Tuesday, 7 July 2015

வீட்டுத்தோட்டத்தில் வெந்தயக்கீரை

வீட்டுத்தோட்டத்தில் வெந்தயக்கீரை ..
==================================
வெந்தயக்கீரை ....வீட்டுத்தோட்டம்
நாம் தூக்கியெறியும் கோணிப்பை ,பிளாஸ்டிக் டப்பாக்கள், வாட்டர் பாட்டில்கள், பாப்கார்ன் டப்பாக்கள் ,அரிசி பைகள் ,இவற்றில் எல்லாம் கொஞ்சம் மண்ணும் இயற்கை உரமும் போட்டால் வீட்டிலேயே வளர்க்கலாம் வெந்தயக்கீரை .மிக முக்கியம் பையோ ,பிளாஸ்டிக் பக்கெட்டோ எதுவாக இருப்பினும் அடிப்புறத்தில் நீர் வெளியேற துளைகள் இட வேண்டும் மேலும் ரெண்டு செங்கல்கள் மீது பை,தொட்டிகளை வைக்க வேண்டும் ..இது நீர் தேங்காதிருக்க மற்றும் நத்தை போன்ற பூச்சிகள் செடிகளை அண்டாமல் காக்க.
வெந்தயத்தை முதல் நாளிரவே தண்ணீரில் ஊறப்போட்டு வைத்து மறுநாள் விதைக்கலாம். தொட்டிகளில் முக்கால் பாகம் உயரம் அளவு மண் நிரப்பி நிரப்பி ஊறிய வெந்தயத்தைத் தூவி விட்டு, அதன் மீது மண்ணால் மேற்புறம் மூட வேண்டும் மூன்று இலிருந்து நாலு நாளில் முளை விட்டு செடி வளரும் ..
ஊற வைக்காமல் நேரடியாக வெந்தையத்தை தொட்டியில் தூவினாலும் முளைக்கும் ஆனால் ஒரு வார காலமெடுக்கும் .தட்பவெப்ப சூழலை பொறுத்து ....வளர்ச்சியை விரைவில் தூண்டவே தண்ணீரில் ஊற வைக்க காரணம்.

No comments: