Saturday, 28 February 2015

சிக்கன் கைமா தோசை

பேச்சிலர் சமையல்

சிக்கன் கைமா தோசை

தேவையான பொருட்கள்: 

தோசை மாவு - 1 கப்
சிக்கன் அல்லது மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை - 1

செய்முறை...
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்.
• பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாகி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போதும் வரை நன்றாக வதக்கவும்.
• பின்னர் அதில் சிக்கன் அல்லது மட்டன் கொத்துக்கறியுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேக வைக்கவும்.
• தண்ணீர் சேர்க்க கூடாது.
• கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றி உதிரியாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
• தோசை கல் சூடானதும் அதில் மாவை ஊற்றி அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி அனைத்து பகுதிக்கும் நன்றாக பரப்பி விடவும்.
• சுற்றி எண்ணெய் விடவும்.
• பின்னர் தோசையின் மேல் கொத்துக்கறியை அனைத்து பகுதியிலும் படும்படி பரப்பி மேலே ஒரு தட்டால் தோசையை மூடி விடவும்.
• வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
• சீஸ் பிடித்தவர்கள் சீஸை துருவிக் கொண்டு தோசையை இறக்கும் போது கொத்துக்கறியில் மேலே தூவி தோசையை மடித்து பரிமாறவும்

No comments: