வெங்காய கார சட்னி
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 4 (மீடியம் சைஸ்)
தக்காளி – 3 (மீடியம் சைஸ்)
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 7 பல்
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 6
உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் உற்றி உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு (அடுப்பை சிம்மில் வைக்கவும்)
இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்
வெங்காயம் வதங்கியவுடன், பிறகு தக்காளி போட்டு வதக்கவும் (அனைத்தும் பாதி
பதத்திற்கு வதக்கவும்). பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த கலவையை கடாயில் எண்ணெய் உற்றி தாளிக்கவும் பிறகு அந்த கலவையை கலந்து
உப்பு சேர்த்து பரிமாறவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி
No comments:
Post a Comment