Thursday, 30 July 2015

பனீர் டிக்கா மசாலா

பனீர் டிக்கா மசாலா

தேவையானவை
பனீர் - 1 கப் ( பொரித்தது )
பெரிய வெங்காயம் - 1 ( விழுதாக )
தக்காளி - 2 ( விழுதாக )
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டாணி - சிறிது
கசூரி மேத்தி பவுடர் - 1 தேக்கரண்டி
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
பால் - 1 1/2 கப்
சீனி - 1 /4 ஸ்பூன்
சாய் சீரா - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் (அ) எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை
வாணலியில் 3 தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சாய் சீரா மற்றும் சிறிது கசூரி மேத்தி சேர்த்து தாளிக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.அதனுடன் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தந்தூரி மசாலா பவுடர் சேர்த்து வதக்கி,
தக்காளி விழுது,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் பட்டாணி சேர்த்து கிளறவும்.
பின் பால் 1 1/2 கப் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் பனீர் துண்டுகளை போட்டு வேகவிடவும்.
சிறிது வெந்தவுடன் 1/4 ஸ்பூன் சீனி சேர்க்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் மேலே வந்தவுடன் கசூரி மேத்தி பவுடர் தூவி இறக்கவும்.
நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான சைட் டிஷ்.

கறி தோசை

கறி தோசை

தேவையானவை
தோசை மாவு - 1 கப்
முட்டை - 2

கறி மசாலா செய்ய:
சிக்கன் (அ) மட்டன் கீமா - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விலுது - 1 ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி- 1/2 தேக்கரண்டி
கறி மசாலா பொடி- 1/4 தேக்கரண்டி
சீரகபொடி - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு - 1/4 தேக்கரண்டி
பட்டை - 1

சிக்கன் மசாலா செய்ய:
சிக்கன் கீமாவை கழுவி தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் பொடி,சீரகபொடி,கறி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
பின்னர் சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
தண்ணீர் வத்தியதும் நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவளாக போட்டு
முட்டையை ஊற்றி திருப்பிபோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
கறி தோசை ரெடி.இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.

நண்டு மசாலா

நண்டு மசாலா

தேவையானவை :
நண்டு – ஐந்து
நல்லெண்ணெய் – 25 மில்லி
சோம்பு – 10 கிராம்
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – பத்து
பெரிய வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 10 கிராம்
தக்காளி – 50 கிராம்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
சோம்பு, சீரகப் பவுடர் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய் – அரைமூடியில் பாதியளவு
கொத்தமல்லி தழை – அலங்கரிக்க
உப்பு – தேவையான அளவு


செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். தேங்காயை தனியாக அரைத்து வைக்கவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். மசாலா பொடிகள், தக்காளி விழுது, நண்டு, உப்பு சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும். இதில் அரைலிட்டர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். கொதித்து வரும் போது தேங்காய் விழுது சேர்த்து, சற்றே கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நல்லெண்ணெய் விட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்க வேண்டும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தி, நாண், ரொட்டியோடு சாப்பிட விரும்பினால், முந்திரிபருப்பு விழுது சேர்க்க வேண்டும்.
சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.

Tuesday, 28 July 2015

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தனி நபருக்கு 65 கிராம் பருப்பு பரிந்துரைத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தனி நபருக்கு 65 கிராம் பருப்பு பரிந்துரைத்துள்ளது.
ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கமானது கடந்த ஓர் ஆண்டில் கிடுகிடுவென குறைந்துள்ள போதிலும், பருப்பு வகைகளின் விலையில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வானது, சாமானிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகள் முதல் பணக்காரா்கள் வரை அன்றாடம் பயன்படுத்தக்கூடிய துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றின் ஒரு கிலோ சில்லரை விலையானது 100 ரூபாயைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவின் பருப்புப் பயறுகளின் விலை ஏன் உயர்கிறது என்பதற்கு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சில பொருளாதார அறிஞர்களும் அரசின் கொள்கை ஆய்வாளர்களும் கூறிவருகிறார்கள். பருப்புப் பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிற மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், கோடைக் காலத்தில் பருவம் தவறி அதிகமாகப் பெய்த மழையால் நிகழ்ந்த பயிர்ச் சேதத்தால் ஏற்பட்ட உற்பத்திக் குறைவு விலை உயர்வுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால், பருவமழை சரியான நேரத்தில் பெய்த கடந்த சில ஆண்டுகளில்கூட, பருப்புப் பயறுகளின் விலை ஏன் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது?
பருப்பு உற்பத்தியில் முதலிடம்
பருப்பு உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்தப் பருப்பு உற்பத்தியில் 23% கொண்டுள்ள நம் நாட்டில், சுமார் 230 லட்சம் ஹெக்டேரில் பல்வேறு வகையான பருப்புப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நீர்ப்பாசன வசதி இல்லாத மானாவாரி நிலங்களை அதிகமாகக் கொண்டுள்ள மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.
பசுமைப் புரட்சியை 1965-66-ம் ஆண்டில் அறிமுகப் படுத்திய பிறகு, உணவு உற்பத்தியில் குறிப்பாக, நெல் மற்றும் கோதுமைப் பயிர்களில் தன்னிறைவு பெற்றது மட்டுமல் லாமல் பல நாடுகளுக்கு நம்மால் ஏற்றுமதியும் செய்ய முடிகிறது. ஆனால், பருப்பு உற்பத்தியில் இதுவரையில் மெச்சத்தக்க அளவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் மொத்த உற்பத்தியில் சற்று உயா்வு இருந்தாலும், 1975-76-ம் ஆண்டிலி ருந்து 2009-10 வரையிலான காலகட்டத்தில் பருப்பு உற்பத்தி 130-140 லட்சம் டன்களாக மட்டுமே உள்ளது. பசுமைப் புரட்சியால் நெல் மற்றும் கோதுமைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு எக்கச்சக்கமாக உயா்ந்தது மட்டுமல்லாமல், ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் மகசூலும் கணிசமான அளவுக்கு உயர்ந்தது. பருப்பு மொத்த சாகுபடிப் பரப்பளவானது 1964-65-ம் ஆண்டு முதல் இன்று வரை ஏறக்குறைய 230 லட்சம் ஹெக்டேர்களாகவே உள்ளது.
மொத்த உற்பத்தியில் பெரிய மாற்றம் இல்லாத காரணத்தால், 1950-51-ம் ஆண்டில் சராசரியாக, தனிநபருக்குக் கிடைத்த பருப்பின் அளவான 61 கிராம், 2012-13-ம் ஆண்டில் 42 கிராமாகக் குறைந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவான 65 கிராமைவிடத் தற்போது தனிநபருக்குக் கிடைக்கும் பருப்பளவு மிகவும் குறைவானதாகும். மத்திய அரசால் 2007-08ம் ஆண்டு, துரிதப்படுத்தப்பட்ட பருப்பு வகைகள் உற்பத்தித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதே போன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திலும் இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விலைக் கொள்கை
2000-01 முதல் 2014-15 வரையிலான காலகட்டத்தில் பயறுகளுக்குக் கொடுக்கப்படும் குறைந்தபட்சக் கொள் முதல் விலை கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குவிண்டால் துவரைப் பயிறுக்குக் கொடுக்கப்படும் ஆதார விலையானது ரூ. 1,200 லிருந்து ரூ.4,625 ஆகவும், பச்சைப் பயறுக்கான விலை
ரூ. 1,200-லிருந்து ரூ. 4,850 ஆகவும் மற்றும் உளுந்துக் கான விலை ரூ. 1,200 லிருந்து ரூ. 4,625 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது போன்ற விலை உயா்வு இந்தியாவில் வேறு எந்தப் பயிருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இந்த விலை உயர்வால், பருப்புப் பயறுகளின் உற்பத்தியில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. இது ஏன்?
முக்கியக் காரணங்கள்
பசுமைப் புரட்சியின்போது நெல், கோதுமை போன்ற பயிர்களுக்கு ஆராய்ச்சி, வளா்ச்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பருப்புப் பயிர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதனால், அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய வீரிய ரகங்களை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உதாரணமாக, ஒரு ஹெக்டேர் மூலமாகக் கிடைக்கக்கூடிய சராசரி பருப்பு மகசூல் 1970-71 ம் ஆண்டில் 524 கிலோவிலிருந்து வெறும் 699 கிலோவாக மட்டுமே (2011-12-ம் ஆண்டில்) உயர்ந்துள்ளது. இதன் காரணமாகப் பெரும்பாலான விவசாயிகள் நல்ல மண்வளம் உள்ள நிலங்களில் பருப்புப் பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்த்துவருகிறார்கள்.
அறுவடை செய்த பருப்புப் பயிர்களை விவசாயிகள் விற்பதற்கு அரசால் நிர்வகிக்கப்படும் சரியான கொள் முதல் நிலையங்கள் இல்லாத காரணத்தால், பெரும் பாலான சமயங்களில் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் சிக்கி மிகவும் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. பருப்புப் பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில்கூட, அரசால் நிர்வகிக்கப்படும் நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் இல்லை.
தனியார் துறை மூலமாக ஒப்பந்த விவசாயத்தை (Contract Farming) ஊக்குவித்து பருப்பு சாகுபடி விவசாயிகள் பயன் பெறும் வகையில், நல்ல கொள் முதல் நடைமுறைகளை உருவாக்கி, பருப்பு சாகுபடியை உயா்த்த வேண்டும்.
பருப்புப் பயிர்கள் பெரும்பாலும் பருவ மழையைக் கொண்டு மானாவாரி நிலங்களிலேயே சாகுபடி செய்யப் பட்டுவருகின்றன. அரசின் புள்ளிவிவரப்படி, தற்போது பருப்புப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் மொத்தப் பரப்பள வான 240 லட்சம் ஹெக்டேரில், வெறும் 16% மட்டுமே நீா்ப்பாசன வசதி பெற்றுள்ளது. இதனால், விளைச்சலில் இடர்பாடுகளும் நிச்சயமற்றதன்மையும் ஏற்படுவது மட்டுமல்லாமல், சராசரி மகசூலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நீா்ப்பாசன வசதி பெற்றுள்ள நிலங்களில் பருப்பு சாகு படியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகள் மூலமாக, பருப்பு மகசூலை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை விவசாயிகள் மத்தியில் அரசு கொண்டுசெல்ல வேண்டும்.
தற்போதுள்ள பெரும்பாலான பருப்புப் பயிர்கள் பூச்சித் தாக்குதலுக்கு உட்படுவது மட்டுமல்லாமல், வறட்சியின் பிடியில் சிக்கி, குறைந்த மகசூல் மட்டுமே கொடுக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, 2009-ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட பருப்புப் பயிர் உற்பத்திக்கான நிபுணா்கள் குழு கூறியுள்ளதுபோல, வீரிய பருப்பு ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரிசி மூலம் பசியைப் போக்கினால் மட்டும் போதாது; பருப்பின் மூலம் புரதத்தையும் அளித்தால்தான் ஊட்டக்குறைவற்ற சமூகமாக நம் சமூகத்தை மாற்ற முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

Sunday, 26 July 2015

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் :-

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் :-

பூண்டு: பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.
இஞ்சி: நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.
தயிர்: தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.
பார்லி, ஓட்ஸ்: பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
டீ, காபி: டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.
சர்க்கரைவள்ளி கிழங்கு: பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காளான்: உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.
பழங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.
பெர்ரி பழங்கள்: பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது. பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.
எலுமிச்சை: எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.
கீரைகள், காய்கறிகள்: பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.
நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.
சத்துக்கள்
விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.
பித்தப்பை பிரச்சனை.
எலும்புகள் பலவீனம்.
கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனை.
ஆற்றலை அதிகரித்தல்.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
மூல நோயை குணப்படுத்தும், ஆசன வாயிலில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.
ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.
உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.
இதன் சுவை வீரியமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும்.
கருணைக்கிழங்கு ப்ரை
கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக நறுக்கி அதை உப்பு, கரம் மசாலாவில் புரட்டி எடுத்து, 10 நிமிடம் வைக்கவும்.
பிறகு அந்த கருணைக்கிழங்கு துண்டுகளை நன்றாக காய்ந்த எண்ணெய்யில் போட்டு, பொன்னிறம் வரும் வரை விட்டு பிறகு எடுக்கவும்.
இப்போது சுவையான கருணைக்கிழங்கு ப்ரை ரெடி.
குறிப்பு
மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்.

Saturday, 25 July 2015

சில்லி சோயா :

சில்லி சோயா :

தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள், சில்லி சாஸ், மக்காச்சோள மாவு, மைதாமாவு, அரிசி மாவு, உப்பு ருசிக்கேற்ப, வினிகர் _ 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.
அரைத்துக் கொள்ளவும்: பூண்டு _ 8 பல்லு, இஞ்சி _ 1 அங்குலத்துண்டு, பச்சைமிளகாய் _ 2.
செய்முறை : பிரஜர்பேனில் தண்ணீர்விட்டு சூடாக்கவும். கொதி வரும்போது சோயா உருண்டைகள் சேர்த்து மூடியால் மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து வடிகட்டவும். சோயாவை நன்கு பிழிந்து எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். மறுபடியும் பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நைசாக அரைத்து அதோடு சிறிது உப்பு, வினிகர், சில்லி சாஸ் கலந்து சோயாவின் மீது தெளித்து கைகளால் கலந்துவிடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் முக்கால் மணிநேரம் வைத்துவிடவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கைகளால் பிசறிவிட்டு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் கொள்ளும்வரை போடுங்கள். நன்கு கரகரப்பாக பொரித்து எடுத்து சூடாக தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால் படு டேஸ்டியாக இருக்கும்!

கறிவேப்பிலை இறால் வறுவல்

கறிவேப்பிலை இறால் வறுவல்
தேவையான பொருட்கள் :
இறால் – அரை கிலோ
பெ. வெங்காயம் – அரை கிலோ
மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்
மி. பொடி – இரண்டு டீஸ்பூன்
இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
ரீபைன்டு ஆயில் – மூன்று டேபிள்ஸ் பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி + பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.
அதுவே தானாக நீர் விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.
நீர் முழுவதும் வற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.
சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்

முட்டை மசாலா

முட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
தனியாதூள்-1/2 ஸ்பூன்
உப்பு-3/4 ஸ்பூன்
எண்ணெய் -3 ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிது
கடுகு-1/4 ஸ்பூன்
உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
கொத்தமல்லி-சிறிது

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பின் வெட்டிவைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் மஞ்சள்தூள்,மிள்கைதூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் 1 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
5 நிமிடம் நன்கு கொதித்ததும் முட்டை உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மசாலாவில் போடவும்.
பின் அதை மூடி வைத்து வேகவிடவும்.3 நிமிடம் கழித்து திறந்து முட்டை உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி சப்பாத்தி,சாதத்துடன் பரிமாறவும்.

அரைத்துவிட்ட மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :
· சுத்தம் செய்த மீன் – 1/2 கிலோ
· தக்காளி – 1
கரைத்து கொள்ள :
· புளி – 1 எலுமிச்சை அளவு
· தண்ணீர் – 5 – 6 கப்
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 2 மேஜை கரண்டி
· தனியா தூள் – 1 மேஜை கரண்டி
· உப்பு – தேவையான அளவு
அரைத்து கொள்ள :
· சின்ன வெங்காயம் – 5
· தேங்காய் – 2 சிறிய துண்டுகள்
கடைசியில் தாளிக்க :
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
· கடுகு + வெந்தயம்
· கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை :
· புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அத்துடன் தூள் வகைகள் + தக்காளி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
· கடாயில் புளி கரைசலினை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
· தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். அத்துடன் கடைசியில் வெங்காயத்தினை சேர்த்து ஒன்றுபாதியுமாக அரைக்கவும்.
· அரைத்த விழுதினை கொதித்து கொண்டு இருக்கும் குழம்பில் ஊற்றி மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
· பிறகு மீன்கள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
· தாளிக்க கொடுத்து பொருட்களை தாளித்து குழம்பில் கடைசியாக சேர்க்கவும்.
சுவையான அரைத்துவிட்டமீன் குழம்பு ரெடி.

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்..!

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்..!

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!
சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில
1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.
5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.
1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)
3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்

கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்

மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.
* ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.
* ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.
* வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.
* உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.
* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.
* சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.

மலபார் அவியல்

மலபார் அவியல்

தேவையானவை:
முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) – கால் கிலோ
கேரட் – 1
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
அரைக்க:
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்

எப்படி செய்வது?
காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, மைய அரைத்து எடுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்குங்கள். எளிய செய்முறை அபாரமான சுவை, குறையாத சத்து…இதுதான் இந்த மலபார் அவியலின் சிறப்பு. அடைக்கு சிறப்பான இணை இது!

 

Friday, 24 July 2015

வெங்காய கார சட்னி

 தேவையான பொருட்கள்

வெங்காயம் – 4 (மீடியம் சைஸ்)
தக்காளி – 3 (மீடியம் சைஸ்)
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 7 பல்
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 6
உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை கடாயில் எண்ணெய் உற்றி உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு (அடுப்பை சிம்மில் வைக்கவும்) இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், பிறகு தக்காளி போட்டு வதக்கவும் (அனைத்தும் பாதி பதத்திற்கு வதக்கவும்). பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை கடாயில் எண்ணெய் உற்றி தாளிக்கவும் பிறகு அந்த கலவையை கலந்து உப்பு சேர்த்து பரிமாறவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி

 

தேங்காய் சம்பல்

தேங்காய் சம்பல்
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சமிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சம் சாறு
மாசி – இரண்டு டேபல்ஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மாசியி தூளாக்கி கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மாசி, மிளகாய் தூள், உப்பு, சேர்த்து எலுமிச்சை சாறை ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து விடவும்.
அல்லது இப்படியும் செய்யலாம் அதாவது உரலில் முதலில் மாசி, மிளகாய்த்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நல்ல இடிக்கவும். பின்பு தேங்காய் போட்டு இடிக்கவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து உப்பு, எலுமிச்சை சாறு விட்டு பிசையவும்.
சம்பலை உரலில் இடித்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும்.

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை!

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை!
பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.
இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும்.
இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.
கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.

Thursday, 23 July 2015

மறக்க முடியாத பள்ளிகால வாழ்கை

மறக்க முடியாத பள்ளிகால வாழ்கை:-
1. முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் முன் அழுதது
2. வாத்தியாருக்கு வேணும்னே சீக்கி்ரம் உடைஞ்சு போற மாதிரி குச்சி தர்றது
3. வீட்டு பாடம் எழுதாமல் மறுநாள் ஆசிரியர் கிட்ட அடிவாங்கினது
4. வாத்தியார் அடிக்கும் குச்சியை ஒழித்து வைத்தது
5. பள்ளிக்கு போக மாட்டேன் என்று சொன்னதுக்காக அப்பா அடித்தது
6. மாலையில் பள்ளி விட்டதும் சத்தம் போட்டுகொண்டு ஓடியது
7. வாரத்தின் முதல் நாள் (திங்கள் கிழமை ) அன்று அடுத்த சனி கிழமை, ஞாயிறு கிழமை எப்ப வரும் என்று காத்திருப்பது
8. காலண்டரில் இந்த மாதம் எத்தனை அரசு விடுமுறை வருது என மாதந்தோறும் பார்ப்பது
9. வருசம் புல்லா படிக்காம ஊர சுத்திட்டு, பரிட்ச்சைக்கு ஒரு நாள் முன்னாடி அவசர அவசரமா எத படிகரதுனே தெரியாம முழிச்சது
10. இருக்குரதுலயே அதிக பக்கங்கள் இருக்கிற புக்க வெச்சு 'புக் கிரிக்கெட் ' விளையாடுறது .
11. பிறந்தநாள் லீவு அன்னைக்கு வருதேன்னு வருத்த பட்டது.
12. வட்டம் போட காம்பஸ் இருந்தும் பக்கத்து பெஞ்சுல இருக்க பொண்ணுகிட்ட வளையல் வாங்குறது
13. பள்ளிக்கு செல்லும் முன் அப்பா காசு கொடுப்பாரா இல்லையா என எதிர் பார்த்தது
14.. சில்லறைக் காசு கையளவில் ...சந்தோஷமோ கடலளவில்
15. பரிச்சையில் முதன்முதலில் பிட் அடித்தது
16. முதன்முதலில் பள்ளியை கட் அடித்துவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றியது
17. முழுஆண்டு தேர்வின் கடைசி பரிச்சை அன்று சட்டையில் மை (இங்) அடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தியது
18. ப்ளாக் போர்டுக்கு கரி பூசும் நாளை திருவிழா போல கொண்டாடுவோம்
19. சட்டையை டக் இன் செய்து, அரைஞான் கயிற்றை பெல்ட்டா யூஸ் செய்வது
20. யாராவது பேசுனீங்க போர்ட்ல நேம் எழுதி வெச்சிருவேன் -மிக அதிகம்,மிக மிக அதிகம் ..
21. நண்பர்களிடம் சாப்பாட்டை பகிர்ந்து உண்பது
22. முதல் லவ் லெட்டர் எழுதியது

Wednesday, 22 July 2015

டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை:

மனித உடலின் ஆதாரசுருதியாக திகழும் சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக உள்ளது. சிறுநீரகம் பழுதையடுத்து ரத்தஅழுத்தம் உள்பட உடலின் பல செயல்பாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.  உள்சிறுநீர்குழாய்களின் அடைப்புக்கு முக்கிய காரணம், சிறுநீரக கற்கள்தான்.

முதுகு-வயிற்றில் அதிக வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதை தடைசெய்யும். எலும்பு மஜ்ஜையில் இருந்து ரத்தசிவப்பணுக்களை உண்டாக்க உதவும் எரித்ரோபாயிட்டின் என்கிற நொதியை சிறுநீரகங்களே உற்பத்தி செய்கின்றன. சிறுநீரக செயலிழப்பால் இரத்த சோகை உண்டாகும். எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும் கால்சிட்ரியால் என்கிற சத்தையும் சிறுநீரகமே உற்பத்தி செய்கிறது.
சிறுநீரக செயலிழப்பால் எலும்புகள் பலமிழக்கும். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது 12 மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலை. இதை சாதாரணமாக உடனே கண்டு பிடித்துவிட முடியாது. நோய் முற்றிப்போன நிலையில் கூட அதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாமல் இருப்பதுதான், சிறுநீரகசெயலிழப்பு நோயின் மோசமான தன்மை! ஒரு சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்தாலும் கூட, எஞ்சிய மற்றொன்று தொடர்ந்து செயல்படுவதால் இந்த நிலை.
நோய் முற்றியோருக்கு சிறுநீரகங்களை ஸ்கேன் செய்து பார்த்தால் மாங்காய் அளவு இருக்கவேண்டிய இடத்தில் சுருங்கிப்போன பீன்ஸ் விதை அளவு மட்டுமே சிறுநீரகங்கள் இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரின் அளவுக்கேற்ப ஊட்டச்சத்து மிக்க பால், சூப், பாயசம் போன்ற திரவங்களாக குடிக்க முயற்சி செய்யுங்கள். டீ, காப்பி, குளிர்பானங்கள் வேண்டாமே. தாகமான நேரத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி சப்பலாம், அல்லது குளிர்ந்த நீரை வாயில்விட்டு கொப்பளித்து துப்பி விடவேண்டும், விழுங்கக் கூடாது.
* மாத்திரை-மருந்துகளை குறைந்த நீரில் சாப்பிடுங்கள். சூடான உணவு திரவங்களை தவிர்க்கவும். உடம்பை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும். நிரந்தர சிறுநீரக செயலிழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகதான் ஏற்படுகிறது.
* ஆரம்பநிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம். காலம் கடந்தபிறகு கண்டறிந்தால், மருத்ததுவரால்கூட கிட்னி பாதிப்பை சரிசெய்ய முடியாது.

 

 

பானிபூரி

பானிபூரி
தேவையானவை:
பூரி- 1 பாக்கெட்
சன்னா- 50 கிராம்
கொத்தமல்லி- சிறிதளவு
வெங்காயம்-2
ரசம் செய்ய:-
தண்ணீர் – ஒரு கப்
புளி- நெல்லிகாய் அளவு
ஜெல்ஜீர் பவுடர்- சிறிதளவு
எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
சுகர்- அரை ஸ்பூன்
ரெட்சில்லி பவுடர்- சிறிதளவு
அமெச்சூர் பவுடர்-சிறிதளவு
செய்முறை:
சன்னாவை நன்கு வேக வைத்து தோலுரித்து உப்பு தூவி நன்கு மசித்துக்கொள்ளவும்
வெங்காயம்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைக்கவும்
தண்ணீரில் புளியை கால் மணி நேரம் ஊற வைத்து பின் கரைக்கவும்.
அத்துடன் மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு கப்பில் வைக்கவும்
பூரியின் மேல் துளையிட்டு சிறிதளவு சன்னா, வெங்காயம், கொத்தமல்லி, தேவைக்கு ரசம் ஊற்றி சாப்பிட கொடுக்கலாம்.
Note:
பரிமாறும் போது தட்டில் ரசம், கொத்தமல்லி,வெங்காயம், சன்னா, பூரி ஆகியவற்றை தனிதனியாக வைத்து பரிமாறவும்

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன்  (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும்.
வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது.

ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.
கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்

 

Monday, 20 July 2015

ரசப்பொடி

ரசப்பொடி

தேவையானவை:
1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த  கறிவேப்பிலை தேவையான அளவு
8. கடுகு-2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நல்ல  வெய்யிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.
மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அறைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.
வீட்டிலேயே  குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.
மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.
இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாஸனையாகவும் இருக்கும்

 

ஆட்டுக் குடல் குழம்பு

ஆட்டுக் குடல் குழம்பு

 

  • குடல் – ஒன்று
  • வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 3
  • பச்சைமிளகாய் – 4
  • பூண்டு – 8 பல்
  • இஞ்சி – அரை இன்ச் அளவு
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  • மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
  • மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி
  • தேங்காய் – அரை மூடி
  • புளி – பாக்களவு
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பட்டை – ஒன்று
  • கிராம்பு – ஒன்று
  • இலை – சிறிது
  • கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
  • குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு  அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும்.
  • சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம்.
  • சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில் போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன் இறக்கவும்

 

Sunday, 19 July 2015

பாதாம் ஹல்வா;-

பாதாம் ஹல்வா;-

தேவையானவை:-


பாதாம் பருப்பு – 100 கி


ஜீனி – 200 கி


நெய் – 20 கி


பால் – 1 கரண்டி


குங்குமப்பூ – சிறிது.


பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் – 1 சிட்டிகை.



செய்முறை :-


பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.

சிக்கன் முட்டை பிரியாணி

சிக்கன் முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி – அரை கிலோ (4 டம்ளர்)
சிக்கன் – 300 கிராம்
முட்டை – 3
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 5
தேங்காய் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 6
சோம்பு – அரை தேக்கரண்டி
தயிர் – அரை கப்
பட்டை – சிறிது
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
ப்ரிஞ்சி இலை – சிறிது
புதினா – அரை கட்டு
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
முந்திரி – 8
எண்ணெய் – கால் கப்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து சிறிது தயிர் சேர்த்து பிசறி வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் 4 பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.
சோம்பு, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பாதி பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், பாதி கொத்தமல்லித் தழை, பாதி புதினா, 2 பச்சை மிளகாய் மற்றும் முந்திரி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் பாதி நெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் மீதமுள்ள கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
சிக்கன் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
முட்டை பொடிப் பொடியாக ஆகும் வரை நன்கு கிளறவும்.
பிறகு அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்துக் கிளறவும்.
அரிசியிலுள்ள ஈரப்பதம் நன்கு குறைந்ததும் 8 டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி, நன்கு கொதி வந்ததும் மூடி போட்டு வேக வைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும், உப்பு சேர்த்துக் கிளறி தம்மில் போடவும். (தம்மில் போட தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி வைத்து வெயிட் வைக்கவும்).
10 நிமிடங்கள் கழித்து திறந்து மீதி நெய் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான சிக்கன் முட்டை பிரியாணி தயார்.

Saturday, 18 July 2015

நவதானிய கொழுக்கட்டை

நவதானிய கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :
தானிய மாவு – 1 கப்
உருண்டை வெல்லம் – அரை கப்
தேங்காய் – அரை மூடி
நெய் -1 டீஸ்பூன்
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை :
• கோதுமை, கடலை, பச்சை பயறு, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், சிவப்பரிசி, கொள்ளு ஆகிய தானியங்களைச் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றைக் கழுவி, காயவைத்து வறுக்கவும். அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
• இந்த மாவிலிருந்து 1 கப் எடுத்து, அதனுடன் தூளாக்கிய உருண்டை வெல்லத்தைச் சேர்த்து, நீர் விட்டு நன்றாகப் பிசையவும்.
• தேங்காயைத் துருவி, சிறிது நெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்கவும்.
• பிசைந்த மாவுடன் இதைக் கலந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
• சத்து நிறைந்த இந்தக் கொழுக்கட்டையைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 

Thursday, 16 July 2015

முந்திரி சிக்கன் கிரேவி

முந்திரி சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 15 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை தயிர் – 1 டீஸ்பூன் பால் – 2 டீஸ்பூன் எலுமிச்சை – பாதி கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு… முந்திரி – 8 மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் கசகசா – 1/4 டீஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 4 புதினா – சிறிது

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும். பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!

Monday, 13 July 2015

கோதுமைமாவு குழிப்பணியாரம்

கோதுமைமாவு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பட்டாணி – கால் கப்
மிளகாய்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:  
உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.
* உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
* கோதுமை மாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
* உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்

 

Sunday, 12 July 2015

கார தோசை

கார தோசை

பச்சரிசி – 1 /2 கப்
துவரம்பருப்பு – 1 /4 கப்
தேங்காய் – 1 /2 மூடி
வரமிளகாய் – 4
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 10
உப்பு – 1 /2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை
அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும், தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.

அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவதில்லையே... ஏன்?

அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவதில்லையே... ஏன்?

வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில், வாஸ்து புருஷனும் உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (திசைகளிலும்) திக் பாலகர்கள் உண்டு. எண்ணற்ற இறையுருவங்களைக் கொண்ட பூஜையறையுடன் திகழும் வீடு, கோயிலுக்குச் சமம்!
கடவுளை வழிபடுவதுடன், அவருடன் சேர்ந்து வாழ்கிறோம். கடவுள் இருப்பிடமான வீட்டை, அனுதினமும் காலையில் சுத்தம் செய்து வாசலில் கோலம் போட வேண்டும். இது வழிபாட்டில் ஒன்று. பசுஞ்சாணியால் சுத்தம் செய்து கோலம் போட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம் (கோமயேனோபலிப்ய, ரங்கவல்யாத்யலம் கிருத்ய).
கோலத்துக்கு ரங்கவல்லீ என்று பெயர். வட நாட்டவர் அதை ரங்கோலி என்பர். வீட்டுக்குள் உறைந்திருக்கும் இறை பூஜையின் ஆரம்பமே கோலம்தான்! அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் ஆசை வந்த பிறகு, குடியிருக்கும் வீட்டை (ஃபிளாட்), தங்கும் விடுதிகளுக்கு (போர்டிங் அன்டு லாட்ஜிங்) ஒப்பாகவே பார்க்கிறோம். வீட்டில் மிளிரும் தெய்வீகத்தை மறந்து விட்டோம்.
அமாவாசை- முன்னோர் ஆராதனை நாள். அது தினம் தினம் வராது. பூஜை என்பது தினம் தினம் உண்டு. இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும். அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவதை தள்ளிப்போட வேண்டும். இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் பெருமை!

சுறாக்கறி செய்வது எப்படி?

சுறாக்கறி செய்வது எப்படி?

சுறாக்கறி 1.500 கிராம் சுறா. 2. 50 கிராம் வெங்காயம் 3. 4 மிளகாய். 4. 4 உள்ளி பல் 5.தாளியச்சாமான் வெந்தயம்,கடுகு,பெரும்சீரகம்,கறிவேப்பிலை, உழுந்து அனைத்து மிகச்சிறியளவில். 6.நல்லெண்ணை தேவையான அளவு. 7.உப்பு தேவைக்கு ஏற்ப்ப.8.கறிக்கு மிளகாயத்தூள் இது கொலண்ட் பண்முக.ஒன்றியத்தின் தயாரிப்பில் பணிப்புலத்தின் தயாரிப்பாகும் 2 தேக்கறண்டி போதுமானதாகும். 9.தேசிக்காய் பாதி, 10.தேங்காய்ப்பால் அவரவர் கொளுப்புக்கு ஏற்றாற்போல். செய்முறை. ஒரு நன்றாக கழுவிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பின் நல்லெண்ணையை விடவும். எண்ணை சூடானபின் அதில் தாளியத்துக்குரிய அனைத்தையும் போட்டு தாளிக்கவும்.எனி வெட்டிய வெங்காயத்தையும்,மிளகாயையும் போட்டு தாளிக்கவும்.ஓரளவு சிவந்துவர வெட்டிவைத்த சுறாவையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விடவும். எனி அடுப்பின் வேகத்தை தணித்து மூடிவிடவும் ஒரு 5,7 நிமிடம். எனி அளவான உப்பை போட்டு மூடிவிடவும் 1 நிமிடம். மிளகாய்த்தூளைப்போட்டு கிளறியபின் தேங்காய்ப்பாலையும்விட்டு கிளறிவிட்டபின் மூடி தூள் அவியவேண்டும்.தண்ணீர் தேவையானால் விடலாம்.சிறிது நேரம் அடுப்பை அணைத்து மிகுதிப்பாலை விடவும். சிறிதாக கருவேப்பிலை நறுக்கி போட்டு மூடி விடவும்.கறி வெப்பம் குறைந்தபின் தேசிக்ய்புளியை விடவும்.
சுறாவறை 1.250 கிராம் சுறா. 2. சிவப்பு வெங்காயம் 50 கிராம் சிறிய துண்டுகளாக்கியது. 3.மிளகாய் 2 சிறிதாய் நறுக்கியது. 4. துருவிய தேங்காய்பூ (பாதித்தேங்காய்).5.தாளியச்சாமான்கள்வெந்தயம்,கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலை, உழுந்து. 6.உள்ளி அளவாய்.7.கறிக்கு மிளகாயத்தூள் இது கொலண்ட் பண்முக ஒன்றியத்தின் தயாரிப்பில் பணிப்புலத்தின் தயாரிப்பாகும் 2 தேக்கறண்டி போதுமானதாகும். செய்முறை. சுறாவை உப்பு போட்டு அவித்து எடுக்கவேண்டும். அவித்தசுறா,தேங்காய்பூ.மிளகாய்த்தூள் எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து வைக்கவும். எனி ஒரு தாச்சியை அடுப்பில் வைத்து அளவான சூட்டில் நல்லெண்ணையை விடவும். அதில் தாளியச்சாமான்களை இட்டு தாளிக்கும்போதே வெங்காயம் மிளகாய் உள்ளி போட்டு வதக்கவும்.வதங்கிபின் பிசைந்து வைத்த சுறாவை போட்டு நன்கு வறுக்கவும்.இதை ஒரு 5 நிமிடம் வறுத்தால் போதுமானது. இந்த உணவு பரிமாற சோறு,புட்டுடன் சாப்பிட சிறந்தது.

 

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒன்று தான். ஆனால் அதில் ஒரு வேறுபாடு உள்ளது.
அது என்னவெனில் ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். அதாவது மூன்று பெரிய கேரட் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெரிய கேரட்டுகளை யாராலும் சாப்பிட முடியாது. ஆனால் ஒரு கப் கேரட் ஜூஸை ஒரே நேரத்தில் குடிக்க முடியும். இதனால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.
கேரட் சாப்பிடுவதற்கு பதிலாக, கேரட்டை ஜூஸ் செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இப்போது தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!
பார்வை மேம்படும் :-
தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும்.
இரத்த சர்க்கரை அளவு சீராகும் :-
கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
புற்றுநோய் தடுக்கப்படும் :-
கேரட் ஜூஸில் கரோட்டீனாய்டு வளமாக நிறைந்துள்ளது. கரோட்டீனாய்டு நிறைந்த உணவுப் பொருளை அதிகம் எடுத்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வருவது நல்ல வழியாகும்.
உலர்ந்த சருமத்திற்கு நல்லது :-
வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் சருமம் அதிகம் வறட்சியடைவதோடு, நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. கேரட்டில் இந்த வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம்.
செரிமானம் மேம்படும் :-
உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரட் ஜூஸ் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
நுரையீரல் ஆரோக்கியம் :-
கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளதால், அதனை ஜூஸ் போட்டு தினமும் குடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, சிகரெட் பிடித்தோ அல்லது சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தோ நுரையீரலில் படிந்த நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
புதிய தாய்மார்களுக்கு நல்லது :-
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

Saturday, 11 July 2015

நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.

கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.

சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.

இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.

பரிசோதனைகள் என்ன?

சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம்.

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!
இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்று விடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில் மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
எவ்வாறு செய்வது:
ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல
வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார். எவ்வாறு வேலை செய்கிறது:
காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும பழை நிலைக்கு கொண்டு வருவதாக கூறுகிறார்

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.
* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.
* இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.
* அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
* கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.
மாதவிலக்கு வலி குறைய இய‌ற்கை வைத்தியம் ;-
++++++++++++++++++++++++++++++++++++++++++++
முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து ‘சூப்’ போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்
* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா… பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போய்விடுவார்கள் அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்…நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, பாட்டி சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா… எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.
வெள்ளைப்படுதல் சரியாக:
ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா… வெள்ளைப்படுதல் வராது.
வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா… நல்ல குணம் கிடைக்கும்.
தாமதமான மாதவிடாய்க்கு:
சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க… ஒழுங்கா மாதவிடாய் வரும்.
மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.
சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா… மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.
கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:
மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா… பெரும்பாடு தீரும்.
ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.
கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.
தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.
இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
சாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனோபலமும் தைரியமும் கட்டாயம் தேவை என்பதை மறந்துவிடாதே !

Friday, 10 July 2015

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்!

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்!
 
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே.. உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

Thursday, 9 July 2015

சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்.

சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... 
நீரை. மகேந்திரன்

சொந்த வீடு... சொல்லும்போதே சுகமாய் இருக்கிறதல்லவா! பெருநகரங்களின் சந்துபொந்துகளில் நடையாய் நடந்து... நாயாய் அலைந்து... புரோக்கர்களுக்கு சுளையாய் கமிஷனைக் கொடுத்து புறாக் கூண்டு மாதிரி இருக்கும் வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நடுத்தரவாசி ஒவ்வொருத்தருக்குள்ளும் தவிர்க்கவே முடியாத அழகான கனவாக இருப்பது சொந்த வீடு!
'எப்படியாவது, கடன்பட்டாவது ஒரு வீட்டைக் கட்டி முடிச்சிடணுங்க...’ என்று அலுப்பாய் சொல்லும் நாற்பத்தைந்து, ஐம்பது வயது சராசரி சம்பளதாரிகள் இங்கே ஏராளம்!
இன்றைக்கு லகரங்களில் சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இளைஞர்கள் பலரும் பொறுப்பாக சொந்த வீட்டை வாங்கிய பிறகுதான் கல்யாணமே செய்துகொள்கிறார்கள். பெரிய அளவில் சம்பாத்தியம், அடுத்ததாக சொந்தமாக ஒரு சூப்பர் மாடர்ன் வீடு... என்பது இன்றைய ஹைடெக் இளைஞர்களின் கனவு.
சாதாரண வருமானக்காரர் என்றாலும், கூடுதல் சம்பளக்காரர் என்றாலும் பொதுவாக எல்லோருக்குமே வீடு குறித்த ஓர் அழகிய சித்திரம் இருக்கத்தான் செய்கிறது.
ஓய்வு, நிம்மதி, உத்தரவாதமான வாழ்க்கை, பாதுகாப்பு... இப்படி ஒரு மனிதனுக்கு ஒட்டுமொத்தமாய் இருக்கும் ஓர் உருவகம்தான் வீடு. ஒரு குடும்பம் என்கிற அமைப்பின் முக்கியமான விஷயமே ஒரு வீடுதானே!
மனிதர்கள் வீடுகளை நேசிப்பதை நிறுத்தி விட்டால் அமைதி என்பதே இருக்காது என்கிறார்கள் ஞானிகள். வீட்டின் நான்கு சுவர்கள்தான் நமது மனிதர்களுக்கு நிம்மதி. அப்படித்தான் வீடும் நம்மை வைத்திருக்கிறது. வீடு கிட்டத்தட்ட பறவையின் கூடு மாதிரி இருக்கிறது. மனிதர்கள் இருக்கும் வீடே அலங்காரமான வீடு. ஆனால், அப்படியான ஒரு சுகானுபவம் எத்தனை பேருக்கு வாய்த்து விடுகிறது?
வீடு ஒரு நரகமாகிவிடுகிறது வாடகைக்கு குடியிருப்பவனுக்கு. குலம், கோத்திரம் தொடங்கி எந்த வேலை, கம்பெனி, சம்பளம் எல்லாவற்றையும் வீட்டு உரிமையாளருக்கு சொல்லவேண்டும். வாடகை, முறைவாசல், தண்ணீர், கரன்ட் பில் என ஏறக்குறைய சம்பளத்தில் பாதியை வீட்டு ஓனர்களிடம் தந்துவிட்டு மாதக் கடைசியில் ஷேர் ஆட்டோவுக்கு சில்லறை காசுகூட இல்லாமல் கடன் வாங்கும் பரிதாபத்துக்குரியவர்கள்தான் நகர மக்கள் தொகையில் முக்கால்வாசிப்பேர்.
அடிக்கடி வீடு மாறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால்தான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் வாடகை வீட்டுக்காரர் ஒவ்வொருவருமே ஏங்கிக்கிடப்பது ஒரு சொந்த வீட்டுக்காகத்தான். 'முடிந்தமட்டிலும் ஒரு சொந்த வீடு இருந்தால் நல்லது; சொந்த வீடுன்னா எந்த தொந்தரவும் இல்லை’ என்பது வாடகை வீட்டுக்காரர்களின் புலம்பல்.
மனோகரனுக்கு 42 வயது. பதினைந்து வருடங்களில் பத்து வீடுகளுக்கு பல்லக்கு தூக்கி அலுத்துப்போனவர் எப்படியாவது சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிவிடவேண்டும் என்று முடிவு கட்டினார்.
மனைவியின் நகைகள், வங்கிக் கடன் மற்றும் இதர சேமிப்புகளையும் போட்டு சமீபத்தில் புறநகரில் அரை கிரவுண்டு மனை வாங்கி 800 சதுர அடியில் ஒரு வீட்டை கட்டி முடித்து கிரஹபிரவேசம் வைத்தார். ஏதோ உலகத்தையே ஜெயித்துவிட்டதைப்போல அப்படியரு சந்தோஷம் அவருக்கு. உண்மையில் சொந்த வீடு கட்டுவது என்பது நடுத்தரவாசிகளுக்கு வாழ்நாளின் பெரும் சாதனையான ஒன்றுதான்.
'அட போங்கப்பா... இருபதாயிரம் சம்பளம் வாங்குற நான் 8,500 ரூபாய் வாடகை கொடுத்துக் கிட்டு இருந்தேன். இப்போ அதை வச்சு கடனை கட்டிட்டுப் போறேன்... எந்த தொல்லையும் இல்ல; வீடும் நமக்கு சொந்தமாயிருதில்லையா...’ என்று கால்மேல் கால்போட்டு நண்பர்களுடன் அவர் பேசுவதைப் பார்க்கும்போது அவருக்கான ஒரு நிம்மதியை அவர் அடைந்துவிட்டதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால், மனோகரனைப்போல எல்லோருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் சொந்த வீடு அமைந்துவிடுகிறதா என்றால், இல்லை. மனோகரன் சொந்த வீட்டுக்காக மனை வாங்க திட்டமிட்டதிலிருந்து அவர் சுமாராக இருநூறு லே-அவுட்களையாவது பார்த்திருப்பார். பஸ் ஏறி போய், சுட்டெரிக்கும் வெயிலில் நடையாய் நடந்து..! எத்தனை பேரிடம் விசாரணை, ஆலோசனை, டாக்குமென்ட்கள் சரியாக இருக்கிறதா என அவர் வி.ஏ.ஓ. அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் என அத்தனை இடங்களுக்கும் பலமுறை அலைந்து... மனை வாங்கி... நல்ல பில்டர் தேடி... மணல் செங்கல் மரம் என ஒவ்வொன்றிலும் நுணுக்கம் பார்த்து... அப்பப்பா, அவர் மெனக்கெட்டுக் கொண்டதைப்போல எத்தனை பேர் மெனக்கெடுகிறார்கள்..?
உதாரணத்திற்கு, சிவானந்தம் கதையைக் கேளுங்களேன். சென்னையில் வேலை பார்க்கும் அவர் மறைமலைநகர் தாண்டி ஒரு மனையை வாங்கினார். 'பக்காவான மனைங்க... முப்பது வருஷம் அனுபவம் இருக்கு; டாக்குமென்ட் இருக்கு; இவர் பேருலதான் வரிக் கட்டிட்டு இருக்காரு; பட்டா மட்டும்தான் இல்லை; ஆனா, கொஞ்சம் செலவு பண்ணினா ஈஸியா வாங்கிடலாம்; லே-அவுட்ல சொல்ற விலையை விட அஞ்சு லட்சம் கம்மியாவே முடிச்சிடலாம்...’ என உடன் வேலை பார்க்கும் ஒருவர் அழைத்துவந்த புரோக்கர் சொன்னதை நம்பி வாங்கினார். எப்படியோ பத்திரப் பதிவு முடிந்து பணத்தையும் கட்டிவிட்டார். மனை வாங்கி மூன்று வருடம் கழித்து, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் வாங்கப் போகும்போதுதான் வில்லங்கமே வெளிச்சத்துக்கு வந்தது.
அவர் வாங்கிய மனையின் பெரும்பகுதி முப்பது வருடத்துக்கு முன் நீரோடையாக இருந்து, பிறகு அரசின் கால்வாய் திட்டத்துக் காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்தது. மனையை விற்பனை செய்த நபர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில், அவருடைய மகன் மீது வழக்குப் போட்டு... ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறது.
இப்படி சிக்கலில் சிக்கி ஆனந்தத்தை இழந்து தவிக்கும் எத்தனையோ சிவானந்தம்கள் இங்கே சொந்த வீட்டு கனவை நெஞ்சில் மட்டுமே சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
சென்னை கொரட்டூரில் வசிக்கும் பன்னீர் செல்வம் 15 வருடங்களுக்கு முன் சென்னைக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து வந்தவர். அப்போது ஓரளவு நல்ல வாடகை வீட்டில் அடிப்படை வசதிகளோடு வாழ்ந்தவர்தான். நாளாவட்டத்தில் வாடகையும் உயர உயர, குழந்தைகளின் படிப்பு செலவும் அதிகரிக்க, பெரிய வீடுகளில் வசித்தவர்கள் தற்போது சிறிய வீடுகள் பார்த்தால்தான் பொருளாதாரம் தாக்குப்பிடிக்க முடிகிறது என்கிறார்.
இவர்களைப் போன்று சொந்த வீட்டுக் கனவை சுமந்துகொண்டிருப்பவர்களா நீங்கள்..? சிக்கலில் சிக்கி மீண்டுவர போராடிக்கொண்டிருப்பவரா நீங்கள்..? அப்படியானால் இந்தத் தொடர் உங்களுக்காகத்தான். இந்தத் தொடர் உங்களை வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாற்றப் போகிறது.
உங்களுக்கு ஒரு கனவு இல்லத்தை உருவாக்கப் போகிறது. உங்கள் சொந்த வீட்டிற்கான மனை வாங்குவது தொடங்கி, வீடு கட்டி குடிபோவது வரை உங்களை வழிநடத்தப் போகிறது. உங்களது தயக்கங்களை உடைத்து கைப்பிடித்து அழைத்துச் செல்லபோகிறது.
எந்த இடத்தில் மனை வாங்குவது, நமது பட்ஜெட் என்ன?, மனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன, பத்திரங்களில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும், ஆவணங்கள் உறுதி செய்வது எப்படி என்பதில் தொடங்கி, வீட்டுக் கடன், வங்கி நடைமுறை, உங்கள் சொந்த வீட்டுக்கான ப்ளான் என ஒவ்வொன்றாக அலசப்போகிறோம்.
வீடு கட்டுவதில் உள்ள நுணுக்கங்கள், வீடு கட்டியவர்கள் சந்தித்த அனுபவங்கள், பில்டர்களின் ஆலோசனைகள், வீடு கட்டுவதற்கு வாங்கவேண்டிய அனுமதிகள் என நமது சொந்த வீட்டுக்காக சந்திக்கவேண்டிய அனைத்து வேலைகளையும் எப்படி செய்வது என்பதை உங்கள் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் சூப்பர் கைடுலைனாக இருக்கப்போகிறது இந்தத் தொடர்!

Wednesday, 8 July 2015

ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமானவைகள்.

ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமானவைகள்.


1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி

ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ், கேழ்வரகு மாவு – தலா ஒரு கப்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கேழ்வரகு மாவு, ஓட்ஸுடன் நெய்யைத் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து சாப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
• கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன்மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லின் மீது நெய் தடவி, ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.
• சுவையான சத்தான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

 

ஓட்ஸ் தேங்காய் தோசை

ஓட்ஸ் தேங்காய் தோசை

அரிசி மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
ஓட்ஸ் பவுடர் – 1 கப்,
தேங்காய் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
மிளகுத் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ஓட்ஸ் பொடி, பச்சை மிளகாய், தேங்காய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தோசைக்கல்லை  அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ்  தேங்காய் தோசை ரெடி!!!

 

குடைமிளகாய் – சீஸ் தோசை

குடைமிளகாய் – சீஸ் தோசை

 

தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப்,
மஞ்சள் குடமிளகாய் – 1
சிவப்பு குடமிளகாய் – 1
பச்சை குடமிளகாய் – 1,
பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா கால் கப்,
துருவிய சீஸ் – கால் கப்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
• குடைமிளகாய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும்.
• பிறகு குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை தோசை மேல் பரவலாக வைத்து, சீஸை மேலாக தூவிவிடவும்
• சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைத்து செய்யவும்).
• ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல்

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல்

 

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்,
நூடுல்ஸ் – ஒரு கப்,
குடமிளகாய் – 1,
கேரட் – 1
வெங்காயம் – 1
பால் – 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து 30 ஊற வைக்கவும்.
• நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், கேரட், குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
• பிறகு அதில் நூடுல்ஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.
• பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும்.
• தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
• பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

முளைக்கீரை சாம்பார்

முளைக்கீரை சாம்பார்

 தேவையான பொருட்கள்:

முளைக்கீரை  –  1 கட்டு
துவரம்பருப்பு – 100 கிராம்
புளி – எலுமிச்சம்பழம் அளவு,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• முளைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• துவரம் பருப்பை கழுவி வேக வைத்து கொள்ளவும்.
• பொடியாக நறுக்கிய முளைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
• புளியை 250 மில்லி தண்ணீர் விட்டுக்
கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
• சிறிது நேரம் கொதித்த உடன் கீரையை சேர்க்கவும்.
• இதனுடன் வேக
வைத்த துவரம்பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்,
பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

மஞ்சளின் மருத்துவ குணம் !!!

மஞ்சளின் மருத்துவ குணம் !!!

 

மஞ்சளின் மருத்துவ குணம் !!!
“மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் ”
நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ‘ஆஸ்டியோபோரசிஸை’ (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக ‘ஆஸ்டியோபோரசிஸ்’ உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘எண்டோக்ரைன் சுரப்பி’ நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். ‘மெனோபாஸ்’ ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.
மஞ்சள் (மூலிகை) மகிமை
மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
மஞ்சளின் வகைகள்:
1. முட்டா மஞ்சள்
2. கஸ்தூரி மஞ்சள்
3. விரலி மஞ்சள்
4. கரிமஞ்சள்
5. காஞ்சிரத்தின மஞ்சள்
6. குரங்கு மஞ்சள்
7. காட்டு மஞ்சள்
8. பலா மஞ்சள்
9. மர மஞ்சள்
10. ஆலப்புழை மஞ்சள்
மஞ்சளின் இயல்புகள்:
முட்டா மஞ்சள்
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.
கஸ்தூரி மஞ்சள்:
இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.
விரலி மஞ்சள்:
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.
மஞ்சளின் பயன்பாடுகள்:
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
*பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
*சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
*உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
*பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
*வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
*இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
*நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
*
2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
*
3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
*
4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
*
5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
*
6. “மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்”.
*
“மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்”.
*
7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்”. தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
*
8. “மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்”
*
9. ” மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்”
10. “மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்”
11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.
மேலும் சில தகவல்கள்:
1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.
4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன