Friday, 23 September 2016

நீண்ட கூந்தலை பெற உதவும் முத்தான மூலிகைகள்!

இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பூந்திக்கொட்டை
நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கின்றன. வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம். உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
கரிசலாங்கண்ணி
கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும். முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.
வெந்தயம்
கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.
மருதாணி
கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக்கற்றாலை முக்கிய பங்காற்றுகிறது.
கடுக்காய், நெல்லிப் பொடி
முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.இதேபோல் ஜடமான்சி, குஷ்டா, கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, பிருங்கராஜ் கரிசிலாங்கண்ணி), நீர்பிரம்மி, அதிமதுரம், குந்துமணி, குடூச்சி, இவைகளின் களிம்பை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும்.

அழகுக்குறிப்புகள் - தலைமுடி பராமரிப்பு

தலைமுடி
முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.

தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்

தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.

தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.
பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.
பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.

முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.
அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள். சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.
சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.

பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது. நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்

Thursday, 22 September 2016

ஆவி பறக்க சாப்பிடும் பழக்கம் சரியானதுதானா?

சிலருக்கு எப்போதும் உணவுகளை சூடாக சாப்பிடுவது பிடிக்கும். சிலருக்கு ஆறியப் பின் சாப்பிடுவது பிடிக்கும், இவற்றுள் எது சிறந்தது.

‘மிதமான சூட்டில் உணவுகளை சாப்பிடுவதே நல்லது. கொதிக்க கொதிக்க உணவுகளை உள்ளே தள்ளினால் உணவுப் பாதையில் உள்ள மியூகோசா படலம் பாதிப்படையும். மியூகோசா படலம்தான் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாக குடலுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. 
 
உணவுப்பாதையின் உணவுக்குழல் ஆரம்பித்து குடல் வரை இருக்கிறது மியூகோசா படலம். இது பாது காப்பு அரணாகவும் விளங்குகிறது. சூடான உணவுகள் அதை பாதிப்படையச் செய்வதால் எளிதில் அல்சர் வர வாய்ப்புண்டு.
 
ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் அதுவே எதிர்காலத்தில் புற்று நோயாகவும் மாறலாம்.  வாயில் உணவை வைத்தவுடன் உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும். அங்கிருந்தே உணவு செரிமானத்துக்கான படிநிலைகள் ஆரம்பித்து குடலுக்கு செல்லும் போது முடிவடைகிறது. சூடான உணவுகள் சாப்பிட்டால்  செரிமானத்துக்கான படி நிலையிலும் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. வாயிலும் வயிற்றிலும் புண்களை வரவழைக்கும்.
 
குளிர்காலத்தில், உடல்நலம் இல்லாமல் இருக்கும் போது சுடுதண்ணீர் தான் குடிக்க வேண்டியிருக்கும். குடிக்கும் அளவுக்கு நன்றாக ஆற்றி, சூடு ஆறியவுடன் மட்டுமே குடிக்கவேண்டும். ஒருவருக்கு சூடாக இருப்பது இன்னொரு வருக்கு சூடாக இல்லாமல் இருக்கலாம். இவ்வளவு செல்சியஸ் சூட்டில் தான் குடிக்கவேண்டும் எனத் துல்லியமாக சொல்லவும் முடியாது.
 
உணவை தட்டில் கொட்டி சற்று ஆறியவுடன் சாப்பிடுவதே சிறந்தது. அதே போல காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் மியூகோசா படலம் பாதிப்படையும். காபியில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் மியூகோசாவை அழற்சி அடையச் செய்யும். எனவே, இரண்டு தடவைக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது நல்லது. அதையும் அளவான சூட்டில் குடிப்பதே பாதுகாப்பானது.”

ஊட்டசத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

உருளைக்கிழங்கில் எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
 
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
 
இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.
 
முகத்திற்கு பீளிச்சிங் போல செயல்படும்
 
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது.
 
செரிமானம்
 
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. 
 
உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? 
 
வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.
 
சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும்
 
எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

சிறுநீரகத்தைக் காக்க 8 பொன்விதிகள்

சிறுநீரக செயல் இழப்பு சிலருக்கு திடீரென்று ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் ஏற்படும். எப்படியிருந்தாலும் சிறுநீரகம் மிக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு ஆகும்.

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள் 
 
ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள் 
 
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள் 
 
புகைப் பிடிக்காதீர்கள் 
 
பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள் 
 
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் 
 
தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள் 
 
சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்துக்கள் நிறைந்த நூல்கோல்

1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.

2. புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
 
3. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.
 
4. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது. எடைக் குறைப்புக்கு உதவும் நூல்கோலில் கலோரிகள் குறைவு. இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக் குறைப்புக்கு உதவுகிறது.
 
5. நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
 
6. செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.
 
7. எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. காலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது. 6. வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் உள்ளன. 
 
8. உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும். கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.

அரிசி கழுவிய தண்ணீரில் உள்ள சத்துக்கள்

அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
 
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு குழந்தைகளுக்கு சுட வைத்த தண்ணீரை கொண்டு கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். இதனால் சீக்கிரமாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். அவை இன்றும் கிராம புறங்களில் பின்பர்றுகிறார்கள்.
 
அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவுபெரும். ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். 
 
தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்

முடி வேகமாக வளர தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாகவும் நீண்டும் வளரும்.

மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
 
முடி வளர:
 
தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
 
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
 
பொடுகை தவிர்க்க:
 
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவிகுளித்து வந்தால் பொடுகு வராது.
 
வேப்ப இலை மற்றும் துளசி இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
 
முடி உதிர்வதை தடுக்க:
 
வெந்தயம் மற்றும் குன்றிமணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 
நரைமுடி கருப்பாக:
 
நரைமுடி கருப்பாக உதவும் கீரை முளைக்கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்.
 
எண்ணெயுடன் நெல்லிக்கையை காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கருப்பாகும்.
 
முடி பளபளப்பாக:
 
அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.
 
5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துபின் குளிக்க முடி கருப்பாகி மினுமினுப்பாகும்.

பப்பாளி பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்...

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
 
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
 
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
 
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
 
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
 
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
 
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
 
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
 
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
 
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு என்றவுடன் எனக்கு முதலில் நினைவில் வருவது 'தண்ணீர்''
இப்பொழுது வெவ்வவேறு தண்ணீர் நாம் தினப்போழுதில் உபயோகிக்கின்றோம்  . போர் தண்ணீர், கிணற்று தண்ணீர் , corporation water மற்றும் பல . ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையுடையது. நீரில் உப்பு இருந்தால் முடி கொட்டும்.. chemical கலந்திருந்ததால்   பளபளப்புதன்மை குறையும். தண்ணீர் கிடைக்காத இந்த காலத்தில் இருக்கும் நீரை உபயோகப்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம் . இந்த நிலையில் நாம் நம் முடி பராமரிக்கும் முறையில் கடைபிடிக்கவேண்டிய நியதிகளைபார்ப்போம்  .

1. போர் தண்ணீரில் கடினத்தன்மை இருக்கும் , அதனால் இங்கு வெதுவெதுப்பான நீரை உபயோகப்படுத்தவேண்டும்  .
2.போர் thanneeraha இருந்ததால் முடிக்கு கட்டாயம் எண்ணெய் தடவி பின் சீயக்காய் அல்லது மென்மையான (without much lather ) இல்லாத ஷாம்பூ உபயோகிக்கவும் .
3.கடைசி mug மினரல் தண்ணீர் விட்டுகுளிப்பது .நலம்
4.2 துளி எலுமிச்சை சாறு அல்லது இருமுறை கொதித்து ஆறிய டீ தண்ணீரை ஒரு mug மினரல் தண்ணீரில் கலந்து அதை கடைசியாக  விட்டுக்கொள்ளவும் .

கிணற்று தண்ணீர் என்றால்
1. இதில்  உப்பு அதிகம் . முடி நிறையவே கொட்டும், அதனால் நல்ல தரமான வீட்டில் தயாரித்த herbal oil நிறைய தலையில் தடவி நன்கு ஊறியபின் நல்ல சீயக்காய் கொண்டு முடி அலசவேண்டும் .
2. சீயக்காயிற்கு இந்த கிணற்று நீரில் எண்ணெய் போகாது அதனால் ஒருமுறை நன்கு தேய்த்து அலசியபின் மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும்..இல்லையென்றால் சிறிது தரமான ஹெர்பல் ஷாம்பூ உபயோகிக்கலாம்  .எண்ணெய் நிறைய தடவவேண்டியது அவசியம்..
3.குளித்தவுடன் தண்ணீர் போக  தவுட்டிவிடவேண்டும்..
4. இங்கும் கடைசி mug எலுமிச்சை சாரு அல்லது டீ தண்ணீர் விட்டு அலசலாம் .

corporation water:
இதில் க்ளோரின் கலந்திருப்பதால் முடி dry ஆகும். இங்கும்  நாம் எண்ணெய் அதிகம் தடவி ஊறி குளித்தல் நலம்.. வாரம் 3 முறை தலை அலசலாம் .இங்கு முடி பிரவுன் நிறத்திற்கு விரைவில் மாறி பின் விரைவில் நரைத்துவிடும்..
நல்ல தரமான எண்ணெய் மிக மிக அவசியம்..

leave on chemical conditionr தவிர்ப்பது நலம் ஏனென்றால் இதில் ஆல்கஹால் சேர்ந்திருப்பதால் முடி மெல்லியதாக ஆகிவிடும்  விரைவில் ..எப்பொழுதும் எலுமிச்சை சாறு அல்லது டீ  தண்ணீர் conditioner உபயோஹிப்பது நலம்..

நீண்ட கூந்தல்

நீண்ட கூந்தல்  பரம்பரை விஷயம் என்றாலும்
இருக்கும் கூ ந்தலை நன்றாஹ  பேணுவது நம் கையில்தான் இருக்கிறது .

1. முதலில் முடியை நல்ல சீப்பு கொண்டு 2 வேளை யும் நன்கு வா ரிவிட வேண்டும் . avoid plastic comb . நல்ல தரமான wooden comb பயன்படுத்தவும் . விலை சற்று கூட இருந்தாலும் இதுதான் basic step .
2.வாரம் 2 முறை minium headbath எடுக்கவும் .எப்படி தலைக்கு குளிக்கவேண்டும் என்பதை நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன் .
3. முடியை இயற்கையாஹ உலரவிடவும். அதாவது துண்டால் மெ து வாஹ தவுட்டவும். a BIG NO to hair dryer
4நமது தலைமுடி மிஹவும் மென்மையானது மேலும் மாதம் 1/2 இன்ச் தான் வளரும் அதுவும் பரம்பரையை பொருத்தது ஆதனால் மிஹ      மிஹ மேன்மயாஹ கையாளவேண்டும் .
5. மாதம் ஒருமுறை சிறிது நுனி வெட்டிவிடவேண்டும் .
6.வீட்டில் தயாரித்த சீயக்காய் பொடி அல்லது நல்ல தரமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவேண்டும் .(சீயக்காய் தயாரிக்கும் முறை நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
7.மிஹ முக்கியமானது என்னவென்றல் ஷாம்பூ போடும்முன் கட்டாயம் முடிக்கு எண்ணெய் application செய்யவேண்டும் . இல்லையென்றல் முடி கொட்டும்.(எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி நான் வரும் பதிவுகளில் எழுதுகிறேன் )
8.தலைமுடி எப்பொழுதும் dry யாக இருக்ககூடது.
9. aircondition அறையில் வெஹு நேரம் இருந்தாலும் முடி கொட்டும்.
10. Direct வெயிலிலும் முடியை expose செய்யகூடாது.

தொப்பையைக் குறைத்திட உதவும் எளிய உணவு முறைகள்

தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
அத்தகைய உணவுகள் என்னவென்று  பார்ப்போம்.
ஓட்ஸ்
ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.
ஆரஞ்சு, எலுமிச்சை
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.
மீன்
மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
தேன்
தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.
கிரீன் டீ
கிரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் கிரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
தானியங்கள்
தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க தானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.
கொழுப்பு நீக்கிய பால் உணவுகள் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.
இஞ்சி
இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்க என்ன செய்ய வேண்டும்..

பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.
நகம் பட்டாலே வடு விழுந்துவிடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும்.
முக‌ப்பரு வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்குவத‌ற்கு மு‌ன்பு, ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்த ‌பிறகு அ‌தி‌ல் கை வை‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் பரு‌க்க‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த‌ம் வெ‌ளியாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கிறது. பொதுவாக பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அது மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளையான ‌திரவ‌த்தை எடு‌த்து ‌விடுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அ‌திலு‌ம் ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் அவை படாம‌ல் எடு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது.
மேலு‌ம், பருவை ‌நீ‌க்குவது ‌எ‌ன்பதை கவனமாக செ‌ய்ய வே‌ண்டு‌ம். பருவை கைகளா‌ல் ‌கி‌ள்‌ளி எடு‌த்து‌விடு‌கிறோ‌ம். அ‌தி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியான ‌பிறகு ர‌த்த‌ம் வரு‌ம். அதனை துடை‌த்து‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு அ‌ப்படியே ‌வி‌ட்டு‌விட‌க் கூடாது. அ‌ப்படி ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் பரு‌க்க‌ள் பரவு‌கிறது.
பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்‌கியது‌ம் உடனடியாக அதனை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அ‌தி‌ல் ஏதாவது ஒரு பே‌ஸ் பே‌க்கை (‌க்‌ரீ‌ம்) போட வே‌ண்டு‌ம். அ‌ப்படி போடா‌வி‌ட்டா‌ல், பரு‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட துளை‌‌க்கு‌ள் தூசு, துக‌ள்க‌ள் போ‌ய் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம்.
முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். 
அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.
அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பருவை ம‌‌ட்டு‌ம் ‌நீ‌க்‌கி‌வி‌ட்டா‌லு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ள் இரு‌ந்து ‌சீ‌‌ழ் போ‌ன்ற ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம். அதனை எ‌வ்வளவுதா‌ன் எடு‌க்க முடியு‌ம். ஒரு வேளை அது சரும‌த்‌தி‌ற்கு அடி‌யிலேயே த‌ங்‌கி‌வி‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். அ‌திகமாக எடு‌த்தாலு‌ம் பரு இரு‌ந்த இட‌த்‌தி‌ல் வடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். 
எனவே பருவை அழகு‌க் கலை ‌நிபுண‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வதை ‌விட, அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்க‌ள் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்வதுதா‌ன் ந‌ல்லது.

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள்

நாம் காலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை  இரண்டுமே தவறானவை.

உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல  வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும்.  
 
சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்று பகுதிக்குச்  செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டு விட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
 
உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது
 
வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
 
தேநீர் குடிக்கக் கூடாது
 
தேயிலை அதிக அளவு  அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.
 
புகை பிடிக்கக் கூடாது
 
உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
 
இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது
 
சாப்பிட்ட பிறகு  லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட  உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
 
சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது ஏன்?
 
சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில்  உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.
 
சாப்பிட்ட உடனே நடக்கக் கூடாது. ஏன்?
 
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள  சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.
 
சாப்பிட்டதும் தூங்கக் கூடாது
 
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்  நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

முடி உதிர்வதை தடுத்து நன்றாக வளர தீர்வு!

நம் அழகை வடிவமைப்பதில் முக்கிய பங்குவகிப்பது தலை முடி. இது குறித்த கவலை பலருக்கும் உண்டு, சிலருக்கு சீப்பை எடுத்து தலை வாரினாலே முடி கொத்து கொத்தாக உதிரும். நாளுக்கு நாள் முடி உதிர்தல் அதிகமாகி தன்னம்பிக்கையே இழந்துவிடுவோம். இதற்கு காரணம் நம்முடைய தலைக்கு போதிய அளவு புரோட்டீன் சத்து கிடைக்காததே. அப்படிப்பட்டவர்களின் மனக்கவலையை போக்க எலுமிச்சையால் முடியும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை தலையில் பூசி, காய்ந்ததும் ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, கருகருவென வளரத் தொடங்கும்.

உங்கள் கூந்தல் பளபளவென மின்ன சீயக்காயுடன் எலுமிச்சை தோலையும் சேர்த்து அரைத்து பயன்படுத்தி வந்தால் உங்கள் கூந்தலில் நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

சீயக்காய் பொடி தயாரிக்கும் முறை:

1 கிலோ சீயக்காயுடன் உலர்ந்த எலுமிச்சை தோல்- 50 கிராம்
முழு பயறு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 கிலோ
பூலான் கிழங்கு - 100 கிராம்
வெட்டிவேர்- 10 கிராம்
இவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி வாரம் இரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, இந்த பொடியைப் போட்டு உங்கள் கூந்தலை அலசினால், கூந்தல் மிருதுவாக மாறுவதோடு, பளபளவென மின்னும்.

சீயக்காய் பொடி தயாரிக்கும் முறை:

சீயக்காய் பொடி தயாரிக்கும் முறை:
1 கிலோ சீயக்காயுடன் உலர்ந்த எலுமிச்சை தோல்- 50 கிராம்
முழு பயறு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 கிலோ
பூலான் கிழங்கு - 100 கிராம்
Marikolunthu – 20 sticks
dried malligai – 150 gms
வெட்டிவேர்- 10 கிராம்
Karisalankkani leaf – 100 gms
Dried nellikkai – 100 gms

இவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி வாரம் இரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, இந்த பொடியைப் போட்டு உங்கள் கூந்தலை அலசினால், கூந்தல் மிருதுவாக மாறுவதோடு, பளபளவென மின்னும்.
எக்காரணம் கொண்டும் பிறர் பயன்படுத்திய சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். முடியைக் குறைவாக வெட்ட வேண்டும். ஒரு வருடமாவது பொறுத்திருக்க வேண்டும். இன்று எண்ணெயைத் தேய்த்துவிட்டு நாளை முடி வளரவில்லையே என்று வருத்தப்படக் கூடாது.

வீட்டிலேயே சீயக்காய் தயாரிக்க

தேவையான பொருள்கள்

சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். - 100 கிராம்
எலுமிச்சை தோல் காய வைத்தது. - 25
பாசிப்பருப்பு  - கால் கிலோ
மருக்கொழுந்து - 20 குச்சிகள்
மல்லிகை  பூ  காய வைத்தது  -  200 கிராம்
கரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து 
வைத்துக் கொண்டு    ஷாம்பூக்கு   பதில்  வெறும் தண்ணீர் விட்டு பேஸ்ட்   
மாதிரி    கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம்..   இந்த சீயக்காய் ஷாம்பூ போல 
நுரை வரும்  பொடுகை நீக்கும்   முடி கருப்பாகும். முடி ஈரப்பதத்தோடு 
இருக்கும்  முடி வறண்டு போகாது