Thursday, 26 February 2015

வாழைப்பழ முட்டை தோசை


தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த வாழைப்பழம்.....1 முட்டை............................................2 சர்க்கரை / உப்பு............................தேவையான அளவு சமையல் எண்ணெய்....................தேவையான அளவு



ுதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உழைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். பிறகு இதில் உப்போ / சர்க்கரையோ சேர்த்து இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து கலந்துக்கொள்ளவும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு தோசைகளாக ஊற்றி லேசாக எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். ஆரோக்கியமான வாழைப்பழ முட்டை தோசை தயார்


உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள வாழைப்பழ முட்டை தோசை காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால் வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் நல்லது. உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் இதனை உட்கொள்வதும் நல்லது. 

No comments: