Saturday, 28 February 2015

சிரிக்க மட்டும்.....

சிரிக்க மட்டும்.....

1) தோழி 1 : ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
தோழி 2 : புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.
தோழி 1 : ????
2) மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?
அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.
3) நண்பர் 1 : நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.
நண்பர் 2 : ஐயோ அப்புறம் என்னாச்சி?
நண்பர் 1 : அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா
நண்பர் 2 : ?????
4) காதலி : அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.
காதலன் : சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?
காதலி : ????
5) நண்பர் 1 : உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?
நண்பர் 2 : நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா
நண்பர் 1 : ?????
6) ஏட்டு : அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு இன்ஸ்பெக்டர் அய்யா ..
இன்ஸ்பெக்டர் : ஏன் ஏட்டைய்யா ..
ஏட்டு : இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.
இன்ஸ்பெக்டர் : ??????
7) டாக்டர் : பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
பேசண்டின் கணவர் : மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்
டாக்டர் : ?????
8) நீதிபதி : ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?
பெண் : உரலைத் தூக்க முடியல்ல சாமி! அதான்
நீதிபதி : ????
9) நண்பர் 1 :கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?
நண்பர் 2 : இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்
நண்பர் 1 : இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?
நண்பர் 2 : ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு
நண்பர் 1 : ?????
10 ) தொண்டன் 1 : தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?
தொண்டன் 2 : கை நாட்டு வைக்கதான்.
தொண்டன் 1 : ????
11) நண்பர் 1 : எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு
நண்பர் 2 : எதுக்குப் புலம்பறீங்க .. .. ?
நண்பர் 1: அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி
நண்பர் 2 : ????
12 ) தொண்டன் 1 : நம்ம தலைவருக்குப் பொருளாதாரம் பத்தி ஒண்ணுமே தெரியலையே
தொண்டன் 2 : ஏன் ?
தொண்டன் 1 : நாடளுமன்றத்துல , பணவீக்கத்தைக் குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.
தொண்டன் 2 : ?????

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் ..

சிக்கன் கைமா தோசை

பேச்சிலர் சமையல்

சிக்கன் கைமா தோசை

தேவையான பொருட்கள்: 

தோசை மாவு - 1 கப்
சிக்கன் அல்லது மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை - 1

செய்முறை...
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்.
• பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாகி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போதும் வரை நன்றாக வதக்கவும்.
• பின்னர் அதில் சிக்கன் அல்லது மட்டன் கொத்துக்கறியுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேக வைக்கவும்.
• தண்ணீர் சேர்க்க கூடாது.
• கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றி உதிரியாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
• தோசை கல் சூடானதும் அதில் மாவை ஊற்றி அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி அனைத்து பகுதிக்கும் நன்றாக பரப்பி விடவும்.
• சுற்றி எண்ணெய் விடவும்.
• பின்னர் தோசையின் மேல் கொத்துக்கறியை அனைத்து பகுதியிலும் படும்படி பரப்பி மேலே ஒரு தட்டால் தோசையை மூடி விடவும்.
• வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
• சீஸ் பிடித்தவர்கள் சீஸை துருவிக் கொண்டு தோசையை இறக்கும் போது கொத்துக்கறியில் மேலே தூவி தோசையை மடித்து பரிமாறவும்

பாசம் -heart emoticon

*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம். heart emoticon
*மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம். heart emoticon
*பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம். heart emoticon
*பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம். heart emoticon
*தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம். heart emoticon
*அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம். heart emoticon
*தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம். heart emoticon
# சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம். heart emoticon

சிறுகதை - அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்

சிறுகதை - அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத்தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு,கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. “ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரிசெய்யுங்களேன்”
அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்.
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!

கேரட் குக்கீஸ்

கேரட் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 5
பேக்கிங் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
வெண்ணெய் - 2 கப்
மைதா - 2 கப்
முட்டை - 1
வெனிலா - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி - 8
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு


செய்முறை:
கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும். மைதா, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். அதன் மேற்பரப்பில் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம். இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.

Friday, 27 February 2015

இளநரையை தடுக்கும் ஷாம்பு: நீங்களே தயாரிக்கலாம்

இளநரையை தடுக்கும் ஷாம்பு: நீங்களே தயாரிக்கலாம்

இன்றைய காலத்தில் இளைஞர்களின் பெரிய பிரச்னையாக இருப்பது இளநரை. தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அவை வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைக்கின்றன, அப்போது வெள்ளை முடி தோன்றும்.

தலைக்கும் பயன்படுத்தும் வீரியம்மிக்க ஷாம்புகளாலும், புரதம், இரும்பு சத்து குறைவதனாலும் வெள்ளை முடி தோன்றலாம். எனவே இளநரையை தடுக்க வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு ஷாம்பு தயாரிக்கலாம்.

1. நெல்லிமுள்ளி,
2. செம்பருத்தி இலை,
3. மருதாணி இலை

இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, பொடி செய்யுங்கள். அதிலிருந்து 4 டீஸ்பூன் எடுத்து, இதனுடன் தேங்காய் பால்-2 டீஸ்பூன், கொஞ்சம் டீ டிகாஷன் (பேஸ்ட் ஆகும் அளவுக்கு) கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.வாரம் ஒரு முறை இதுபோல குளித்து வந்தால், இளநரை கிட்டவே வராது.

பெப்பர் சிக்கன்

பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள் "

சிக்கன் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 2ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் - 5
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் – தேவையான அளவு
பெப்பர் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை - பொடியாக வெட்டியது


செய்முறை:


• குக்கரில் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்.
• ஒரு நிமிடத்திற்குப் பிறகு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாய் வதக்கவும்.
• இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு கழுவிய சிக்கனை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்றாய் கிளறவும்.
• மசாலா சிக்கனில் நன்றாய் பிடித்தவுடன் குக்கரை மூடி வைக்கவும்.
• இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி விடவும்.
• வாணலியில் வெந்த சிக்கனுடன், பேப்பரை போட்டு நன்றாய் கிளறவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
பெப்பர் சிக்கன் தயார்!

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

Thursday, 26 February 2015

Samosay

Samosay

Easy to make and every body just going to love it.

Ingredients:
Oil,for deep frying
for outer covering:
1 heaped cup Maida
1/4 cup fine Rawa ( Sooji )
a pinch of Salt
for filling:
1/2 cup Fried gram(chutney dal) powder
1/3 cup grated dry Coconut
1/2 cup + 3 tbsp powdered Sugar
1 tbsp Poppy seeds
3 tbsp Cashew nuts,finely chopped
1/4 tsp Cardamom powder
Method:
Mix maida,rawa,salt with enough water to form a stiff dough.The dough should be like the consistency of puri dough.
Cover it with a wet cloth and keep it aside for half an hour.
Mean while mix all the ingredients for filling fried gram powder,grated dry coconut,powdered sugar,cardamom powder,poppy seeds and chopped cashew nuts nicely in a bowl and keep it aside.
Now,knead the dough well again to make the dough soft and pliable.Meanwhile heat oil in a kadai for deep frying the karanjis.
Make small gooseberry sized balls with the dough and roll it out into very thin chapathis of 4" dia.They should be very thin,so roll as thin as possible.You can sprinkle maida on the rolling board for easy rolling.
Take the karanji mould and slightly grease the edges with little oil and place the rolled chapati on top of it.
Place 1 tbsp of filling on one side of the partition and wet the edges slightly with water and close it and seal well.Remove the extra portion hanging out from the mould and keep them aside.Repeat the same process for the remaining dough.
If you do not have karjikayi mould you can even take a sharp edged 3" steel lid and cut the chapati using it and then keep the filling inside and close it to the other side forming a half moon and take a fork and make the impressions around the corners or pinch the edges with your fingers or you can even pinch the edges and roll them inwards to form a beautiful pattern.See the image below for better understanding about how to shape them.
Drop 2-3 at one time slowly in to the oil and fry them on reduced flame(low-medium) till crisp and golden in color.Try to pour the hot oil from the sides using the slotted spoon on top of the karanji which helps in puffing up nicely.
Drain them using a slotted spoon to a kitchen napkin and let them cool completely.
Store them in an air tight container.They store good up to 2 weeks

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

அரைக்க:

சின்ன வெங்காயம்
வரமிளகாய்
பூண்டு
சீரகம்
மிளகு
கொத்தமல்லி தூள்
கருவேப்பிலை
தேங்காய்

தாளிக்க:

சின்னவெங்காயம்
பச்சைமிளகாய்
கருவேப்பிலை
தக்காளி
புளிகரைசல்
மஞ்சள்தூள்
எண்ணெய்
கடுகு
உப்பு

செய்முறை: 

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயை தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து எண்ணெய் ஊற்றி வதக்கி வதக்கிகொள்ளவும் .
அதை ஆற வைத்து தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை,தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிகொள்ளவும் .
அதனுடன் நான்காக கிறிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும் .
வதக்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி அதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் .
கொதித்ததும் புளிகரைசல் ,உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும் .
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் .

எளிய பாட்டி வைத்தியம் :-

எளிய பாட்டி வைத்தியம் :-

* வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
* பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
* வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
* வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
* வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

ஜிலேபி

ஜிலேபி 

தேவையானவை :

உளுந்தம்பருப்பு - 250 கிராம்
அரிசி - 30 கிராம்
சர்க்கரை - 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ், டால்டா, நெய் - தேவையான அளவு


செய்முறை:

* உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.
* சர்க்கரை பாகு தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
* மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.
* வாணலியில் நெய் சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.
* எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.
குறிப்பு:
நல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.

வாழைப்பழ முட்டை தோசை


தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த வாழைப்பழம்.....1 முட்டை............................................2 சர்க்கரை / உப்பு............................தேவையான அளவு சமையல் எண்ணெய்....................தேவையான அளவு



ுதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உழைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். பிறகு இதில் உப்போ / சர்க்கரையோ சேர்த்து இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து கலந்துக்கொள்ளவும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு தோசைகளாக ஊற்றி லேசாக எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். ஆரோக்கியமான வாழைப்பழ முட்டை தோசை தயார்


உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள வாழைப்பழ முட்டை தோசை காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால் வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் நல்லது. உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் இதனை உட்கொள்வதும் நல்லது. 

சமையலறைமருத்துவம் ,இய‌ற்கை வைத்தியம்,சித்த மருத்துவம்,மருத்துவ பலன்கள்,அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!


இஞ்சி – சமையலறை மருத்துவர்! இய‌ற்கை வைத்தியம்!!

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
...................................................................................................................................................................
---------------------------------------------------------------------------------------------------------------
அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாசுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3.வயிற்றுப் புண் குணமாகும்.
4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8.மலச்சிக்கல் நீங்கும்.
9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10.உடல் இளைக்க உதவும்
11.இரவில் நல்ல தூக்கம் வரும்.
12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13.மூட்டு வலி நீங்கும்.
14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்தமருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடை கொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும்.
உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

____________________________________________________________________________
.........................................................................................................................................................

பப்பாளியின் மருத்துவ பலன்கள்

பப்பாளி பழம் நல்ல சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதிகமான சத்துக்களையும் கொண்டுள்ளன.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது.
மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள் செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாக்கும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி செரிமானத்தை விரைவுபடுத்துகிறது.
அதிலும் பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.
இதில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.
அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.
------------------------------------------------------------------------------------------------


சித்த மருத்துவம்

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
 ------------------------------------------------------------------------------------------------

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.
மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப நிலமான கேரளாவில் இந்திய மொத்த விளைச்சலில் 96 விழுக்காடு விளைகிறது. 3.5 விழுக்காடு கர்நாடகாவில் விளைகிறது மீதம் உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் விளைகிறது. 1947 ம் ஆண்டு கணக்கின் படி மொத்த நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 54.86 கோடி அதில் மிளகுமட்டும் 29.53 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது.
இதிலிருந்து பைப்ரின் என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டு நோய் நீக்கும் மருந்துகள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் பிராந்தி எனும் மதுவகைக்கு உறைப்புத்தரவும் பயன்படுத்தப்படுகிறது.
எகிப்தியர்கள் சவங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள். ஆசியர்கள் இதனை ஆண்மைபெறும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இறைச்சி போன்ற அழுகும் பதார்த்தங்களைப் பராமரிக்க மிளகு மிகவும் ஏற்ற சாதனம் என்பது பல நூற்றாண்டுகளுக்குமுன்னரே கண்டறியப்பட்டிருந்தது.
மருத்துவத்திற்கும் உணவில் சுவையும் மணமும் சேர்ப்பதற்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிளகின் தேவை தற்போது கூடியுள்ளதால் இதன் விலையும் கூடிவிட்டது. எனவே தமிழக விவசாயிகளும் ஏறு கொடியினத்தைச் சேர்ந்த இதனைப் பயிர்செய்வதில் ஆர்வம் காட்டினால் நல்ல எதிர்காலம் உண்டு.
இதன் காய் பழம் கொடியின் தண்டு அனைத்தும் பயன்படுவதால் நல்ல வருமானம் கிடைக்கும். இதன் உலர்ந்த தண்டு செவ்வியம் என்ற பெயரில் பல சித்த ஆயுர்வேத மருந்துகளில் சேர்கிறது.
சுக்கு, மிளகு, திப்பிலி, மூன்றும் சம அளவு சேர்த்துத் உருவாக்கப்படும் திரிகடுகு சூரணம் தமிழ் மருத்துவத்தில் அனைத்து நோய்தீர்க்கும் மருந்துகளுடனும் சேர்த்துத் தரப்படுகிறது. முதிராத பிஞ்சுக் காய்களைப் பறித்து எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது சேர்த்துச் செய்து சாப்பிடலாம். புளி சேர்த்துக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனால் வாயு, சீதளம், கபம், செரிமானமின்மை மற்றும் ஏப்பம் நீங்கி நல்லபசியும் நோயெதிர்ப்புத் திறனும் கூடும்.
சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்.
என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
மிளகை சிறிது வறுத்துப் பொடித்துச் சலித்து வைத்துக்கொண்டு பெரும்பாலான உணவுகளில் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி மற்ற சட்னி வகைகளில் மிளகாய்க்குப்பதிலாக மிளகைச் சேர்த்து உண்ணலாம். இதனால் உதிரக் குழாய்களின் சுவர்களில் சேர்ந்திருக்கும் கொழுப்புக் கரைந்தோடும். நன்கு செரிக்கும். நோயெதிர்ப்பாற்றல் கூடும்.
உடலும் மனமும் சோர்வாக அமர்ந்திருப்பவர்களுக்கு மிளகுப் பொடியைத் தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை தர வெப்பத்தை உண்டுபண்ணி மன எழுச்சியைத் தரும். அடிக்கடி வரும் காய்ச்சலுக்குத் தர நலமாகும். 7 மிளகு 200 மி.லி. அளவு தண்ணீரில் தட்டிப்போட்டு, காய்ச்சி, 50 மி.லி. அளவு சுருக்கி வடித்துத் தேன்கலந்து குடித்தால் குளிர் காய்ச்சல் மற்றும் சளி கட்டுப்படும்.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டும் இரச கந்தக மருந்துகளின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 1 பிடி கணுநீக்கிய அருகன் வேருடன் 7 மிளகு தட்டிப்போட்டு 500 மி.லி. அளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி 50 மி.லி. அளவாகச் சுருக்கி வடிகட்டிப் பசு வெண்ணை சிறிது கலந்து குடிக்க மருந்துகளின் நச்சுத்தன்மை முறிந்து நலமடைவார்கள்.
பூரான், சிறுபாம்புக்கடி, வண்டுகடி போன்ற நச்சுக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 6 மணிக்கும் கற்பூர வெற்றிலையில் 5 மிளகு மடித்து மென்று சாப்பிட நச்சு முறிவு ஏற்படும்.
புளுவெட்டினால் முடியுதிர்ந்த இடத்தில் மிளகு, உப்பு, சின்ன வெங்காயம் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால் முடிவளரும். மிளகு 100 கிராம் பெருஞ்சீரகம் என்னும் சோம்பு 140 கிராம் பொடியாக வறுத்தரைத்து, அரை லிட்டர் அளவு தேனுடன் கலந்து வைத்துக்கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மூல நோய் தீரும்; நன்கு செரிக்கும்.
எல்லா உணவுவகைகளிலும் காரச் சுவைக்கு மிளகாயை விலக்கி மிளகைக் கூட்டிப் பயன்படுத்துவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம், சளி, காய்ச்சல், நச்சு, கபம் நன்கு செரிமானமாகி நலமுடன் வாழலாம்.

------------------------------------------------------------------
நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய் 

ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.
பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.
இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.
ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க.
நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

Wednesday, 25 February 2015

Tamil Cooking

                            தால்மா

தேவையான பொருட்கள் :

ஊறவைத்து துவரம் பருப்பு, நறுக்கிய உருளை கிழங்கு, மஞ்சள் பூசணி, கேரட், வாழைக்காய், கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகத் தூள், எண்ணெய், மஞ்சள் தூள், உப்பு, நெய், காய்ந்த மிளகாய், பஞ்ச பூரணம் (கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு)
---------------------------------------------------------------------------------
தால்மா - செய்முறை:

1. முதலில் அடுப்பில் குக்கர் வைத்து தண்ணீர் சேர்த்து ஊறவைத்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்பு அதோடு நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
2. அதற்குள் பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்துக் கொள்ளவும்.
3. வானலியில் சிறிது எண்ணெய் காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து பொரித்ததும், பஞ்ச பூரணம், வெங்காயம் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு இடித்து வைத்த இஞ்சி, பூண்டு, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வேகவைத்த காய்கறி கலவையோடு கலந்து சிறிதளவு தண்ணீர், சீரகத்தூள், நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்பொழுது தால்மா தயார்.
--------------------------------------------------------------------------------- 


டாமாலு புலாவ் "
-----------------------------

தேவையான பொருட்கள் :
வேகவைத்த சின்ன உருளைக் கிழங்கு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வருத்த வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா தூள், நெய், பாலில் ஊறவைத்த குங்கும பூ, தயிர், பால், மிளகாய்த் தூள்.
--------------------------------------------------------------------------------
செய்முறை :

1. புதினா, கொத்தமல்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், நெய், பேபி பொடேடோ, வறுத்த வெங்காயம், நறுக்கிய புதினா, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.
3. குக்கரில் சிறிதளவு காய வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஹோல் கரம் மசாலாவை போடவும்.
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், ஏற்க்கனவே கலக்கி வைத்த உருளைகிழங்கு கலவையை அதில் சேர்க்கவும்.
4. கொதித்த தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அந்த நீரை, குக்கரில் உள்ள கலவையில் ஊற்றவும்.
5. நீர் கொதித்ததும் சிறிதளவு பால், பாஸ்மதி அரிசி, வறுத்த வெங்காயம், புதினா, பாலில் ஊறவைத்த குங்கும பூ, சிறிதளவு நெய் சேர்த்து, குக்கரை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
இப்பொழுது டாமாலு புலாவ் தயார்.

--------------------------------------------------------------------------------- 
பேச்சிலர் சமையல் :

பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள் "

சிக்கன் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 2ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் - 5
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் – தேவையான அளவு
பெப்பர் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை - பொடியாக வெட்டியது


செய்முறை:


• குக்கரில் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்.
• ஒரு நிமிடத்திற்குப் பிறகு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாய் வதக்கவும்.
• இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு கழுவிய சிக்கனை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்றாய் கிளறவும்.
• மசாலா சிக்கனில் நன்றாய் பிடித்தவுடன் குக்கரை மூடி வைக்கவும்.
• இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி விடவும்.
• வாணலியில் வெந்த சிக்கனுடன், பேப்பரை போட்டு நன்றாய் கிளறவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
பெப்பர் சிக்கன் தயார்!

Monday, 16 February 2015

History of Tamilnadu


The early Cholas between 1st and 4th centuries ruled Tamil Nadu. The Cholas ruled the present Thanjavur and Tiruchirapalli districts. At the peak of their glory, the Chola kings expanded their influence as far as Ceylon (Sri Lanka) in the south and hundreds of kilometers across the northern region. Almost all the Chola Kings were magnificent temple builders. Brahadeswarer's Temple in Tanjore is a classical example of the magnificent architecture of the Chola kingdom. During the later half of 4th century, the Pallavas came into prominence and dominated the south for another 400 years. They ruled a large portion of Tamil Nadu with Kanchipuram as their base. The Dravidian architecture reached its epitome during the Pallava rule.

The Cholas again rose as a notable power in 9th century under Rajaraja Chola and his son Rajendra Chola. The Chola Empire extended to the central Indian states like Orissa and parts of West Bengal. Rajendra Chola went beyond, occupying the islands of Andaman and Nicobar, Lakshadweep, Java, Sumatra, Malaya and the islands of Pegu with his fleet of ships. The Chola power declined in the last quarter of the thirteenth century and the Pandyas re emerged as a mighty power, in the early 14th century. But the emergence of Pallava was short lived as Alauddin Khilji subdued them in the beginning of the 14th century. The city of Madurai was plundered and completely destroyed. The invasion destroyed the Chola and Pandya dynasties and later led to the establishment of Bahmani Kingdom in the northern Deccan.

Tamil Nadu was also a witness to the struggle between the colonial powers in which the British came out victorious. The British fought with various European powers, driving the Dutch away and reducing the French dominions in India to Pondicherry. The British also fought four wars with Hyder Ali and later his son Tipu Sultan, which led to their eventual domination of India's south. The British consolidated south India into the Madras Presidency.

The Nationalist movement in Tamil Nadu started in the late eighteenth century. The anti-colonial feeling in Tamil Nadu started as early as 1806 at Vellore. After independence in 1947, the Madras Presidency became Madras State, comprising of present day Tamil Nadu, coastal Andhra Pradesh, Northern Kerala, and the southwest coast of Karnataka. The state was later divided on linguistic lines. In 1968 the state of Madras was renamed Tamil Nadu.