Tuesday, 24 March 2015

பூசணி இட்லி - இஞ்சிப் பச்சடி

பூசணி இட்லி - இஞ்சிப் பச்சடி 

தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்,
அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.
மருத்துவப் பயன்:
உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.
இஞ்சிப் பச்சடி
தேவையானவை:
இஞ்சி - 100 கிராம்,
புளி - சிறிதளவு,
எலுமிச்சை - 4,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.
மருத்துவப்பயன்:
பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

No comments: