்டு கறிவேப்பிலை ஜீரகம் போட்டு வதக்கியதும் பச்சை மிளகாயை போட்டு அது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் போடவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் 1 தேக்கரண்டி மஞ்சள் போடவும்.
மஞ்சள் வாசனை நீங்கியதும் இஞ்சிபூண்டு அரைப்பையும் போட்டு மீதமுள்ள கறிமசாலா ஜீரகம் மல்லி நல்ல மிளகு தூள்களையும் போட்டு
இறைச்சியையும் போட்டு நன்றாக கிறளி மூடி வைத்து 20 நிமிடம் வேக விடவும்.
அடிக்கடி கிளறி அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
நன்றாக வெந்ததும் தேங்காய் பால் விட்டு ஓரிரு தடவை கொதித்ததும் பால் பச்சை வாசனை போய் ஓரளவு வற்றியதும் இறக்கிவிடலாம்.

உருளைக்கிழங்கு கோதுமை தோசை

உருளைக்கிழங்கு கோதுமை தோசை

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
கோதுமை மாவு – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
• உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• முதலில் வேக வைத்து தோரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
• பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
• பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி!!

முட்டை மிளகு மசாலா

முட்டை மிளகு மசாலா

முட்டை மிளகு மசாலாஎன்னென்ன தேவை?
வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்
எப்படிச் செய்வது?

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி..

Tuesday, 28 April 2015

மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள்

மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள்

*வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
*எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
*பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.
*காபி, தேனீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.
*கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
*சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.
*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.
* காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.
*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.
*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.
* சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.
*குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.
*கட்லெட் செய்ய ‘பிரெட் கிரம்ப்ஸ்’ கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.
*கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.
*வீட்டில் டீ தயாரிக்க நீரைக் கொதிக்க விடும் போது ஒரே ஒரு புதினா இலையையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பாருங்கள். டீயின் மணமும், ருசியும் அபாரமாயிருக்கும்.
@ ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சூப்பராக இருக்கும் ரசம்.
@ இட்லிக்கு மாவாட்டும்போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கிப் போட்டுப் பாருங்கள். இட்லி விள்ளாமல் விரியாமல் மெத்மெத்தென்று இருக்கும்.
@ காட்டு நெல்லிக் காயைக் கழுவி, கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள். வைட்டமின் குறையாத ஊறுகாய் ரெடி.தேவைப்பட்டால் மிளகாய்ப் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.
@ அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் நேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். மொறுமொறுவென்று இருக்கும் அடை.
@ மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டுப் பிசைந்து நாலைந்து மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து போட்டுக் கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் வைத்து விடுங்கள். சோற்று வடாம் ரெடி.
@ பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.
@ மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய் களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்

Thursday, 23 April 2015

கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்:-

கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்:-
கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.
கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்.

ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் தக்காளி – 2 (நறுக்கியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன் தண்ணீர் – 2 1/2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை,

பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்கி, பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, பின் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை அதிகரித்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, அதனை மசித்து, வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சுவை பார்த்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால் ரெடி!!!

தலைமுடி பராமரிக்கும் முறை

தலைமுடி பராமரிக்கும் முறை

1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.
2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.
5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.
6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .
7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .
8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .
9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.
9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.
12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .
13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

தட்டைப்பயறு குழம்பு

தட்டைப்பயறு குழம்பு

தட்டைப்பயறு குழம்பு

 தேவையான பொருட்கள்: 

தட்டைப்பயறு – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை: முதலில் தட்டைப்பயறை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து மூடி, அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்துவிட்டு

, வேக வைத்த தட்டைப்பயறுடன், வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் மீண்டும் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள குழம்பை வாணலியில் ஊற்றி, ஒருமுறை கொதிக்க விட்டு இறக்கினால், தட்டைப்பயறு குழம்பு ரெடி!

 

பஞ்சிரி சமையல்

பஞ்சிரி சமையல்

ன்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1/4 கிலோ,
நெய் – 1/4 கிலோ,
உலர்ந்த திராட்சை – 25 கிராம்,
பாதாம் – 25 கிராம்,
உலர்ந்த தாமரை விதை (மக்னா) – 20 கிராம் (பெரிய கடைகளில் கிடைக்கும்),
பொடித்த சர்க்கரை – 1/2 கிலோ,
சமையல் கோந்து – 25 கிராம்,
தர்பூசணி விதை – 25 கிராம்,
கிர்ணி விதை – 25 கிராம்,
சுக்குத் தூள் – 1 சிட்டிகை,
ஓமம் – 1 சிட்டிகை,
பூசணி விதை – 25 கிராம்.

எப்படிச் செய்வது?
ஒரு பெரிய வாயகன்ற கடாயில் சிறிது நெய்யை ஊற்றி, சூடாக்கி நன்கு சூடாக இருக்கும் போது கோந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும். கோந்து பொரிக்கும் போது புஸுபுஸு என்று வரும். அப்போது தீயைக் குறைத்துக் கொள்ளவும். பின் விதைகள், நட்ஸை தனித்தனியாக பொரித்து எடுத்து வைக்கவும். இப்போது மீதி உள்ள நெய்யை கடாயில் சேர்த்து சூடாக்கி ஓமம், சுக்குத் தூள் சேர்த்து வதக்கி இத்துடன் கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறுங்கள். நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.
வறுபட்டதும் இறக்கி, பொடித்த சர்க்கரை, கோந்து தூள், வறுத்த பருப்புகள், விதைகள், உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்து சூடாக இருக்கும் போதே நெய் தடவிய சிறுசிறு கப் அல்லது கிண்ணங்களில் 2 அல்லது 3 டீஸ்பூன் போட்டு அழுத்தி அப்படியே வைத்து பின் பரிமாறலாம். சிறிது நேரம் கழித்து தட்டில் அலங்கரித்தும் பரிமாறலாம். சத்தான பஞ்சிரி பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கும், குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஏற்றது

 

வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்!

வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்!

தினம் தினம் நமக்கு வயதாகிறது. ஒருநாள் உறங்கி எழுந்தாலே போதும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாள் முடிந்து விடுகிறது. நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.

டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

கண் சுருக்கம் போக்கவும்
வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

நீர்ச் சத்து குறைபாடு
முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.

கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

கண்ணக் குழி தவிர்க்க
இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

இயற்கையை ரசியுங்கள்
உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்… கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்

அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்

 

 

வொண்டர் சூப்

வொண்டர் சூப்

பீன்ஸ் – 10,
கேரட் – 1,
முட்டைக்கோஸ் – 50 கிராம்,
பிரக்கோலி – 1 துண்டு,
காலிஃப்ளவர் – 1 துண்டு,
வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/2 கப்,
பச்சைப் பட்டாணி – 1/4 கப்,
பட்டை – 1 சிறு துண்டு,
தண்ணீர் – 1 லிட்டர்,
ஆலிவ் ஆயில், உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கு,
தைம், ரோஸ்மேரி, துளசி இலை (என மிக்ஸட் ஹெர்ப்ஸ்) – தலா 1 சிட்டிகை,
வேக வைத்த நூடுல்ஸ் அல்லது டோஃபு – 1/2 கப்,
எண்ணெய் – தேவைக்கு.

வதக்கி சேர்க்க…
சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் – தலா ஒரு துண்டு,
வெங்காயம் – 1.

மேல் அலங்கரிப்புக்கு…
சீவிய பாதாம், கிஸ்மிஸ், மிளகுத் தூள் – சிறிது.

எப்படிச் செய்வது?
பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பிரக்கோலி, காலிஃப்ளவர் ஆகிய காய்களை துண்டுகளாக நறுக்கி, ஒரு குக்கரில் போடவும். அத்துடன் சிறிது உப்பு, பட்டை சேர்த்து வேக விடவும். இதில் 1 லிட்டர் தண்ணீரை சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, வேக வைத்த ஸ்வீட் கார்ன், பச்சைப் பட்டாணி, மிளகுத் தூள், வேக வைத்த நூடுல்ஸ் அல்லது டோஃபு சேர்க்கவும். மிக்ஸட் ஹெர்ப்ஸை நறுக்கிப் போடவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயிலை விட்டு சூடானதும் சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கி சூப்புடன் சேர்த்து இறக்கி, பாதாம், கிஸ்மிஸ், மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும். கிளியர் சூப்பாக வேண்டும் என்றால் அப்படியே பரிமாறவும். சிறிது கெட்டியாக வேண்டும் என்றால் சோள மாவு கரைத்து ஊற்றி, இறக்கி சூப் கப்பில் ஊற்றிப் பரிமாறவும்.

வாழை இலையின் பயன்கள்:

வாழை இலையின் பயன்கள்:

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.
இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Spicy Delicious Breakfast Tomato Pizza

Spicy Delicious Breakfast Tomato Pizza

Easy to make and have it with your family and friends.
Ingredients
5 tomatoes, peeled and sliced
10 fresh basil leaves, chopped
1/2 cup chopped green onion, or red onion
1 (9-inch) prebaked deep dish pie shell
1 cup grated mozzarella
1 cup grated cheddar
3/4 cup mayonnaise (or half mayo, half Greek yogurt)
2 Tbsp grated mozzarella Cheese
Salt and pepper

Instructions
Preheat oven to 175 degrees Celcius.
Place the tomatoes in a colander in the sink in 1 layer. Sprinkle with salt and allow to drain for 10 minutes. Use a paper towel to pat-dry the tomatoes and make sure most of the excess juice is out. (You don't want wet (juicy) tomatoes or your pizza will turn out soggy).
Layer the tomato slices, basil, and onion in pie shell. Season with salt and pepper. Combine the grated cheeses and mayonnaise together. Spread mixture on top of the tomatoes and sprinkle mozzarella cheese on top. Bake for 30 minutes or until lightly browned.
To serve, cut into slices and serve warm.

மோர் மிளகாய்..! எப்படி தயாரிப்பது...

மோர் மிளகாய்..!


தேவையானவை: பச்சை மிளகாய் - 100 கிராம், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயைக் கழுவி, துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும். காம்பு மிகப் பெரிதாக இருந்தால், சிறிய அளவு மட்டும் விட்டு விட்டு, மீதியை நீக்கிவிடவும். பெரிய கண்ணாடி பாத்திரம் / ஜாடியில் மிளகாயை சேர்க்கவும். தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி வைக்கவும்.
3 நாட்கள் ஊறிய பிறகு, தயிரிலிருந்து மிளகாயை சற்றே பிழிந்தாற்போல் எடுத்து, ட்ரே (அ) தட்டு (அ) பெரிய பாலித்தீன் கவரில் பரப்பி, நல்ல வெயிலில் காய வைக்கவும். தயிர் கலவையும் வெயிலேயே வைக்கலாம். மாலை ஆனவுடன் மிளகாயை திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படி காய வைக்கவும். வெயிலில் வைக்க வைக்க... மிளகாயும், தயிரும் காய்ந்துவிடும். பிறகு, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தவும் (எண்ணெயில் நன்றாக வறுக்க வேண்டும்).
இது மோர் சாதத்துக்கு சரியான ஜோடி

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள் !

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள் !

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.

மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.

இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா பேஸ்ட்

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.
சூரியகாந்தி விதை
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
மாம்பழத் தோல்
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தேன்
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக்
சர்க்கரை
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
தண்ணீர் குடிக்கவும்
முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.
நன்கு தூங்கவும்
தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.
தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...
நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.
நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா.

சுக்கா வறுவல்

சுக்கா வறுவல்:

மட்டன் & 1/2 கிலோ

அரைக்க:-&

மிளகாய் தூள் & 2 டீஸ்பூன்
இஞ்சி & சிறு துண்டு
மிளகு & ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப

மட்டனை சுத்தம் செய்து முக்கால் வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மசாலா கலவையைப் போட்டு வதக்கவும்.
வேக வைத்த மட்டன், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து,
குறைந்த தீயிலேயே வைத்து வறுக்கவும்-. இதற்கு சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றி டீப்ஃப்ரை செய்யவும்.
மசால் கலவை மட்டனுடன் சேர்ந்து, நீர் வற்றி, உலர்ந்து எண்ணெய் கக்கியதும் இறக்கினால்,
மொறு மொறுவென இருக்கும்

Wednesday, 22 April 2015

பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா

பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா

தேவையான பொருட்கள் :
----------------------------------------------------------------
சிக்கன் , முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்த விழுது, சோம்பு, கசகசா, வேர்க்கடலை, தனியா, கரம் மசாலா பொருட்கள், சீரகம், மிளகு, மஞ்சள் தூள், உப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய், இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி

செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.வாணலியை சூடாக்கவும், மற்றொரு அடுப்பில் தவாவை காயவிடவும்.
2. வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தனியா, பட்டை, இலவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு, சோம்பு, சீரகம், மிளகு, வேர்க்கடலை, காய்ந்தமிளகாய், கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கி தட்டில் சேர்த்து ஆறவிடவும்.
3. தவாவில் பரோட்டாவை வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
4. வதக்கிய பொருட்களை சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அறைத்து வைத்து கொள்ளவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியவுடன் சிக்கன் சேர்த்து வதக்கி, அறைத்த மசாலாவையும், தேங்காய் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து மூடி போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும்.

Tuesday, 21 April 2015

சிறு தானிய முருங்கைக்கீரை அடை

 சிறு தானிய முருங்கைக்கீரை அடை

ஊறவைத்த கம்பு , ஊறவைத்த கேழ்வரகு , பச்சப்பயறு , துவரம் பருப்பு , கடலைப் பருப்பு , வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , மஞ்சள் தூள் , பெருங்காயத் தூள், கடுகு, உளுந்தம் பருப்பு, உப்பு, எண்ணெய், இஞ்சி, முருங்கைக்கீரை
செய்முறை :
1. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. கம்பு, கேழ்வரகு, பச்சைப் பயறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அறைத்து வைத்து கொள்ளவும்.
3. பின்பு மிக்ஸியில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பையும் சேர்த்து அறைத்து கம்பு கலவையோடு சேர்த்து கலந்து வைக்கவும்.
4. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காய தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, முருங்கைக்கீரை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள மாவோடு சேர்க்கவும்.
5. இறுதியாக மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை மாவோடு சேர்த்து கலந்து தவாவில் அடையை வார்த்து எடுக்கவும்

Monday, 20 April 2015

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!
 

நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும்.

நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும்.

அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள்.

சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.

சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது.

முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான உணவாக மாற்றுகிறது.

ஒரு முட்டையில் ஒளிந்திருக்கும் சத்து உடலுக்கு உகந்ததாக உள்ளது. ஆரோக்கியமாக இருப்பதில் முட்டை பெரும் பங்கை வகிக்கிறது.

குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் ஏன் எல்லோரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது.

பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.

ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும்.

எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும்.
இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்

இறால் வடை

இறால் வடை



தேவையான பொருட்கள்:

இறால், வெங்காயம், புதினா, இஞ்சி, மாங்காய், பொட்டுக்கடலை, துவரம் பருப்பு, முந்திரி பருப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, தனியா தூள், சீரகத்தூள், எண்ணெய், உப்பு.
செய்முறை :
1. இறால், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய், புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, அனைத்தையும் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
2. பொட்டுக்கடலை, முந்திரி இரண்டையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
3. பின் ஊறவைத்த துவரம் பருப்பை அரைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிவைத்த காய்கறிகளையும், இறாலையும் அதனுடன் சேர்த்து சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4. பின் கடாயில் எண்ணெய் இட்டு, எண்ணெய் காய்ந்தவுடன் வடை மாதிரி தட்டி எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்.

குழந்தையர் வளர்ப்பு :-

குழந்தையர் வளர்ப்பு :-
* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.
* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .

சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .

சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.
சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.
1. இதயத்திற்கு நல்லது. . .
(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.
2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .
வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.
3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .
சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.
4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .
குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .
தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.
6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .
சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.
7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .
உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .
சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.
9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . .
ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்
10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium). . .
ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.

Thursday, 16 April 2015

வீட்டுக் குறிப்புகள்

வீட்டுக் குறிப்புகள்

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதில் கொஞ்சம் சோயா மாவு, கம்பு மாவு, கேழ்வரகு மாவும் போட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும். கூடவே எல்லா விதமான சத்துக்களும் குழந்தைகளுக்கு
கிடைக்கும்.


காஃபிப் பொடி பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்படியெனில், அதை ப்ளாஸ்டிக் பையுடனேயே வைத்திருங்கள். பாத்திரத்தில் கொட்டி வைக்க
வேண்டாம்


மழை, பனிக் காலங்களில் டேபிள் சால்ட் போட்டு வைத்திருக்கும் குப்பிகளில் கொஞ்சம் அரிசியையும் போட்டு வைத்தால், உப்பு தடையின்றி சீராக வரும். 

வீட்டு வேலையை அதிகமாகச் செய்கிற பெண்களுக்கு உள்ளங்கைகள் கடினமாகிவிடும். இவர்கள், கிளிசரின், சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தடவி வந்தால், கைகள் மிருதுவாகும். 

 பாட்டிலின் மூடியைத் திறக்க முடியவில்லையா? ஈரத் துணியால் மூடியை இறுகப் பற்றிக் கொண்டு திருகினால் சுலபமாகக் கழன்று வந்துவிடும் 

கிச் டிப்ஸ்

கிச் டிப்ஸ்

தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.
*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.
*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.
*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
*கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

சோளப் பாயசம் & கேழ்வரகு (ராகி) பகோடா

சிறுதானிய சமையல்

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... 

 சோளப் பாயசம்
தேவையானப் பொருட்கள்:
நாட்டுச் சோளம் - 2 கப்
பார்லி - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிதளவு
பனை சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை:
நாட்டுச் சோளம் மற்றும் பார்லியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, நீர் சேர்த்து மாவு போன்ற பதத்துக்கு அரைக்கவும். பிறகு, அரைத்த பார்லி மற்றும் நாட்டுச் சோளத்தை, பெரிய கண்ணுள்ள வடிகட்டியில் வடிகட்டினால், அதிலுள்ள சக்கைகள் நீங்கி விடும். பிறகு அந்தக் கலவையில் பனை சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும். கேசரி பவுடர் சேர்த்து, திரவ நிலை அடைந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.


கேழ்வரகு (ராகி) பகோடா
தேவையானப் பொருட்கள்:
கடலை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - ஒரு கப்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் - 2 கப்
தேவையான அளவு வெங்காயம், பச்சைமிளகாய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், உப்பு, நெய், நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் உடன் சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, சேர்த்துக் கலக்கவும். பிறகு, கொதிக்கும் எண்ணெயில் போட்டு, பொன்நிறம் வரும்வரை பொரித்தெடுத்தால்... ராகி பகோடா ரெடி.
''கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு!''

. கேழ்வரகு அவலை வெச்சு, உப்புமா செஞ்சும் சாப்பிட முடியும். கேழ்வரகுல அதிக கால்சியம் சத்துக்கள் இருக்கறதால, எலும்புகளுக்கு நல்லது. அதனால உடம்புக்குக் கூடுதல் பலம் கிடைக்குது. தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகிலே கிடைச்சுடுறதால, பாலோட தேவையைக் குறைச்சுக்கலாம்.
எங்க வீட்ல கம்பு, வரகு, பருப்பு, சோளம் இதையெல்லாம் ஊறவெச்சு, செய்யுற அடையை விரும்பி சாப்பிடுவாங்க. அதோட திணையரிசியில செய்ற சர்க்கரைப் பொங்கலும் அவ்ளோ ருசியா இருக்கும். அரிசியில கிடைக்காத சுவையும் சத்தும் சிறுதானியங்கள்ல கிடைக்குது'' என்றவர்,
''சிறுதானியங்கள சாப்பிடறதால பலவித நன்மைகள் இருக்குற மாதிரியே அதை விளைவிக்கறதுலயும் பல நன்மைகள் இருக்கு. தண்ணியும் குறைவாதான் தேவைப்படும். பூச்சிக்கொல்லியும், ரசாயன உரங்களும்
போட வேண்டியத் தேவையிருக்காது. இதனால, நிலமும் வளமாயிருக்கும். விவசாயிகளுக்கும் வேலை குறைச்சலா இருக்கும்'' என்றார்.

நூடுல்ஸ் மெதுபோண்டா

நூடுல்ஸ் மெதுபோண்டா
 
தேவையான பொருட்கள் :
வேகவைத்த நூடுல்ஸ், பொட்டுக்கடலை மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், கோஸ், கேரட், எண்ணெய், உப்பு, கடலை மாவு
செய்முறை :
1. கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.
2. இதனுடன் கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.
3. வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள நூடுல்ஸை சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான " நூடுல்ஸ் மெதுபோண்டா " ரெடி.

Wednesday, 15 April 2015

தெரிந்து கொள்ள வேண்டிய நில அளவைகள்!

தெரிந்து கொள்ள வேண்டிய நில அளவைகள்!

1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் - 222.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்)
1 கிரவுண்ட் - 2400 சதுர அடிகள்
1 குழி - 44 சென்ட்
1 மா - 100 குழி
1 டிஸ்மிஸ் - 1.5 சென்ட்
1 காணி - 132 சென்ட் (3 குழி)
1 காணி - 1.32 ஏக்கர்
1 காணி - 57,499 சதுர அடிகள்
1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல் - 1.61 கிலோ மீட்டர்
1 மைல் - 5,248 அடிகள்
1 கிலோ மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்)
1 மிட்டர் - 3.281 அடிகள்

Friday, 10 April 2015

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!
 
நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் Android Osஐ நமது மொபைல்களில் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம் என்ன தெரியுமா
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது
அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்

அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்
சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள்
இது Settings>app >running பகுதியில் Ram மெமரியின் உபயோக அளவு
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop
கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் ,இப்பொழுது போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று
சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data
அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள்
பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள்
history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்

Thursday, 9 April 2015

என்றும் இளமை தரும் கடுக்காய் :-

என்றும் இளமை தரும் கடுக்காய் :-

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.
பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.
உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர...
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!

Wednesday, 8 April 2015

கேஎப்சி சிக்கன்


 கேஎப்சி சிக்கன்


சிக்கன் -1/2 கிலோ
தக்காளி சாஸ்- -1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
மைதா மாவு – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
முட்டை – 1
பிரட் தூள் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎப்சி சிக்கன் ரெடி.

Saturday, 4 April 2015

பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா

பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா
தேவையான பொருட்கள் :
சிக்கன் , முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்த விழுது, சோம்பு, கசகசா, வேர்க்கடலை, தனியா, கரம் மசாலா பொருட்கள், சீரகம், மிளகு, மஞ்சள் தூள், உப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய், இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.வாணலியை சூடாக்கவும், மற்றொரு அடுப்பில் தவாவை காயவிடவும்.
2. வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தனியா, பட்டை, இலவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு, சோம்பு, சீரகம், மிளகு, வேர்க்கடலை, காய்ந்தமிளகாய், கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கி தட்டில் சேர்த்து ஆறவிடவும்.
3. தவாவில் பரோட்டாவை வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
4. வதக்கிய பொருட்களை சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அறைத்து வைத்து கொள்ளவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியவுடன் சிக்கன் சேர்த்து வதக்கி, அறைத்த மசாலாவையும், தேங்காய் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து மூடி போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும்.

Thursday, 2 April 2015

கொத்தவரங்காய் வத்தல்

கொத்தவரங்காய் வத்தல்
 
தேவையான பொருட்கள் :

கொத்தவரங்காய் : 1 கிலோ
உப்பு : 1 கைப்பிடி
மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்

செய்முறை :

  • குக்கரில் கொத்தவரங்காயை போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து காய் நனையும் வரை தண்ணீர் விடவும்.
  • 1 விசில் விட்டு அடுப்பை அனைத்து விடவும்.
  • பிறகு கொத்தவரங்காயை வடிகட்டி வெய்யிலில் காயவைக்கவும்.
  • கல கலவென ஆனவுடன் டப்பாவில் போட்டு வைக்கவும்.
  • இதே போல் அவரைக் காய் வற்றலும் போடலாம்.

பருப்பு பூரி

பருப்பு பூரி


தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு = 250 கிராம்
பாசிப்பருப்பு = 1 ஸ்பூன்
கடலை பருப்பு = 1ஸ்பூன்
மிளகுத்தூள் = அரை ஸ்பூன்
சீரகத்தூள் = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:
பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
கோதுமை மாவை பிசைந்து பூரியாக செய்து வதக்கிய விழுதை சிறிதளவு எடுத்து வைத்து மூடி வைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான “பருப்பு பூரி” தயார்.
மருத்துவ குணங்கள்:
பாசிப்பருப்பில் பொட்டாசியம் , கால்சியம், பாஸ்பரஸ், ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தாதுப்பொருள், நார்ச்சத்து நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. சருமத்தை பாதுகாக்கிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குறைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு

நாட்டுக் காய்கறி பிரியாணி

நாட்டுக் காய்கறி பிரியாணி

தேவையானவை:

கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் (எல்லாம் சேர்த்து) ஒரு கிலோ

பட்டை – 2
லவங்கம் – 2
பிரிஞ்சி இலை – 2
பச்சை மிளகாய் – 8
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
வெங்காயம் – 400 கிராம்
தக்காளி – 400 கிராம்
இஞ்சி, பூண்டு (அரைத்தது) – 100 கிராம்
புதினா – ஒரு கட்டு
கொத்துமல்லி – ஒரு கட்டு
தயிர் – ஒரு கப்
தனியா தூள் – 2 குழிக்கரண்டி

செய்முறை:

* காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை நறுக்குங்கள்.

* குக்கரில் எண்ணை விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, மல்லி இலை, இஞ்சி, பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

* அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள்.

* அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.

* அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.

* இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்து இருந்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான்…நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!
வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.
னால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.
சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.
இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.
அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.
மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.
மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.
உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,
மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுப் பட்டியல்

நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுப் பட்டியல்
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை சக்தியாகவும், தேவைக்கு அதிகமான சர்க்கரையை கொழுப்பாகவும் சேமித்து வைக்க உதவுகிறது.
நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப்பணியை செய்கிறது.
பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறையும் போது அல்லது வேலை செய்ய முடியாத போது உணவில் உள்ள சர்க்கரை சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகிறது.
இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது 180 mg/dL தாண்டும் போது சிறுநீரில் சர்க்கரை வெளியாகிறது, இது தான் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்.
இவ்வாறு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு முறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
இதோ நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுப்பட்டியல்,
காலை
மருதம் பட்டை மூலிகைக் கஷாயம் – ஒரு கப் (100 மி.லி) அல்லது டீ, காபி சர்க்கரை இல்லாமல் அருந்த வேண்டும்.
காலை டிபன்
இட்லி – 3 அல்லது தோசை – 2, சப்பாத்தி- 1, இடியாப்பம்- 1, சம்பா ரவை உப்புமா, மிளகு பொங்கல், வெந்தயம் கலந்த கஞ்சியுடன் புதினா, (தேங்காய் சட்னி கண்டிப்பாக சாப்பிடக்கூடாது). இதனை தவிர ஏதேனும் கீரை சூப் குடிக்கலாம்.
காலை 11 மணி
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சாறு வகைகளில் ஏதாவது ஒன்று கட்டாயம் சாப்பிடவும். பாகற்காயை சாறாக குடிக்கலாம்.
மதிய உணவு
ஒரு கப் சாதம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாகற்காய், பீன்ஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் சேர்த்த சாம்பார் சாப்பிடலாம்.
மேலும், பழவகைகளில் பேரிக்காய், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
இரவு உணவு
கோதுமை சார்ந்த உணவுகள், 2 அல்லது 3 காய்கறி பச்சடி மற்றும் சட்னி வகைகள்.

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் .

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் . . .
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.
உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்6iik

நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! பீர்க்கங்காய் -

நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!
பீர்க்கங்காய் -
சத்துக்கள்: நீர்ச் சத்தும், தாது உப்புகளும் உள்ளன. கலோரி அளவும் குறைவு. மிதமான அளவு புரதம், நார்ச் சத்து உள்ளன.
பலன்கள்: உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். வெயில் காலத்துக்கு ஏற்றது. மலச்சிக்கல் வராது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்தக் காயை லேசாக வேகவைத்து, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்துத் தொக்காகச் செய்து சாப்பிடலாம்.

பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . .

பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . .

பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . .
வாயு பிடிப்பால் உண்டான ”கை, கால் பிடி ப்பு மட்டுமல்லாது உடலில் எங்கெல்லாம் வாயு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறதோ அங்கெல் லாம் வாயுபிடிப்பு விடுபட்டு மிகவும் ஆரோ க்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருப்பீங்க ! ஒருசிலருக்கு சாப்பிட்ட‍ சில மணி நேரங்க ளில் இந்த வாயு பிடிப்பு குணமாகும்.
பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . . ! சாப்பிட்ட‍ அடுத்த நிமிடமே…