ஜிகர்தண்டா செய்வது எப்படி தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர் நன்னாரி சிரப் – 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 1/2 கப் பிரஷ் க்ரீம் – 1/2 கப் பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்

பின் அதில் பிரஷ் க்ரீம், வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து, ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் 3-4 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். இப்போது அது ஐஸ் கட்டி போன்று இருக்கும். அதனை உடைத்துவிட்டு, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இதேப்போன்று 2 முறை ப்ரீசரில் வைத்து உறைய வைத்து எடுத்து அரைத்து, இறுதியில் அதனை ப்ரீசரில் 8 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அதற்குள் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும். இறுதியில் ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் நன்னாரி சிரப், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினி, தனியா எடுத்து வைத்துள்ள பால் டம்ளரில் 3/4 அளவு வரும் வரை ஊற்றி, பின் அதில் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறினால், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெடி!!!
No comments:
Post a Comment