Thursday, 26 February 2015

சமையலறைமருத்துவம் ,இய‌ற்கை வைத்தியம்,சித்த மருத்துவம்,மருத்துவ பலன்கள்,அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!


இஞ்சி – சமையலறை மருத்துவர்! இய‌ற்கை வைத்தியம்!!

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
...................................................................................................................................................................
---------------------------------------------------------------------------------------------------------------
அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாசுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3.வயிற்றுப் புண் குணமாகும்.
4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8.மலச்சிக்கல் நீங்கும்.
9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10.உடல் இளைக்க உதவும்
11.இரவில் நல்ல தூக்கம் வரும்.
12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13.மூட்டு வலி நீங்கும்.
14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்தமருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடை கொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும்.
உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

____________________________________________________________________________
.........................................................................................................................................................

பப்பாளியின் மருத்துவ பலன்கள்

பப்பாளி பழம் நல்ல சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதிகமான சத்துக்களையும் கொண்டுள்ளன.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது.
மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள் செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாக்கும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி செரிமானத்தை விரைவுபடுத்துகிறது.
அதிலும் பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.
இதில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.
அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.
------------------------------------------------------------------------------------------------


சித்த மருத்துவம்

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
 ------------------------------------------------------------------------------------------------

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.
மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப நிலமான கேரளாவில் இந்திய மொத்த விளைச்சலில் 96 விழுக்காடு விளைகிறது. 3.5 விழுக்காடு கர்நாடகாவில் விளைகிறது மீதம் உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் விளைகிறது. 1947 ம் ஆண்டு கணக்கின் படி மொத்த நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 54.86 கோடி அதில் மிளகுமட்டும் 29.53 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது.
இதிலிருந்து பைப்ரின் என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டு நோய் நீக்கும் மருந்துகள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் பிராந்தி எனும் மதுவகைக்கு உறைப்புத்தரவும் பயன்படுத்தப்படுகிறது.
எகிப்தியர்கள் சவங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள். ஆசியர்கள் இதனை ஆண்மைபெறும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இறைச்சி போன்ற அழுகும் பதார்த்தங்களைப் பராமரிக்க மிளகு மிகவும் ஏற்ற சாதனம் என்பது பல நூற்றாண்டுகளுக்குமுன்னரே கண்டறியப்பட்டிருந்தது.
மருத்துவத்திற்கும் உணவில் சுவையும் மணமும் சேர்ப்பதற்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிளகின் தேவை தற்போது கூடியுள்ளதால் இதன் விலையும் கூடிவிட்டது. எனவே தமிழக விவசாயிகளும் ஏறு கொடியினத்தைச் சேர்ந்த இதனைப் பயிர்செய்வதில் ஆர்வம் காட்டினால் நல்ல எதிர்காலம் உண்டு.
இதன் காய் பழம் கொடியின் தண்டு அனைத்தும் பயன்படுவதால் நல்ல வருமானம் கிடைக்கும். இதன் உலர்ந்த தண்டு செவ்வியம் என்ற பெயரில் பல சித்த ஆயுர்வேத மருந்துகளில் சேர்கிறது.
சுக்கு, மிளகு, திப்பிலி, மூன்றும் சம அளவு சேர்த்துத் உருவாக்கப்படும் திரிகடுகு சூரணம் தமிழ் மருத்துவத்தில் அனைத்து நோய்தீர்க்கும் மருந்துகளுடனும் சேர்த்துத் தரப்படுகிறது. முதிராத பிஞ்சுக் காய்களைப் பறித்து எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது சேர்த்துச் செய்து சாப்பிடலாம். புளி சேர்த்துக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனால் வாயு, சீதளம், கபம், செரிமானமின்மை மற்றும் ஏப்பம் நீங்கி நல்லபசியும் நோயெதிர்ப்புத் திறனும் கூடும்.
சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்.
என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
மிளகை சிறிது வறுத்துப் பொடித்துச் சலித்து வைத்துக்கொண்டு பெரும்பாலான உணவுகளில் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி மற்ற சட்னி வகைகளில் மிளகாய்க்குப்பதிலாக மிளகைச் சேர்த்து உண்ணலாம். இதனால் உதிரக் குழாய்களின் சுவர்களில் சேர்ந்திருக்கும் கொழுப்புக் கரைந்தோடும். நன்கு செரிக்கும். நோயெதிர்ப்பாற்றல் கூடும்.
உடலும் மனமும் சோர்வாக அமர்ந்திருப்பவர்களுக்கு மிளகுப் பொடியைத் தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை தர வெப்பத்தை உண்டுபண்ணி மன எழுச்சியைத் தரும். அடிக்கடி வரும் காய்ச்சலுக்குத் தர நலமாகும். 7 மிளகு 200 மி.லி. அளவு தண்ணீரில் தட்டிப்போட்டு, காய்ச்சி, 50 மி.லி. அளவு சுருக்கி வடித்துத் தேன்கலந்து குடித்தால் குளிர் காய்ச்சல் மற்றும் சளி கட்டுப்படும்.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டும் இரச கந்தக மருந்துகளின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 1 பிடி கணுநீக்கிய அருகன் வேருடன் 7 மிளகு தட்டிப்போட்டு 500 மி.லி. அளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி 50 மி.லி. அளவாகச் சுருக்கி வடிகட்டிப் பசு வெண்ணை சிறிது கலந்து குடிக்க மருந்துகளின் நச்சுத்தன்மை முறிந்து நலமடைவார்கள்.
பூரான், சிறுபாம்புக்கடி, வண்டுகடி போன்ற நச்சுக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 6 மணிக்கும் கற்பூர வெற்றிலையில் 5 மிளகு மடித்து மென்று சாப்பிட நச்சு முறிவு ஏற்படும்.
புளுவெட்டினால் முடியுதிர்ந்த இடத்தில் மிளகு, உப்பு, சின்ன வெங்காயம் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால் முடிவளரும். மிளகு 100 கிராம் பெருஞ்சீரகம் என்னும் சோம்பு 140 கிராம் பொடியாக வறுத்தரைத்து, அரை லிட்டர் அளவு தேனுடன் கலந்து வைத்துக்கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மூல நோய் தீரும்; நன்கு செரிக்கும்.
எல்லா உணவுவகைகளிலும் காரச் சுவைக்கு மிளகாயை விலக்கி மிளகைக் கூட்டிப் பயன்படுத்துவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம், சளி, காய்ச்சல், நச்சு, கபம் நன்கு செரிமானமாகி நலமுடன் வாழலாம்.

------------------------------------------------------------------
நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய் 

ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.
பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.
இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.
ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க.
நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.

No comments: