Thursday, 22 September 2016

முடி உதிர்வதை தடுத்து நன்றாக வளர தீர்வு!

நம் அழகை வடிவமைப்பதில் முக்கிய பங்குவகிப்பது தலை முடி. இது குறித்த கவலை பலருக்கும் உண்டு, சிலருக்கு சீப்பை எடுத்து தலை வாரினாலே முடி கொத்து கொத்தாக உதிரும். நாளுக்கு நாள் முடி உதிர்தல் அதிகமாகி தன்னம்பிக்கையே இழந்துவிடுவோம். இதற்கு காரணம் நம்முடைய தலைக்கு போதிய அளவு புரோட்டீன் சத்து கிடைக்காததே. அப்படிப்பட்டவர்களின் மனக்கவலையை போக்க எலுமிச்சையால் முடியும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை தலையில் பூசி, காய்ந்ததும் ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, கருகருவென வளரத் தொடங்கும்.

உங்கள் கூந்தல் பளபளவென மின்ன சீயக்காயுடன் எலுமிச்சை தோலையும் சேர்த்து அரைத்து பயன்படுத்தி வந்தால் உங்கள் கூந்தலில் நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

சீயக்காய் பொடி தயாரிக்கும் முறை:

1 கிலோ சீயக்காயுடன் உலர்ந்த எலுமிச்சை தோல்- 50 கிராம்
முழு பயறு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 கிலோ
பூலான் கிழங்கு - 100 கிராம்
வெட்டிவேர்- 10 கிராம்
இவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி வாரம் இரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, இந்த பொடியைப் போட்டு உங்கள் கூந்தலை அலசினால், கூந்தல் மிருதுவாக மாறுவதோடு, பளபளவென மின்னும்.

No comments: