Tuesday, 7 July 2015

காய்கறி வாங்குவது எப்படி?

காய்கறி வாங்குவது எப்படி?
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கின் மேல் தோலை லேசாகச் சீவியவுடன் கெட்டியாகவும் பளபளப்புடனும் பளிச்சென்று இருக்க வேண்டும். பெரிய கிழங்கே நல்லது. உருளைக்கிழங்கை அமுக்கினால் அமுங்கக் கூடாது. இறுகலாக இருக்க வேண்டும்.
காரட்: காரட் இலைகளுடன் சேர்ந்திருக்கிற புதிய காரட்டுகளையே வாங்க வேண்டும். காரட் நல்ல நிறத்துடனும் நல்ல வடிவத்துடனும் பளபளப்பாக இருக்க வேண்டும். மெல்லிதாகவும் நீர்ப்பிடிப்புடன் கனமாகவும் இருக்க வேண்டும். பருமனான முற்றிய காரட்டுகள் மரம் போன்று வளைந்து கொடுக்காத தன்மையுடன் சமைப்பதற்கு உபயோகமற்று இருக்கும்.
காலிஃபிளவர்: காலி ஃபிளவர் ஓரத்தில் இலைகளுடன் நடுவில் பூக்களுடன் இருக்க வேண்டும். புதிதாகவும், அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டும். நல்ல வெண்மையாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறமாகவும் ஆங்காங்கே புள்ளிபுள்ளியாகக் கறைகள் தென்பட்டால் அதை வாங்க வேண்டாம். அதனுள்ளே புழுக்கள் இருக்கும்.
பீட்ரூட்: பீட்ரூட்டை மிகவும் பெரிய சைஸில் வாங்கக் கூடாது. சிறிய சைஸில் இருக்கும் பீட்ரூட்டில் அதிகச் சத்தும் அதிக ருசியும் அடங்கியிருக்கும்.
பீட்ரூட்டை அரிந்தால் உள்ளே நல்ல சிவப்பு நிறமாக இருக்க வேண்டும்.
முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸ் இலைகள் ஒன்றோடொன்று நெருக்கமாக அடர்த்தியாக கனமாக பச்சைப்பசேலென்ற நிறத்துடனும் இருக்க வேண்டும். கோஸ் கெட்டியாக இருக்க வேண்டும்.

No comments: