தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் தக்காளி – 2 (நறுக்கியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன் தண்ணீர் – 2 1/2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்கி, பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, பின் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை அதிகரித்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, அதனை மசித்து, வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சுவை பார்த்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால் ரெடி!!!
No comments:
Post a Comment