Sunday, 12 July 2015

சுறாக்கறி செய்வது எப்படி?

சுறாக்கறி செய்வது எப்படி?

சுறாக்கறி 1.500 கிராம் சுறா. 2. 50 கிராம் வெங்காயம் 3. 4 மிளகாய். 4. 4 உள்ளி பல் 5.தாளியச்சாமான் வெந்தயம்,கடுகு,பெரும்சீரகம்,கறிவேப்பிலை, உழுந்து அனைத்து மிகச்சிறியளவில். 6.நல்லெண்ணை தேவையான அளவு. 7.உப்பு தேவைக்கு ஏற்ப்ப.8.கறிக்கு மிளகாயத்தூள் இது கொலண்ட் பண்முக.ஒன்றியத்தின் தயாரிப்பில் பணிப்புலத்தின் தயாரிப்பாகும் 2 தேக்கறண்டி போதுமானதாகும். 9.தேசிக்காய் பாதி, 10.தேங்காய்ப்பால் அவரவர் கொளுப்புக்கு ஏற்றாற்போல். செய்முறை. ஒரு நன்றாக கழுவிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பின் நல்லெண்ணையை விடவும். எண்ணை சூடானபின் அதில் தாளியத்துக்குரிய அனைத்தையும் போட்டு தாளிக்கவும்.எனி வெட்டிய வெங்காயத்தையும்,மிளகாயையும் போட்டு தாளிக்கவும்.ஓரளவு சிவந்துவர வெட்டிவைத்த சுறாவையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விடவும். எனி அடுப்பின் வேகத்தை தணித்து மூடிவிடவும் ஒரு 5,7 நிமிடம். எனி அளவான உப்பை போட்டு மூடிவிடவும் 1 நிமிடம். மிளகாய்த்தூளைப்போட்டு கிளறியபின் தேங்காய்ப்பாலையும்விட்டு கிளறிவிட்டபின் மூடி தூள் அவியவேண்டும்.தண்ணீர் தேவையானால் விடலாம்.சிறிது நேரம் அடுப்பை அணைத்து மிகுதிப்பாலை விடவும். சிறிதாக கருவேப்பிலை நறுக்கி போட்டு மூடி விடவும்.கறி வெப்பம் குறைந்தபின் தேசிக்ய்புளியை விடவும்.
சுறாவறை 1.250 கிராம் சுறா. 2. சிவப்பு வெங்காயம் 50 கிராம் சிறிய துண்டுகளாக்கியது. 3.மிளகாய் 2 சிறிதாய் நறுக்கியது. 4. துருவிய தேங்காய்பூ (பாதித்தேங்காய்).5.தாளியச்சாமான்கள்வெந்தயம்,கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலை, உழுந்து. 6.உள்ளி அளவாய்.7.கறிக்கு மிளகாயத்தூள் இது கொலண்ட் பண்முக ஒன்றியத்தின் தயாரிப்பில் பணிப்புலத்தின் தயாரிப்பாகும் 2 தேக்கறண்டி போதுமானதாகும். செய்முறை. சுறாவை உப்பு போட்டு அவித்து எடுக்கவேண்டும். அவித்தசுறா,தேங்காய்பூ.மிளகாய்த்தூள் எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து வைக்கவும். எனி ஒரு தாச்சியை அடுப்பில் வைத்து அளவான சூட்டில் நல்லெண்ணையை விடவும். அதில் தாளியச்சாமான்களை இட்டு தாளிக்கும்போதே வெங்காயம் மிளகாய் உள்ளி போட்டு வதக்கவும்.வதங்கிபின் பிசைந்து வைத்த சுறாவை போட்டு நன்கு வறுக்கவும்.இதை ஒரு 5 நிமிடம் வறுத்தால் போதுமானது. இந்த உணவு பரிமாற சோறு,புட்டுடன் சாப்பிட சிறந்தது.

 

No comments: