Wednesday, 25 February 2015

Tamil Cooking

                            தால்மா

தேவையான பொருட்கள் :

ஊறவைத்து துவரம் பருப்பு, நறுக்கிய உருளை கிழங்கு, மஞ்சள் பூசணி, கேரட், வாழைக்காய், கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகத் தூள், எண்ணெய், மஞ்சள் தூள், உப்பு, நெய், காய்ந்த மிளகாய், பஞ்ச பூரணம் (கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு)
---------------------------------------------------------------------------------
தால்மா - செய்முறை:

1. முதலில் அடுப்பில் குக்கர் வைத்து தண்ணீர் சேர்த்து ஊறவைத்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்பு அதோடு நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
2. அதற்குள் பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்துக் கொள்ளவும்.
3. வானலியில் சிறிது எண்ணெய் காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து பொரித்ததும், பஞ்ச பூரணம், வெங்காயம் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு இடித்து வைத்த இஞ்சி, பூண்டு, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வேகவைத்த காய்கறி கலவையோடு கலந்து சிறிதளவு தண்ணீர், சீரகத்தூள், நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்பொழுது தால்மா தயார்.
--------------------------------------------------------------------------------- 


டாமாலு புலாவ் "
-----------------------------

தேவையான பொருட்கள் :
வேகவைத்த சின்ன உருளைக் கிழங்கு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வருத்த வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா தூள், நெய், பாலில் ஊறவைத்த குங்கும பூ, தயிர், பால், மிளகாய்த் தூள்.
--------------------------------------------------------------------------------
செய்முறை :

1. புதினா, கொத்தமல்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், நெய், பேபி பொடேடோ, வறுத்த வெங்காயம், நறுக்கிய புதினா, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.
3. குக்கரில் சிறிதளவு காய வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஹோல் கரம் மசாலாவை போடவும்.
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், ஏற்க்கனவே கலக்கி வைத்த உருளைகிழங்கு கலவையை அதில் சேர்க்கவும்.
4. கொதித்த தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அந்த நீரை, குக்கரில் உள்ள கலவையில் ஊற்றவும்.
5. நீர் கொதித்ததும் சிறிதளவு பால், பாஸ்மதி அரிசி, வறுத்த வெங்காயம், புதினா, பாலில் ஊறவைத்த குங்கும பூ, சிறிதளவு நெய் சேர்த்து, குக்கரை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
இப்பொழுது டாமாலு புலாவ் தயார்.

--------------------------------------------------------------------------------- 
பேச்சிலர் சமையல் :

பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள் "

சிக்கன் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 2ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் - 5
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் – தேவையான அளவு
பெப்பர் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை - பொடியாக வெட்டியது


செய்முறை:


• குக்கரில் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்.
• ஒரு நிமிடத்திற்குப் பிறகு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாய் வதக்கவும்.
• இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு கழுவிய சிக்கனை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்றாய் கிளறவும்.
• மசாலா சிக்கனில் நன்றாய் பிடித்தவுடன் குக்கரை மூடி வைக்கவும்.
• இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி விடவும்.
• வாணலியில் வெந்த சிக்கனுடன், பேப்பரை போட்டு நன்றாய் கிளறவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
பெப்பர் சிக்கன் தயார்!

No comments: