Thursday, 26 March 2015

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா?

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா?

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? எதுவுமே பயனளிக்கவில்லையா?
கவலைப்படாதீர்கள், கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது.
அதில் முதன்மையானது தான் எலுமிச்சை. ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்கஸ எலுமிச்சை எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவை பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பொருளாக உள்ளது. அதிலும் இதில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.
கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்ஸ அதற்கு எலுமிச்சையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எலுமிச்சையை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தை விரைவில் வெண்மையாக்கலாம்.
டிப்ஸ் 1 எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
டிப்ஸ் 2 எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
டிப்ஸ் 3 எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
டிப்ஸ் 4 ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
டிப்ஸ் 5 பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து,அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.
டிப்ஸ் 6 வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
டிப்ஸ் 7 ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.
டிப்ஸ் 8 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்

 

 

 


பாசிப்பயிறு பணியாரம்

பாசிப்பயிறு  பணியாரம்
 
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு – 3/4 கோப்பை
புளித்த இட்லி / தோசை மாவு – 1 கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் – தேவையான அளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் – தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  • பாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
  • பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • தாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு:
  • மாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.
  • காரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

ஆஸ்துமாவை விரட்டும் தக்காளி

ஆஸ்துமாவை விரட்டும் தக்காளி
****************************************************
தக்காளி இல்லாத சமையலா, அது ருசிக்காது என்பது பலரது கருத்து. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை என்பதும் உண்மை. சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது இந்த தக்காளி. இது ஒரு காய்கறி செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இது அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் தென் அமெரிக்கா. குறிப்பாக பெரு, மெக்சிகோவில் இருந்து அர்ஜெண்டினா வரையான பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
மெக்சிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காக தக்காளியை பயிரிட்டனர். அந்நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்கு கொண்டு வந்தனர். நாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் கடன் வாங்கி இதை டாமாடே என்று அழைத்தனர். விரைவில், இத்தாலி, வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர்.
அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்கு தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்டத்தில் அலங்கார செடியாக வளர்க்கப்பட்டது. இரவில் மலர்கிற ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக இது இருந்தது. என்றாலும், அதன் பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லைஎன்பது நிரூபிக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தாலியர்கள் அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்) என்றழைத்தனர்.
ஆங்கிலேயர் முதலில் அதை டொமாட்டே என்றும் பின்னர் அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர். ஆனால் லவ் ஆப்பிள் என்ற பெயரும் அதிக பிரபலமானது. ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட தக்காளி, 19ம் நூற்றாண்டில் அவ்விடத்தின் முக்கிய உணவாக ஆனது.
தக்காளியின் பயன்கள்
தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தக்காளி சாறு
நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றை குணமாக்கவும் தக்காளி சாறு சிறந்ததாகும். இந்நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
உடல் பருமன் குறையும்
100 கிராம் தக்காளிப் பழத்தில் 20 கலோரி தான் உள்ளது. எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்ப துதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். தக்காளி உடலில் உள்ள நோய்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் தற்போது விரும்பி பருகப்படும் பானங்களுள் தக்காளி சாறும் ஒன்றாய் இருக்கிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பார்வை கோளாறு நீங்கும்
இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். தக்காளி செடியின் இலைகளை பறித்த உடன் 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும். செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகர் கலந்து மார்பு மீது வைத்துக் கட்டி வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
காய்ச்சல், பித்த வாந்தியை போக்கும்
காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியவை தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும்.
ஆஸ்துமாவை குணமாக்கும்
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்க போகும்போது ஒரு டம்ளர் தக்காளி சாறுடன் அதில் தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு தக்காளி சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த பயனை அளிக்கும் சிகிச்சை முறையாகும்.
சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகி வருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாக சாப்பிட்டாலும் சாறாக சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; சாப்பிட்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும். இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்து சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதையும் இது ஜீரணிக்க செய்துவிடும். அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும்.
எனவே உணவைக் குறவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியை தக்காளி ரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாக சாப்பிட முடியாது. பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லது. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்பு சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்து விடுகிறது. இதனால் ரத்த சோகை நோயாளிகள் விரைவில் குணமாவார்கள். இவர்கள் தக்காளி சாறு இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அருந்த வேண்டும். ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறு போதும்.
பார்வை நரம்புகள் பலம் பெறும்
வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு விட்டமின் ஏ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வை கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளி பழத்தையும், தக்காளி சாற்றையும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

"முட்டை கறி"

"முட்டை கறி"

 தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, (இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த விழுது) , (முட்டை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்த கரைசல்), மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, சிக்கன் 65 மசாலா, உப்பு
"முட்டை கறி"- செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு பொன்நிறமாக மாறும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த விழுது, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் 65 மசாலா, உப்பு, தண்ணிர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா சுண்டி வரும் போது அடித்து வைத்துள்ள முட்டை சேர்த்து கலக்கவும்.
2. இதற்குள் சப்பாத்தியை துண்டாக்கி, முட்டைக் கலவையோடு சேர்த்து வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி பறிமாரவும்.
இப்பொழுது சுவையான "முட்டை கறி" ரெடி

Wednesday, 25 March 2015

பாதாம் அல்வா

பாதாம் அல்வா

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும்.

* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும்.

* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.

* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா– பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.

* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.

Tuesday, 24 March 2015

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?
கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.
சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.
அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்
நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே .

குழந்தையர் வளர்ப்பு :-

குழந்தையர் வளர்ப்பு :-

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.
* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

முட்டை வடை

முட்டை வடை 

தேவையான பொருட்கள் :
முட்டை, பாதி வேகவைத்த அரிசி, சோம்பு, குழம்பு மிளகாய் தூள், இஞ்சி - பூண்டு விழுது,வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய்
செய்முறை :
1. பாதி வேகவைத்த அரிசி, சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அறைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
2. இதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குழம்பு மிளகாய் தூள், முட்டை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
3. வாணலியில் பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை குழி கரண்டியில் எடுத்து ஊற்றி பொறித்து எடுக்கவும்.
இப்போது சுவையான முட்டை வடை தயார்.

கை நிறைய மருந்துகள் எடுப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்..!

கை நிறைய மருந்துகள் எடுப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்..!

  • இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டுள்ளேன். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.
  • ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :
  • அம்மோனியம் சல்பேட் - வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்
  • பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை
  • விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்
  • லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு
  • எம்.எஸ்.ஜி - பிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை
  • அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா
  • ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோய்
  • பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி
  • டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு
  • ஜெலடின் - ஒவ்வாமை
  • ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி - ஒவ்வாமை
  • பாதரசம் - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்
  • நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்
  • பினால் (கார்பாலிக் அமிலம்)/
  • எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் - செல்களை பாதிக்கும் விஷம்
  • குளுதரால்டிஹைட் - பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்
  • போரக்ஸ் - எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்...!
  • இந்த விஷங்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை...

Goan Fish Biryani recipe:

Goan Fish Biryani recipe:


The most unique thing about this fish biryani is the addition of grated coconut and black kokum. Though red kokum is used traditionally, I have used black kokum or kudampuli in this one. Medium sized fish like small seer fish or mackerel is best suited for this biryani preparation. 

Ingredients:
1. For the rice:
• 4 cups, long grained basmati rice; soaked
• 3 green cardamom
• 1 black cardamom
• 3 cloves
• 4 peppercorns
• 1 cinnamon stick
• 1 star anise
• 1 dry bay leaf
• 2 slit green chillies
• Salt, to season

2. For the fish:
• 8 seer fish (small) pieces
• ½ tsp turmeric powder
• Juice of ½ lemon
• Salt, to season

3. For the masala:
• 3 medium onions, finely sliced
• 2 tbsp fresh ginger garlic paste
• 2 large ripe tomatoes, finely sliced
• ½ cup freshly grated coconut
• ¾ tsp turmeric powder
• 1 ½ tsp red chilli powder (adjust to heat preference)
• Salt, to season
• 3 dry red chilli (long variety)
• 2 small black kokum (use 3-4 if using red kokum)
• 1 tsp mustard seeds

4. 3 tbsp vegetable oil
5. 4 tbsp ghee/clarified butter
6. 2 cups fresh coriander leaves, finely chopped
7. ½ cup fresh mint leaves, finely chopped
8. 1 lemon


Method:
To prepare the rice:
• Bring 9 cups of water to boil and add the whole spices along with salt and green chillies. Drain the soaked rice and add it to the boiling water. Cook till the rice is done 80% and drain. You can either leave the whole spices and chillies in the rice itself or remove it after draining. Keeping the spices in improves flavour of the overall dish.
To prepare the fish:
• Marinate the fish pieces in a paste of turmeric powder, lemon juice and salt for at least 30 minutes. In a large pan, heat the oil and shallow fry the fish pieces till 75% done. Keep aside.
To prepare the masala:
• In the same pan in which the fish was fried, add 2 tbsp ghee. Crackle the mustard seeds and add the dry red chillies.
• Add the sliced onions and sauté on medium heat for 3-4 minutes.
• Then add the ginger garlic paste and continue to sauté till the onions turn light brown.
• Next add the grated coconut and kokum pieces; sauté for another 3-4 minutes.
• Add the sliced tomatoes and continue to sauté till the tomatoes turn mushy.
• Add the turmeric and red chilli powder; season with salt. Saute for 2-3 minutes on low heat.
• Add ½ cup water and sauté on medium heat till the whole masala comes together.
• Add the fried fish pieces to this and coat well with masala. Cook covered for 2-3 minutes and remove from flame. Discard the kokum pieces.
To assemble the biryani:
• In a large pot, heat 2 tbsp ghee and add a layer of rice. Next add a layer of the fish with masala; sprinkle with coriander and mint leaves.
• Continue to layer and finish off with a layer of rice and herbs on top.
• Cover and cook on very low heat for 10 minutes.
• Serve warm with vegetable raita.

கை கழுவுவது:

கை கழுவுவது:

  • ஒவ்வொருவரிடத்தும் "கைகழுவ' வேண்டிய விஷயங்கள் எனப் பல இருக்கலாம். ஆனால் எவருமே "கைகழுவக்கூடாத' விஷயங்களில் ஒன்றுதான் "கை கழுவுவது'!
  • கை கழுவாமல் சாப்பிட்டால் அப்படியென்ன கைமீறிப் போய்விடும் எனக் கேள்வி எழலாம். உண்மைதான். கைகழுவாமல் சாப்பிட்டால் கண்டிப்பாக கைமீறித்தான் போகின்றனவாம், நோய் பரப்பும் கிருமிகள், நமது வாய்க்குள்.
  • அப்புறம், அவை கிடைக்கும் "வாய்'ப்புகளைப் பயன்படுத்தி குடலைப் பதம்பார்த்து "பின்விளைவுகளை' ஏற்படுத்திவிடுகின்றனவாம்!
  • சரி, கைகளைக் கழுவிவிட்டால் நோய்களைத் தடுக்க முடியுமா என சந்தேகம் ஏற்படலாம். ஆம், என்கின்றனர் மருத்துவர்கள்.
  • எண்ணற்ற பொருள்களை நம்மையறியாமல் நாம் தொடுவதால் கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் கைகளில் தங்குகின்றன. அவற்றைக் கழுவி நீக்காமல் உணவுப் பொருள்களை எடுத்து உள்கொள்வதால் நாம் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம். எனவே, கைகழுவுதல் மிக முக்கியம்.
  • பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி-மயக்கம், குடற்புண் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு கைகளைச் சுத்தப்படுத்தாததே காரணம்.
  • அதற்காக "கையை வைச்சுக்கிட்டு சும்மா இருடா' என அவர்களை அதட்டி, மிரட்டி உத்தரவு போடாமல், விளையாடச் சொல்லி ஆர்வமூட்டி, அதன் பிறகு கைகழுவக் கற்றுத்தரலாம். குறிப்பாக, சாப்பிடும் முன் கண்டிப்பாக கையைக் கழுவ சொல்லித்தர வேண்டும்.
  • ஆனால், கைகழுவாமல் சாப்பிடுவதில் பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினருமே ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.
  • ஏனெனில், நூறு பேரில் முப்பத்து மூன்று பேர் கைகழுவாமல்தான் சாப்பிடுவதாகவும், அதனால் வயிற்றுக்கோளாறால் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • மண்ணில் விளையாடிவிட்டு அப்படியே சாப்பிட உட்கார்ந்தால், வயிற்றுக்கோளாறு நிச்சயம். அதிகமான மக்கள் நடமாடுவதால் கடற்கரையோர, ஆற்றங்கரையோர மணல்களில் நமது வயிற்றைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கின்றன.
  • எனவே, மணல் வெளியில் கோலமிட்டு மகிழுவோர் சாப்பிடும் முன் மறக்காமல் கைகழுவ வேண்டும்.
  • கை சுத்தமாக வேண்டுமானால் மூன்று அல்லது நான்கு முறை கைகளை நீரில் முக்கி எடுத்தாலே போதும். அதிலேயே 95 சதவீத பாக்டீரியாக்களும், வைரஸ்களும் நீங்கிவிடுகின்றனவாம்.
  • பின்னர், (அதிக ரசாயனக் கலப்பில்லாத) சோப்பு அல்லது கிரீம்கள் போட்டுக் கைகழுவலாம் (நமது நல்வாழ்வுக்காக கிருமிகளுக்குக்கூட "சோப்பு' வேண்டியுள்ளதே!).
  • பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில், வயிற்றுப்போக்கால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் என்றும், உலக அளவில் இறக்கும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 11 சதவீதம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு பாதிப்பால்தான் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் இறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த உயிரிழப்புக்கு சுத்தமின்மை மட்டுமல்ல தரமான குடிநீர் கிடைக்காததும் காரணம்.
  • அவ்வப்போது கைகளைச் சுத்தமாகக் கழுவி சுத்தத்தைப் பராமரிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு பாதிப்பை 45 சதவீத அளவுக்குக் குறைத்துவிட முடியும் என்றும், நிமோனியா பாதிப்பை 50 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • உடல் நோயின்றி இருக்க சுத்தமான கையும், உள்ளம் நோயின்றி இருக்க கைச்சுத்தமும் அவசியம். "கை' சுத்தமாக இல்லையெனில் அனைவருக்குமே பிரச்னைதான். சுத்தமில்லா கையால்தான் நாம் "பிற்போக்கு' பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி "கைகழுவும் தினமாக'க் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, தனியாகக் கைகழுவும் நாம் அன்றைய தினம் மட்டும் கூட்டணி அமைத்து கையைக் கழுவிவிடலாம்!
  • ஆக, "பல்வேறு நோய்களை ஏற்படுத்திவிடுவேன்' என "கை' நம்மை மிரட்டுவதற்கு முன்பு நாமே முந்திக்கொண்டு (கை அழுக்குகளை சுத்தமாகக்) கைகழுவி விடுவதுதான் புத்திசாலித்தனம்!

தக்காளி கொத்தமல்லி சட்னி

தக்காளி கொத்தமல்லி சட்னி
 
தேவையானவை:
தக்காளி-3
வெங்காயம்-1
தேங்காய் துருவல்-1 /2 கப்
சிகப்பு மிளகாய்-3
பூண்டு-1 பல்
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
புளி-சிறிதளவு
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை

செய்முறை:
*தக்காளி,வெங்காயம்,கொத்தமல்லிதழை,தேங்காயை தனி தனியே வதக்கி கொள்ளவும் ,மிளகாய் , உளுந்தை வருதேடுகவும் .
*உளுந்து தவிர அணைத்து பொருட்களையும் ,சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும் ,பின்பு உளுந்தை சேர்த்து 2 சுற்று சுற்றி எடுத்து,தாளித்து கொட்டவும்.

வெண்ணை பிஸ்கட்

வெண்ணை பிஸ்கட்
தேவையானவை:
மைதா மாவு-1 1/2 கப்
வெண்ணை-1/2 கப்
சர்க்கரை-3/4 கப்
முட்டை-1
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்,அதனுடன் சர்க்கரை,வெண்ணையை சேர்த்து கலக்கவும்.
*பின்பு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிண்டவும்,இப்பொது மாவு சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து,நடுவில் லேசாக அழுத்தி,பேகிங் ட்ரேயில் நன்கு இடைவெளி விட்டு வைக்கவும்.
*350 F ப்ரிஹீட் செய்த ஓவன் -ல் 13-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
*ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் பிஸ்கட்களை எடுத்து ஆறவிட்டு ,காற்று புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.

சாம்பார் சாதம்

சாம்பார் சாதம்

தேவையானவை:
அரிசி-1 கப்
துவரம் பருப்பு-1 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
சாம்பார் பொடி-1 ஸ்பூன்
முருங்கைக்காய்
கத்தரிக்காய்
உருளைக்கிழங்கு
பச்சைபட்டாணி
புளிதண்ணீர்-1 /2 கப்

வறுத்து பொடிக்க:
சிகப்பு மிளகாய்-6
கொத்தமல்லிவிதை -1 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
தேங்காய் துருவல்-3 ஸ்பூன்

தாளிக்க:
நெய் -2 ஸ்பூன்
கடுகு
கருவேப்பில்லை
கத்தமல்லிதழை

செய்முறை:
*குக்கரில் அறிந்த காய்கள்,புளிதண்ணீர்,சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
*பின்பு அதில் வெங்காயம் ,தக்காளி பொடித்து வைத்துள்ள பொடி,அரிசி,பருப்பு,9 கப் தண்ணீர் சேர்த்து ,குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.
*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டவும் .

கும்பகோணம் கொத்சு / Kumbakonam Gothsu

கும்பகோணம் கொத்சு / Kumbakonam Gothsu 

தேவையான பொருட்கள் :-
துவரம் பருப்பு : 100 grms
புளி : 1 நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி : 1 ½ டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவைகேற்ப
கடுகு : சிறிதளவு
சிறிய வெங்காயம் : 100 grms
தக்காளி : 2 (துண்டுகளாக நறுக்கவும்)
பரங்கிக்காய் : சிறிய துண்டு பொடியாக நறுக்கவும் (1 cup)
கத்தரிக்காய் : இரண்டு பொடியாக நறுக்கவும்
வறுத்து அரைக்க :- (இரண்டு நிமிடும் வறுத்து அரைத்து கொள்ளவும்)
கடலை பருப்பு : ஒரு டி ஸ்பூன்
தனியா : ஒரு டி ஸ்பூன்
தேங்காய் துருவல் : இரண்டு டி ஸ்பூன்
செய்முறை :-
  • துவரம் பருப்புடன் வெங்காயம், நறுக்கிய காய்கள் மற்றும் தக்காளி சேர்த்து குக்கரில் தண்ணீர் விட்டு மூன்று விசில் கொடுத்து இறக்கவும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து சாம்பார் பொடி உப்பு சேர்த்து வெந்த கலவையுடன் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதி வந்தவுடன் இறக்கி கடுகை தாளித்து பரிமாறவும்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Kumbakonam Gothsu
Ingredients :-

Toor dal : 100 grams
Tamarind : 1 GOOSEBERRY SIZED BALL
Sambar powder : 1 ½ table spoon
Salt : To taste
Mustard seeds : 1 tea spoon
Shallots (small onions/sambar onion) : 100 grams
Tomato (finely chopped) : 2 Nos.
Sweet pumpkin (chopped into small pieces) : 1 cup
Brinjal (finely chopped) : 2 Nos.

Masala (to roast and grind)

Bengal gram dal : 1 tea spoon
Dhaniya : 1 tea spoon
Coconut (grated) : 2 tablespoons

Method:-

  • Dry roast the ingredients given for masala above. Once cool, grind to a fine paste with little water and keep aside
  • In a pressure cooker, add toor dal, onion, chopped vegetables and tomato and cook for 3 whistles
  • Soak tamarind in a cup of water. Squeeze and extract the pulp out of it.
  • To the tamarind pulp, add salt, sambar powder and mix with the pressure cooked dal and vegetables and cook for 3-5 minutes.
  • Add the roast and ground mixture for 2 minutes and remove from flame.
  • In a pan, add a little oil and mustard seeds. Let the mustard seeds splutter and add to the cooked gothsu.
  • Delicious gothsu is ready to serve

தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!

தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!

முருங்கை... நுனி முதல் வேர் வரை மருத்துவப்பயன் மிக்கது என்பதால் இதை பிரம்ம விருட்சம் என்பார்கள்.
முருங்கையில் இரண்டு வகை உண்டு. முருங்கை மற்றும் காட்டு முருங்கை. முதல் வகை முருங்கையில் சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை போன்றவற்றை உண்பதன் மூலம் நோய்கள் நீங்கும். சோற்று முருங்கையின் காயை உண்டால் அது எலும்பினுள் உள்ள பசைக்கு பலம் சேர்க்கும். மஜ்ஜையை அதிகப்படுத்தும். மேலும், கல்லீரலில் பித்தத்தை சுரக்க வைக்கும் இந்த சோற்று முருங்கையின் கீரை எக்காலத்திலும் கிடைக்கக்கூடியது. இதன் கீரையை சமைத்து உண்பதால் கணையத்தில் சமான வாயுவை சுரக்கச்செய்யும். (சமான வாயுவானது பசி, தாகம், செரிமானம், உடல் சூடு ஆகியவற்றை சரி செய்து சமநிலையில் வைக்கக்கூடியது).

அடுத்தது, பனிமுருங்கையில் உள்ள பட்டையை ஐந்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 100 மில்லி பாலில் போட்டு வேக வைத்து இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் எப்படிப்பட்ட நோயால் அவதிப்பட்டு தூக்கம் வராமல் போனாலும் நிம்மதியான தூக்கம் வரும். கோடை முருங்கையின் கீரை, மூட்டுகளில் உள்ள வீக்கங்களை, அதாவது பித்த வாயுவை குணப்படுத்தும். இந்தக் கீரையை கசாயம் வைத்தோ, சாம்பார் வைத்தோ சாப்பிட்டு வந்தால் நீர் போகும். இதனால் வாயுக்கோளாறுகள் விலகுவதோடு பிடிப்புகள் விலகும். இதன் கீரையை உப்புடன் சேர்த்து கசக்கி அரை டீஸ்பூன் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலிகளை குணப்படுத்துவதோடு, பின்நாட்களில் வயிற்று வலிகள் வராமலிருக்கச் செய்யும். இதன் பட்டை 100 கிராம் எடுத்து 20 கிராம் மிளகு, 5 கிராம் சுக்கு சேர்த்து நசுக்கி மாட்டுக்குக் கொடுத்தால் வயிறு உப்புசம், நீர்க்கோழை மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.

நீர் முருங்கையின் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் கால் வலி விலகும். ஜீரணக்கோளாறுகள் விலகுவதோடு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இதன் காயில் உள்ள பருப்பை நெய்விட்டு வறுத்து இடித்துப் பொடியாக்கி சாம்பாரிலோ, ரசத்திலோ அரை டீஸ்பூன் அளவு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மேலும், வாதக்கோளாறு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையுடன், வாதநாராயணன் மற்றும் நச்சு கெட்ட கீரை எனப்படும் லெச்சக்கொட்டை கீரையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சியைப்போக்க மருந்து செய்யும்போது அதில் முருங்கை விதை அல்லது முருங்கைப் பிசின் முக்கிய இடம் வகிக்கிறது. இத்தகைய மருந்துகள் ஆண்களுக்கு வரக்கூடிய ஆண்மைக்குறை, குழந்தைப்பேறின்மை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் போக்கக்கூடியது.

மிகவும் பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்

மிகவும் பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்:

1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்சுவதன் மூலம் தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீ¡¢ல் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீ¡¢ல் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அ¡¢த்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
6. சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்தி¡¢ இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசா¢ ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.
8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
9. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
10. தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
12. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
13. கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
14. சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
15. கபம் நீங்கி உடல் தேற: கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.
16. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
17. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீ¡¢ல் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
18. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்
19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.
20. காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.
* முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது.
* இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும்.
* கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.
* 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும்.
* சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
* இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.
* அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும்.
* இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.
பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்

வெஜிடபிள் பன்னீர்


வெஜிடபிள் பன்னீர் 


தேவையானவை:
பன்னீர் துண்டுகள்-1 கப்
இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி விழுது-1 கப்
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
குடமிளகாய்-1
பச்சைபட்டாணி-சிறிதளவு
காரட்-1
தாளிக்க:
எண்ணை
சீரகம்

செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி சீரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும் ,பின்பு அதில் இஞ்சி பூண்டு,தக்காளி விழுது ,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் நறுக்கிய குடைமிளகாய்,காரட்,பச்சைபட்டாணி ,தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும்,பன்னீர் துண்டுகளை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்

புளி சாதம்

புளி சாதம்

புளி சாதம்

தேவையானவை:
சாதம்-1 கப்
புளி காய்ச்சல் செய்வதற்கு:
புளி கரைசல்-2 கப்
மஞ்சள் பொடி-1 / 2 ஸ்பூன்
நிலக்கடலை -1 /4 கப்
வறுத்து பொடிக்க:
சிகப்பு மிளகாய்-10
கொத்தமல்லி விதை-1 ஸ்பூன்
வெந்தயம்-1 /2 ஸ்பூன்
எள்ளு-1 ஸ்பூன்
தாளிக்க:
நல்லஎண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
சிகப்பு மிளகாய்
கருவேப்பில்லை
பெருகாயம் செய்முறை:
*கடாயில் சிறிது எண்ணை ஊற்றி ,வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை,தனி தனியாக வறுத்து, பொடித்து வைத்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,அதில் புளி கரைசலை ஊற்றி ,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*புளி கரைசல் நன்கு சுண்டியதும் அடுப்பை நிறுத்தி ,பொடித்து வைத்துள்ள பொடி,நிலக்கடலை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
*நன்கு ஆரிய சாதத்தில் தேவையான அளவு புளி காய்ச்சல் ,சிறிது நல்லஎண்ணெய் சேர்த்து கிண்டி பரிமாறவும்.

ஆரோக்கியம் உங்கள் கையில்

ஆரோக்கியம் உங்கள் கையில்

பிரியாணி சமைக்கும்போது, தயிர் அல்லது பால் சேர்க்கக் கூடாது. இதனால் தோல் பிரச்சனைகள் வரக்கூடும். பிரியாணி சாப்பிட்டதும்,
குளிர்பானம் குடித்தால் உடனடியாகச் செரிமானம் ஆகும் என்பது தவறு. பிரியாணி சாப்பிட்ட பின், செரிமானமாக சூடாக இஞ்சி டீ குடிக்கலாம்.
புளிப்புச் சுவையுடன் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது. வைட்டமின் சி பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்க்கக் கூடாது.
மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களுடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக சாப்பிடக் கூடாது. அதிக செரிமான சக்திகொண்டவர்கள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம்.
பிரெட் டோஸ்ட் செய்யும்போது, பிரெட்டை பாலில் நனைத்து, முட்டையில் பிரட்டி டோஸ்ட்செய்து, அதில், காய்கறிக் கலவையை வைத்துக் கொடுக்கின்றனர். இது வயிற்றுக் கோளாறை உருவாக்கும்.
மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.
மது அருந்திய பிறகு அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது. இரண்டு எதிர்வினைகள் உடலில் ஒன்றாக சேரும்போது வேதி மாற்றம் உடலில் நடைபெறும்.

பூசணி இட்லி - இஞ்சிப் பச்சடி

பூசணி இட்லி - இஞ்சிப் பச்சடி 

தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்,
அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.
மருத்துவப் பயன்:
உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.
இஞ்சிப் பச்சடி
தேவையானவை:
இஞ்சி - 100 கிராம்,
புளி - சிறிதளவு,
எலுமிச்சை - 4,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.
மருத்துவப்பயன்:
பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்
புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

சமையல் செய்யும் பொழுது- நமக்கு தெரியாத பல சுலபமான வழிமுறைகள்

  1. சமையல் செய்யும் பொழுது- நமக்கு தெரியாத பல சுலபமான வழிமுறைகள் :
  2. நாம் சமையல் செய்யும் பொழுது நமக்கு தெரிந்தவற்றை மட்டும்தான் செய்வோம். ஆனால் நமக்கு தெரியாத பல சுலபமான வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொண்டாலே நமது வேலை பாதி சுலபமாகிவிடும்.
  3. இதில் உங்களுக்குத் தெரிந்ததும் இருக்கலாம் தெரியாததும் இருக்கலாம். தெரிந்ததை விட்டு விட்டு தெரியாததை எடுத்துக் கொள்ளவும்.
  4. குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.
  5. பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
  6. தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
  7. உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
  8. கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
  9. ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
  10. தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
  11. பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.
  12. வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
  13. சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
  14. சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
  15. இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
  16. தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
    மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
  17. பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
  18. வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
  19. தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
  20. எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
  21. உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
  22. தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
  23. துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
  24. நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்

Monday, 23 March 2015

மூட்டைப் பூச்சிகளை விரட்ட அட்டகாசமான சில வழிகள்!!!

மூட்டைப் பூச்சிகளை விரட்ட அட்டகாசமான சில வழிகள்!!!  
புதினா 
புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆவதில்லை. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும். குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம். மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும். உங்களுக்கு தோதாக இருந்தால், உங்கள் சருமத்தின் மீதும் கொஞ்சம் இலைகளை தேய்த்துக் கொள்ளலாம்.
மிளகாய் பொடி 
சிவப்பு மிளகாய் பொடி சிறந்த மூட்டைப்பூச்சி விரட்டியாக அமைந்துள்ளது. இந்த பொடியை பூச்சிகள் ஒழிந்திருக்கும் இடங்களில் தூவி விடுங்கள்.
லாவெண்டர் 
லாவெண்டர் வாசனை இருக்கும் இடங்களில் மூட்டைப் பூச்சிகளால் வாழ முடிவதில்லை. அதனால் லாவெண்டர் பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள் அல்லது உடைகளின் மீது லாவெண்டர் செடியின் இலைகளை தேய்த்துக் கொள்ளவும்
ரோஸ்மேரி 
லாவெண்டர் போலவே ரோஸ்மேரி வாசனையையும் மூட்டைப்பூச்சிகளால் தாங்கி கொள்ள முடிவதில்லை. ரோஸ்மேரி ஸ்ப்ரேவை பயன்படுத்தியும் மூட்டைப் பூச்சிகளை நீக்கலாம்.

யூகலிப்டஸ்
 மருத்துவ குணங்கள் போக, மூட்டைப்பூச்சிகளை நீக்கும் குணங்களையும் யூகலிப்டஸ் கொண்டுள்ளது. தூங்கும் பகுதிகளில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை தெளித்து விடவும். யூகலிப்டஸ் எண்ணெயுடன் சிறிதளவு ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களையும் சேர்த்துக் கொண்டு, அதனை கொண்டும் மூட்டைப்பூச்சிகளை விரட்டலாம்.

பீன்ஸ் இலைகள்
 மூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு தான் பீன்ஸ் இலைகள். பூச்சிகளை விரட்ட பழமையான காலம் முதல் இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போதைய மக்களுக்கு இதன் பயன்கள் தெரிவதில்லை. இந்த இலைகள் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கும் என புதிய ஆராய்ச்சி ஒன்று உறுதி செய்துள்ளது. இந்த இலைகளில் உள்ள ரோமங்கள் இந்த பூச்சிகளை கொல்ல உதவுகிறது.
கருப்பு வால்நட்
 தேநீர் தேநீர் தயார் செய்ய இதவும் கருப்பு வால்நட் மரத்தில் பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தாக்கங்கள் உள்ளதால், மூட்டைப்பூச்சிகள் பிரச்சனையை கையாள இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட கருப்பு வால்நட் மரத்தின் தேநீர் பைகளை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைத்து விடவும். இது மூட்டைப்பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் கொன்று விடும். உங்கள் செல்லப் பிராணிகளுக்கு அருகில் இந்த பைகளை வைக்காதீர்கள்.

டீ ட்ரீ ஸ்ப்ரே 
 டீ ட்ரீ மரத்தின் அதிமுக்கிய எண்ணெய் அதன் நுண்ணுயிர்க் கொல்லி தாக்கங்களுக்காக அறியப்படுபவை. பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற அனைத்து வகையான நுண்ணிய உயிரினங்களை நீக்க இது உதவும். இந்த குணத்தினாலேயே வீட்டில் உள்ள மூட்டைப்பூச்சிகளை விரட்ட இதை பயன்படுத்துகின்றனர். 1 பாட்டில் டீ ட்ரீ அதிமுக்கிய எண்ணெய்யை வாங்கிக் கொண்டு அதில் தண்ணீர் கலந்து நீர்த்து போகச் செய்யவும். இந்த மூலிகை நீரை ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் அடைத்து, அதை உங்கள் வீட்டின் சுவர்கள், படுக்கைகள், அலமாரிகள், திரைகள், ஃபர்னிச்சர்கள், மெத்தைகள், ஆடைகள் மற்றும் அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். ஒரு வாரம் முழுவதும் இதனை தினமும் செய்தால் மூட்டைப்பூச்சிகள் தொல்லைகள் நீங்கும்.

வேப்ப எண்ணெய் 
 இந்தியாவின் வட பகுதிகளில் அதிகமாக காணப்படும் வேப்ப மர இலையில் இருந்து தயாரிக்கப்படுவதே வேப்ப எண்ணெய். மூட்டைப்பூச்சிகள் உட்பட பல நுண்ணிய உயிரினங்களை அழிக்க, நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்களுக்காக நன்றாக அறியப்படும் இந்த மரம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மருந்து கடைகளிலும் வேப்ப எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்யை நீர்த்து போக செய்யாமல் அதன் தூய்மையான வடிவத்திலேயே பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் இதனை ஸ்ப்ரே செய்யுங்கள். அதே போல் இந்த மூலிகை எண்ணெய்யை உங்கள் டிடர்ஜென்ட்டுடன் கலந்து உங்கள் ஆடைகளை தவிக்கவும். இதனை ஒரு வாரத்திற்கு தினமும் செய்யவும்.

தைம் 
தைம் என்பது புகழ்பெற்ற இத்தாலிய மூலிகையாகும். உணவுகளுக்கு சுவைமணம் அளிக்கவும், இனிமையான வாசனையை அளிக்கவும் இது முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை மூட்டைப்பூச்சிகளின் மீது நேரடியாக செயல்படாது. ஆனால் இதன் வாசனை அவைகளுக்கு வெறுப்பூட்டும் வகையில் இருக்கும். இதனால் இடத்தை அதுவாகவே காலி செய்து விடும். நற்பதமான தைம் இலைகளை வலை பைகளில் போட்டு கொள்ளவும். இந்த பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் போடவும்; மெத்தைகளுக்கு கீழ், அலமாரிகளுக்கு கீழ், சோஃபா குஷன்களுக்கு கீழ், திரைகளுக்கு அருகில். இதனால் மறைந்திருக்கும் இடங்களை விட்டு மூட்டைப்பூச்சிகள் தானாகவே ஓடி விடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த வலை பை சிகிச்சையை தொடரவும்.

வசம்பு (Sweet Flag)
 ஸ்வீட் ஃப்ளாக் என அழைக்கப்படும் மூலிகையான வசம்பை ரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லியில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த மூலிகையில் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் அடங்கியுள்ளதால் மூட்டைப்பூச்சிகள், புழுக்கள் மற்றும் பேன் முட்டைகள் போன்ற நுண்ணுயிர்களை எதிர்த்து இந்த மூலிகை சிறப்பாக செயல்படும். உங்கள் தோட்டத்திற்கான பொருட்களை விற்கும் கடைகளில் இந்த மூலிகை பூச்சிக் கொல்லி கிடைக்கிறது. ஒரு பெரிய பாக்கெட் வசம்பு பொடியை வாங்கி, அந்த பாக்கெட்டில் உள்ள வழிகாட்டல் படி, அதனை நீருடன் கலந்து கொள்ளவும். இந்த பூச்சிக்கொல்லியை வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். இதனால் மூட்டைப்பூச்சிகள் முழுமையாக நீங்கும். இதனை உட்கொள்ள வேண்டாம்.

ஜங்லி மட்டன் குழம்பு

ஜங்லி மட்டன் குழம்பு
 
 

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 8
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்ழுன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 5
பிரியாணி இலை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம், மல்லி, மிளகு, கடுகு, கசகசா ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள மட்டனை போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, மட்டனில் மசாலா நன்கு ஒட்டுமாறு பிரட்டி விட வேண்டும். பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் தொடர்ந்து பிரட்டி விடவும். கடைசியாக 3 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான ஜங்லி மட்டன் குழம்பு ரெடி!!!

சிக்கன் தேங்காய்ப்பால் குருமா

சிக்கன் தேங்காய்ப்பால் குருமா
 
 தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்(நறுக்கியது)
பச்சை மிளகாய் – கீறியது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி(திருவியது)
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். தேங்காயை அரைத்து திக்காக பால் எடுக்கவும். ஒரு அடி கனமான கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். அதன் பிறகு மஞ்சள்தூள், தனியா தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது சிக்கனை இதனுடன் சேர்த்து வேகுமளவு நீர் விடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் சிறிதுநேரம் வைத்திருந்து இறக்கவும். சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா ரெடி.

உருளை வறுவல்

உருளை வறுவல்
 

உருளைக்கிழங்கு -14 கிலோ
மைதா – 2டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
அரைத்துக் கொள்ளவும்
சோம்பு -14 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்லு
இஞ்சி – அங்குலத்துண்டு
சிகப்பு மிளகாய் – 8
பொட்டுக்கடலை – 11/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை
ஒரே அளவு உள்ளதாக பொறுக்கி உருளைக்கிழங்கை எடுத்தக் கொண்டு முழுதாக குக்கரில் வேக வைக்கவும்.

ஆறிய பிறகு தோலுரித்த 1/4 அங்குல வட்ட வடிவ சோத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை உருளைக்கிழங்கு துண்டங்களின் இருபுறமும் மெலிதாகப் பூசி 12மணி நேரம் வைக்கவும்.

சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும் ( இதையே தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு கட்டும் பரிமாறலாம்

கறிவேப்பிலை தோசை

கறிவேப்பிலை தோசை:
 
 
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி – ஒன்றரை கப்
புழுங்கலரிசி – அரை கப்
அவல் – அரை கப்
உளுந்து – அரை கப்
துவரம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒன்றரை கப்
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு




செய்முறை :
பச்சை அரிசி, புழுங்கலரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணிநேரம் ஊறவைக்கவும். அரைப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன் அவலை ஊறவைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஐந்து மணிநேரத்திற்கு பின் அரிசி, பருப்பு கலவையை நைசாக அரைக்கவும். அவலுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைசாக அரைத்து அரிசி மாவுக்கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு மாவை ஐந்து முதல் ஆறு மணிநேரம் வரை புளிக்கவிடவும்.
மாவு புளித்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
சத்தான, சுவையான கறிவேப்பிலை தோசை தயார். பூண்டு சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன். சாப்பாட்டில் கறிவேப்பிலையை ஒதுக்குபவர்களை கறிவேப்பிலை சாப்பிட வைப்பதற்கேற்ற நல்ல வழி.

பால் கொழுக்கட்டை சமையல்

பால் கொழுக்கட்டை சமையல்:

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-250 கிராம்; வெல்லம்-250 கிராம்; பால் 250 கிராம்; துருவிய தேங்காய்-1கப்; ஏலக்காய்-5; முந்திரிப் பருப்பு-10.

செய்முறை:

பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் வெகு நைஸாக அரைத்து எடுக்கவும். மாவு பட்டுப் போல் நைஸாக இருக்கவேண்டும். மாவை சின்னச் சின்ன பால்களாக உருட்டவும். உருண்டையாகவோ அல்லது ஒவல் வடிவத்திலோ இருக்கலாம். உருண்டைகள் கொண்டக்கடலை அளவில் இருக்கவேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிநீரில், அரிசி மாவு உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

உருண்டைகள் வெந்ததும், தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் வற்ற விடவும். பிறகு அந்தக் கலவையில் வெல்லக் கட்டிகளை தட்ட்ப்போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்து சீரானதும் அதில் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டபின், அந்தக் கரைசலில் தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் சேர்க்கவும். இந்த இனிப்பு பண்டம் தளதளவென்று இருக்கும் . இறக்கியபின் அதில் ஏலக்காய் சேர்த்தால், மணமான சுவையான இனிப்புப் பண்டம் தயார்.

காளான் கறி

காளான் கறி 

தேவையான பொருட்கள்
மொட்டுக் காளான் – 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிது
எண்ணெய்- வதக்க
உப்பு – ருசிக்கேற்ப

வதக்கி அரைத்துக் கொள்ள
சிகப்பு மிளகாய் – 8
தனியா – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1 (நேரடித் தணலில் சுட்டது)
மேற்கூறப்பட்ட பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காளான்களைச் சுத்தமாக கழுவி அதை நடுத்தரமான அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு அதை பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வதங்கியதும் காளான் துண்டுகளைப் போட்டு காளான்கள் வேகும் வரை கிளறி விடவும்.
இதனுடன் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பு திக்ககும் வரை கொதிக்க விடவும்.
காளான் கறி சாதம், சப்பாத்தி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு
வெங்காயத்தை தணலில் சுடுவதற்கு பெரிய கம்பி அல்லது கத்தியில் தோலுடன் முழு வெங்காயத்தைச் சொறுகி நேரடித் தணலில் திருப்பி விட்டு சுடவும்.
மேல் பகுதி கருப்பாக ஆகும் வரை தணலில் காட்டவும். பின்பு அதை ஆற விடவும். வெளித்தோலை உரித்து விட்டு அதை சிறு துண்டுகளாக்கி மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இளமையைக் கூட்டும் இயற்கையான ஃபேஸ் பேக்

இளமையைக் கூட்டும் இயற்கையான ஃபேஸ் பேக்

பெண்களின் முகத்தில் கொஞ்சம் சுருக்கம் விழுந்தாலும் கவலை சூழ்ந்து கொள்ளும். வயதாகிவிட்டதோ? என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து ரசாயன கலவைகள்
அடங்கிய கிரீம்களை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெல்லாம் தேவையில்லை இயற்கை பொருட்களைக் கொண்டு முகத்தின் இளமையை தக்கவைக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

முகத்தின் இளமையை தக்கவைக்க புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் உள்ள புரதச்சத்து நிறைந்த பொருட்களை பயன்படுத்தி பேஸ்பேக் போடலாம். ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து, பாதாம் பருப்பு 4 எடுத்து இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அதனை நன்றாக அரைத்து பசை போல எடுத்து வைத்துக்கொள்ளவும். இது பேஸ் மாஸ்க் போடுவதற்கு ஏற்றது. அரைமணிநேரம் காயவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ பளிச்சென்று மாறும். முகத்தின் இளமையை தக்க வைக்கும்.

2 டீஸ்பூன் அரிசி மாவு, 4 டீஸ்பூன் டீ தண்ணீர், 1 டீஸ்பூன் தேன், ஆகியவற்றை கலந்து மாஸ்க் போடவும். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மென்மையாகவும் பளிச்சென்றும் தோற்றமளிக்கும்.

எலுமிச்சை சிறந்த முகத்திற்கு பிளீச் ஆக செயல்படுகிறது. 2 டீஸ்பூன் எழுமிச்சை சாறு,1 டீ ஸ்பூன் கிளிசரின், 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து உடல் முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் சருமம் பளபளப்பாக மாறும்.

1 டீஸ்பூன் எழுமிச்சை சாறு, 1/2 டீ ஸ்பூன் நறுமண தயிர் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடம் ஊற வைத்து கழுவ முகம் பளபளப்பாக மாறும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள்,1 முட்டையை கின்னத்தில் உடைத்து ஊற்றி அத்துடன்,1 டீஸ்பூன் தேன், சிறிதளவு கிளிசரின் உடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து ஒன்றாக கலக்கி உடலில் வறண்ட இடங்களில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ சரும வறட்சி நீங்கும்.

ஒரு கின்னத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். 1/2 கின்னம் தேங்காய் எண்ணெய்,1 டீ ஸ்பூன் தேன், ஆகியவற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து மிதமான நீரில் கழுவ முகம் பளபளப்பாக மாறும்.

ஸ்ட்ராபரி பழத்தை மிருதுவாக அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து கழுவ முகம் பளபளப்பாக மாறும். 1 டீ ஸ்பூன் பால் பவுடர், சிறிதளவு வெள்ளரிக்காய் 1 டீ ஸ்பூன் நறுமண தயிர், ஆகியவற்றை கலந்து நன்கு அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊற வைத்து மிதமான நீரில் கழுவ வேண்டும். முகம் மென்மையாக மாறும்.


ஜிகர்தண்டா செய்வது எப்படி


ஜிகர்தண்டா செய்வது எப்படி தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர் நன்னாரி சிரப் – 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 1/2 கப் பிரஷ் க்ரீம் – 1/2 கப் பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் சுண்டும் வரை காய்ச்சவும். பின் அதில் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் மீண்டும் பாதியாக சுண்டும் வர கொதிக்க விட வேண்டும். அதன் நிறம் மாறி பாதியானதும், அதில் 1 கப் பாலை எடுத்து தனியாக குளிர வைக்க வேண்டும். பிறகு மீதமுள்ள பாலை மீணடும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதில் பால் கோவா சேர்த்து நன்கு கலந்து,
ஜிகர்தண்டா செய்வது எப்படி

பின் அதில் பிரஷ் க்ரீம், வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து, ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் 3-4 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். இப்போது அது ஐஸ் கட்டி போன்று இருக்கும். அதனை உடைத்துவிட்டு, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இதேப்போன்று 2 முறை ப்ரீசரில் வைத்து உறைய வைத்து எடுத்து அரைத்து, இறுதியில் அதனை ப்ரீசரில் 8 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அதற்குள் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும். இறுதியில் ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் நன்னாரி சிரப், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினி, தனியா எடுத்து வைத்துள்ள பால் டம்ளரில் 3/4 அளவு வரும் வரை ஊற்றி, பின் அதில் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறினால், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெடி!!!

மென்மையான கைகள் வேண்டுமா


மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…

கைகள் பராமரிப்பு:
முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக <உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.
* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.
அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

மால்குடி மட்டன் பிரியாணி

மால்குடி மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி, மட்டன், பட்டை, லவங்கம், கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி-பூண்டு விழுது, புதினா, தயிர், வெங்காயம், தக்காளி, எலுமிச்சை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி, எண்ணெய், நெய்.
----------------------------------------------------------------------------------
செய்முறை :
1. முதலில் சுத்தம் செய்த மட்டனை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, புதினா, தயிர், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும்.
2. வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, எலுமிச்சை பழம், பச்சை மிளகாய், புதினா ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. குக்கரில் ஊறவைத்த மட்டனை அடுப்பில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
4. மற்றொரு குக்கரில் எண்ணெய், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு இதோடு இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக புதினா மற்றும் வேகவைத்த மட்டன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5. நன்கு கொதி வந்தவுடன் அரிசி சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் அதோடு கொத்தமல்லி, சிறிதளவு நெய், சிறிதளவு கரம் மசாலா தூள் சேர்த்து 10-15 நிமிடம் வரை குக்கரை மூடவும்.

இறாலின் நன்மைகள்

இறாலின் நன்மைகள்

சிக்கன், மட்டனை விட கடல் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன.
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது, இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணனி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது.
இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், தசைகள் வலுவடையும்.
இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.
சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
எந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.
ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.
இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.
அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.
உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும்.
இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

பலத்தோடு பலன் தரும் பலாக்கொட்டை...!!!

பலத்தோடு பலன் தரும் பலாக்கொட்டை...!!!

  • நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
  • பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அது போன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையை பெருக்கும் தன்மை உள்ளது தான் பலாக்கொட்டை. ”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.
  • 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாகொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.
  • பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்துசப்பாத்தியாகவோ ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20, உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலா கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.
  • டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் அவர்களின் சில குறிப்பு:
  • தொடர்ச்சியான முடி உதிர்வு, தலையில் அரிப்பு போன்ற தொந்தரவால் துவண்டு போகிறவர்களுக்குப் பலன் தருகிறது பலாக்கொட்டை. இதை காயவைத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பவுடர் அரை டீஸ்பூன், பயத்தமாவு ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன்... இந்த மூன்றையும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் குழைக்க வேண்டும். தேவைப்பட்டால் அதில் சிறிது வெந்நீரையும் சேர்த்து, தலையில் பூசி 10 நிமிடம் ஊறவிடுங்கள். பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பூவால் தலையை அலசினால் அரிப்பு குறைந்து, முடி கொட்டுவது நிற்கும். அடுத்து முடி வளர ஆரம்பிக்கும்.
  • பலாக்கொட்டையில் சில உணவுகள் ...!!
  • பலாக்கொட்டை பிரட்டல், பலாக்கொட்டை-மாங்காய் சாம்பார், பலாக் கொட்டை உருண்டை, பலாக்கொட்டைப் பொரியல், பலாக்கொட்டை- பயற்றங்காய் பிரட்டல்
  • உருளைக்கிழங்கு பலாக்கொட்டை மசாலா, பலாக்கொட்டை பொடிமாஸ், கத்தரிக்காய் -பலாக்கொட்டை புளிப்பு கூட்டு, பலாக்கொட்டை சோயாப் பொரியல் ...!!

Sunday, 22 March 2015

ஃபிங்கர் ஃபிஷ்

ஃபிங்கர் ஃபிஷ்
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - கால் கிலோ.
லெமன் - 1
மஞ்சள் தூள், சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சோளமாவு - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
• மீனை நன்கு சுத்தம் செய்து நீளவாக்கில்
வெட்டிக்கொள்ளவும்..
• ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், லெமன் சாறு, சீரகத் தூள், இஞ்சி, பூண்டு விழுது,
சோளமாவு, உப்பு கலந்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

Dishwasher Not Cleaning Properly? 5 Quick Tips to Make it Run Like New

Dishwasher Not Cleaning Properly? 5 Quick Tips to Make it Run Like New

Dishwasher Not Cleaning Properly? Have you ever looked at a newly washed glass and seen gunk at the bottom?
My wife has noticed this on multiple occasions and even though our dishwasher is a few years old it’s cleaning efficiency has dropped off significantly.
Just today our daughters were complaining about mucky residue on their plastic cups. These are the same kids who can’t stand taking showers (their tone will surely change once they get old enough to date, at 25!!!)
I’m sharing these tips because a dishwasher not cleaning dishes is a frustrating problem. Hey, I don’t mind washing dishes by hand. But it’s nice to have a machine do this for you when both parents work full-time, coach softball & basketball, serve as a taxi service for kids, etc.
A dishwasher is like Alice from the Brady Bunch-an extra set of hands that makes your day a whole lot better.
After reading this post you’ll be able to remove your dishwasher’s spray arms & unclog them, understand how to thoroughly clean the inside of your dishwasher machine, and discover how to eliminate dirty dishes.
Here are the supplies you’ll need
  • Ratchet with 1/4 inch socket (but have all the sockets just in case)
  • White vinegar
  • Baking soda
  • Putty knife
  • Fine steel wool (grade 00)
  • Sponge
  • Steel wire for hanging pictures or steel cable or wire hanger
  • Old toothbrush (or spouse’s toothbrush depending on your mood)
All the tips are easy and can be done in less than an hour.
You can do this, trust me. It’s not that hard and if your dishwasher isn’t cleaning properly you’ll thank yourself for performing this project :)

Tip 1: Remove and Unclog Spray Arms

Clogged spray arms have to be the #1 problem we encounter with our dishwasher. It’s a function of the hard water we have here in Pittsburgh and the new non-phosphate dishwasher detergent.
We have a stainless steel GE Cafe dishwasher with SmartDispense technology. The SmartDispense concept seemed like a good idea. You could dump in a ton of liquid dishwasher soap and not have to worry about manually filling up the soap cup every time dishes needed to be cleaned.
When we started using the SmartDispense dispenser the directions were followed and the correct soap was used. Then soap manufacturers changed their formulas and eliminated the use of phosphate. Which was good for the environment but bad for our dishwasher system.
The two different kinds of soap caused residue or scale to buildup in our dishwasher. There’s a good chance you have the same problem.
If your dishwasher is like our GE brand then you can remove the lower spray arm by turning it counterclockwise and pulling up at the same time.
Remove the top & middle spray arms by using a ratchet and appropriately sized socket, which was 1/4 inch for me.
Here’s a brief video to help you with removing your spray arms

Dishwasher Not Cleaning-How to Remove Spray Arms
3:47
View count
64,419

Check all of the holes in your spray arms for clogs. You can use three different methods to remove debris from the holes.
Steel wire (the kind for hanging pictures) or steel cable can be used like dental floss to thoroughly clear out the holes in the arms. If you’re unsure what size steel cable to use you can take the arm to the hardware store and test.

Dishwasher Not Cleaning Properly?-Use picture hanging wire to unclog holes in spray arms

You can also use a wire hanger, the cheap kind you get at the dry cleaner’s, to unclog the arms.
The next step will help neutralize any crud you missed with the wires or cables.

Tip 2: Soak Spray Arms in White Vinegar 

Mechanically removing scale or bits of food from the holes in the spray arms will help transform a dishwasher from not cleaning to one that works a lot better.
Since the arms are already removed you can soak them in a bath of white vinegar to clean them even more. White vinegar will naturally breakdown old dishwasher soap and scale buildup.
You can do this one of two ways.
The first option is to place the arms on a four-sided cookie sheet and add the white vinegar. The second option is to put the spray arms in a clean kitchen sink and soak them with vinegar.
In my video I put duck tape over the holes of the arms, but this didn’t work all that well. At least you can learn from my bone-headed ideas and save some time ;)

Dishwasher Not Cleaning-How to Get Your Dishwasher to Clean Better
4:09
View count
29,639

Tip 3: Clean the Inside of Your Dirty Dishwasher

Make it a habit to look inside and see if you have a dirty dishwasher. Once a month isn’t too much to ask, right?
You’d be surprised at what you might find: chunks of old food, glass from broken dishes, popsicle sticks, toys, you name it!!!
The obvious first step is to check the bottom of the dishwasher for debris. The mat-like thing you see is called the coarse filter and is meant to catch big particles that could prevent your tub from draining.
Feel around with your hand in areas you can’t see and remove the cover to the reservoir where the water drains. Reach down into this reservoir and take out any food or other muck. Yes, this is gross but you have to do it for the sake of mankind (and to prevent that dreaded call to the appliance repair person).
There was a plastic popsicle wrapper in my reservoir along with some other items that I won’t mention. Sure I’m a little embarrassed but this is life.
If these large bits are just floating around in the dishwasher water they can certainly be sprayed back onto the dishes, which defeats the purpose of having a dishwashing machine!!!
There is also a fine filter in your dishwasher. It looks like a circular spaceship that has fine mesh sections to it. Clean off the mesh with a sponge or run it under hot water. Our fine filter had what looked like coffee grounds on it.

Dishwasher Not Cleaning Properly?-Clean the fine filter

Again, this is the stuff that could be sprayed back up into your cups or dishes. So cleaning the fine filter should be on your to-do list every month.

Tip 4: Eliminate Residue & Scale Buildup 

In Tip 3 you will clean the top of the coarse filter and I highly suggest you take a look underneath it.
OH MY WORD!!!
I almost couldn’t believe how much crap was on the bottom of the dishwasher tub. And this stuff was caked on real good.

Dishwasher Not Cleaning?-Clean underneath the coarse filter

My guess is this crud is a mix of residue from our hard water and a result of using the new non-phosphate soap with the original soap that did contain phosphate. And the GE repairman (who replaced our lower spray arm for $100) confirmed that he’d seen this in other dishwashers not cleaning properly.
How do you clean off this buildup?
Mix up white vinegar and baking soda to make a paste. The consistency should be slightly thicker than pancake batter, but feel free to experiment. Spread this paste onto the buildup and let it sit for 15-20 minutes.

Dishwasher Not Working Properly?-Add a white vinegar & baking soda paste to residue buildup

In a prior post I used this formula to clean soap scum off my shower doors (it’s one of the most popular articles on this site and can be found by clicking on this link http://www.homerepairtutor.com/clean-shower-doors/).
You can use a plastic putty knife to scrape off the residue. Since our dishwasher has a stainless tub I actually used a regular putty knife and 00 grade (super fine) steel wool. Yes this is aggressive but I was careful and only scrubbed the surface of the mucky residue that surely caused our dishwasher to not work properly.
This procedure with white vinegar and baking soda may need to be done a few times to properly clean the bottom of the dishwasher tub.

Tip 5: Toothbrushify Your Seals and Door

Only use your spouse’s toothbrush for this step  if they really deserve it (but please don’t tell them I said this unless you absolutely have no other choice).
Admittedly we didn’t clean the seals on our dishwasher for a few years and it looked disgusting.

Dishwasher Not Cleaning Properly?-Use a toothbrush and sponge to clean the seals and perimeter

Use the toothbrush to scrub around all the rubber seals and perimeter of where the door meets up with the dishwasher tub. Then grab a wet sponge to sop up the loosened muck.
You can do this same procedure for the sides of the dishwasher door and soap cup. The soap cup itself can accumulate excess soap residue. Make this sparkling clean with the sponge. You should do this extra step and call yourself anal retentive at this point.

These five steps will make your dishwasher the Millenium Falcon of kitchen appliances. Okay, maybe it won’t have the capacity to travel at the speed of light but you’ll certainly be pleased with the improvement in cleaning performance.