Tuesday, 30 June 2015

மைதா சீடை

மைதா சீடை
தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி!!!

Monday, 29 June 2015

சேனை கிழங்கு வறுவல்

சேனை கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
சேனைகிழங்கு - 350கிராம்
அரைக்க
தேங்காய் - கால் மூடி
பூண்டு -3பல்
பட்டை,பிரிஞ்சி இலை - சிறிது
கிராம்பு - 2 (சிறியது)
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -2ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிது

செய்முறை
சேனைக் கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சர்க்கரை சேர்த்து வேக வைத்த கிழங்கையும் சேர்த்து பிரட்டிவிடவும்.
மிதமான சூட்டில் மசாலாவின் தண்ணீர் சுண்டும்வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சேனைக் கிழங்கு வறுவல் ரெடி.

கர்ப்பிணிகள் புளிப்பாக சாப்பிடலாமா?

கர்ப்பிணிகள் புளிப்பாக சாப்பிடலாமா?
மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்று யாருக்கும் தெரிவதில்லை.
‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு.
கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாகதயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’

ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள்

ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள்
* ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
* தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.......!
* தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
* குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
* மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

Sunday, 28 June 2015

துளசி

துளசி
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.
துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.

இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.
இறாலில் உள்ள சத்துக்கள்
கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.
இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
செலினியம்(Selenium), புரம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கொலஸ்ட்ரால் – 43 Mg
சோடியம் – 49 Mg
புரதம் – 4.6 Mg
கால்சியம் – 8.6 Mg
பொட்டாசியம் – 40 Mg
நன்மைகள்
செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது.
வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால், இதில் உள்ள இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து எலும்புகளை வலுப்படுத்துகின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் உள்ள மக்னீசியம் சத்து இரண்டாவது நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.
இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
செரிமானத்தை அதிகரிக்கும் :-
உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.
எடை குறைவு :-
உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.
உயர் இரத்த அழுத்தம் :-
உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது :-
உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
இதய நோயைத் தடுக்கும் :-
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.
புற்றுநோயைத் தடுக்கும் :-
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
எலும்புகளை வலிமையாக்கும் :-
ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.
நீரிழிவிற்கு நல்லது :-
உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.
இரத்த சோகையை தடுக்கும் :-
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.
இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் :-
அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.

Saturday, 27 June 2015

இளநரையை போக்கும் எளிய மூலிகை தைலம்!

இளநரையை போக்கும் எளிய மூலிகை தைலம்!

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.
போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.
பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய் :
தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

வாணலில் எண்ணெய்யை ஊற்றி அது நன்றாக காய்ந்திருக்கும் போது ஒரு கோலி குண்டு அளவுக்கு புளியைஉருட்டி போட்டுவிடுங்கள். பின் அது கருகியதும் அதை அப்ப‍டியே கரண்டியால் எடுத்து தூர எறிந்து விடவும்.  இப்போது அந்த காய்ந்த எண்ணெய்யில் பலகாரங்களை செய்து பாருங்கள். அந்த பலகாரங்களில் ஒரு போதும் எண்ணெய்க் காறல் அடிக்காது. மேலும் இதன் சுவையும் அதிகரித்திருப்ப‍தை நீங்கள் உணரலாம்

Thursday, 25 June 2015

டின் மீன் கறி

டின் மீன் கறி
*டின் மீன்- 1
*வெங்காயம்- 1
*பச்சை மிளகாய் -3
*தக்காளி -2
*உள்ளி/வெள்ளை பூண்டு- 4
*கறிவேப்பிலை -15 இலைகள்
*மிளகாய் தூள்- 2 மே.க
*மல்லி தூள் -1 மே.க
*மஞ்சள் தூள் -1/2 தே.க
*சின்ன சீரகம் -1/2 தே.க
*கடுகு -1/2 தே.க
*எண்ணெய்- சிறிதளவு
*நீர் -1 கோப்பை
*உப்பு -தேவையான அளவு
1. முதல்ல டின் மீனை வலை போட்டு ஒரு கடையில இருந்து பிடிச்சிட்டு வரணும்.
2. வெங்காயத்தை தோலுரிச்சு, நீளமாக வெட்டி எடுக்கணும். அதோட மிளகாயையும் நான்காக நீளவாக்கில் வெட்டி எடுக்கணும்.
3. இப்போ மீதி இருக்கிற தக்காளியை வெட்டணும்னு நான் சொல்லுவேன்னு எதிர்பாக்கிறிங்களா? அப்படின்னா நீங்க இன்னமும் சமையலில் ஒரு அப்பிராணி, இல்லைன்னா நீங்க சமையல்ல ஒரு புலி.[கவனம்:வலையில் புலி எதிர்ப்பாளர்கள் அதிகம்]
- தக்காளியை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.
4. உள்ளியை தோல் உரித்து, விழுதாக அரைத்து எடுங்க. இதோட ஆயத்த வேலைகள் முடிந்தது. இனி:
5. அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு சட்டியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்குங்க.
6. கடுகை முதலில் போட்டு வெடிக்க விடவும். பின்னர் முறையே சீரகம்,அரைத்த உள்ளி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு நன்றாக வதக்குங்க. நன்றாக வதங்கி வரும் போது சட்டியில் இருக்கும் கலவை அரைத்த விழுது போல வந்திருக்கும்.
7. இந்த கலவையோடு முதலில் மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு அவிய விடுங்க.பின்னர் தூள்களையும் உப்பையும் நீரையும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்க.

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்! -சென்னை, ‘ஹோம் எக்ஸ்னோரா’வின் பிரசிடென்ட் இந்திரக்குமார்...

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!
வீட்டை என்னதான் சுத்தமாகப் பராமரித்தாலும், எவ்வளவு பணம் செலவழித்து அலங்கரித்தாலும்... வீட்டுக்குள் ஒரு செடி இருந்துவிட்டால், அது கண்களுக்குத் தரும் குளிர்ச்சியே தனி! வீட்டுக்குள் செடிகள் வளர்க்கும்போது மண்ணிடுவது, உரமிடுவது போன்ற விஷயங்களைக் கையாள்வது தொடர்பாக வழிகள் பல சொல்கிறார் சென்னை, ‘ஹோம் எக்ஸ்னோரா’வின் பிரசிடென்ட் இந்திரக்குமார்...
வழி 1: வீட்டில் செடி வளர்க்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. கடையில் இருந்து வாங்கி வரும் செடியை தொட்டியில் நடுவதற்கு முன், அந்த மண்ணோடு கரும்புச்சக்கையையும் சேர்த்து கலந்து செடியை நட்டால், சில நேரங்களில் தண்ணீர் விடத் தவறினாலும், நீரை உறிஞ்சி தக்கவைக்கவல்ல கரும்புச் சக்கையால், செடிக்கு தொடர்ந்து நீர் கிடைக்கும். சாலையோரங்களில் இருக்கும் கரும்பு ஜூஸ் கடைகளில் கிடைக்கும் சக்கைகளே போதுமானது.
வழி 2: செடிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வெளியில் வைத்து, இயற்கையான காற்றோட்டத்தில் தண்ணீரால் கழுவினால் அல்லது வாட்டர் ஸ்பிரே செய்தால்... செடியில் உள்ள தூசுகள் நீங்கி பார்க்கச் செழிப்பாக இருக்கும்.
வழி 3: சமையல் கழிவுகளை நேரடியாக தொட்டியில் போட்டால், கொசுத் தொல்லை ஏற்படும். மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளும் அதைக் கிளறிவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கவும்.
வழி 4: வீட்டில் செடி வளர்ப்பது குறித்த தயக்கம், உரம். வீட்டிலேயே சமையல் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் செய்யலாம். இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து, ஒன்றில் மக்காத குப்பைகளைச் சேருங்கள். மற்றொன்றில் காய்கறிக்கழிவுகளை இட்டு, மாட்டுச்சாணம் கலந்துவிட்டால்... உரம் ரெடி! மாட்டுச்சாணம் கிடைக்காத வர்கள் வறட்டிகளை வாங்கி தூள் செய்துகொள்ளலாம்.
வழி 5: மீன் கழிவை செடிக்கு உரமாக்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மீன் கழுவிய தண்ணீரையோ, மீன் கழிவுகளையோ நேரடியாக தொட்டியில் கொட்டினால் செடி கருகி இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. 100 கிராம் மீன் கழிவுடன் சம அளவு வெல்லம் (எந்த வெல்லமானாலும் சரி) கலந்து ஒரு தொட்டியில் வைத்துவிட வேண்டும். இதைக் கிளறிவிட அவசியம் இல்லை. 40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அது உரமாகி இருக்கும். ஒரு ஸ்பூன் உரத்துக்கு 50 ஸ்பூன் தண்ணீர் கலந்து செடிகளில் விட வேண்டும்.
வழி 6: செடிகள் செழிப்பாக வளர மற்றொரு வழி, மண்புழு உரத்தை தண்ணீரில் கலந்து கரைத்து செடிகளில் இடலாம்.
வழி 7: சூரிய ஒளி கிடைக்கும்படி செடிகளை ஜன்னல் அருகில் வைப்பது சிறந்தது. ‘வாஸ்து பிளான்ட்’ என்று அழைக்கப்படும் மூங்கில் செடிக்கு அதிகம் தண்ணீர் ஊற்ற வேண்டி இருக்கும். இதுவே, ‘அரிக்கா பாம்’ (Areca Palm) வகைச் செடிகள் மற்றும் மணிபிளான்ட் போன்ற செடிகளுக்கு மிகுதியான பராமரிப்பு தேவையில்லை என்பதால், இவையே இன்று பெரும் பாலானவர்களின் சாய்ஸ்!

கிச்சன் கிளினிக்

கிச்சன் கிளினிக்

ரு குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்குவதே சமையல் அறையில்தான். இது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அதில் நாம் கவனமாக இருக்கிறோமா, எப்போதும்?
 நம் சமையல் அறையைக்  கவனமாகவும் கச்சிதமாகவும் எப்படிப் பராமரிக்கலாம்?
சமையலறை சுவருக்கு அடிக்கிற பெயின்ட், பதிக்கிற டைல்ஸ் எல்லாம் வெள்ளை நிறத்தில் 'பளீர்’ என இருக்கட்டும். அப்போதுதான், அறையில் படியும் தூசி, எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை கண்ணுக்குத் தெரியும். உடனுக்குடன் அதை சுத்தம் செய்யவும் முடியும்.
சமையலறைப் பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூமுக்கு நீல நிற பெயின்ட் அடித்தால் பூச்சிகள் அண்டாது. நீல நிறம் என்றால், பூச்சிகளுக்கு அலர்ஜி.
'ரெக்ஸின் ஷீட்’ வாங்கி வீட்டு ஷெல்ஃப்களில் விரித்துவைக்கலாம். அலமாரியும் அழுக்குஆகாது; பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அவ்வப்போது மிகச் சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். சிறிதளவு தண்ணீரில் வினிகரைக் கலந்து ஷெல்ஃபைத் துடைத்தால் எறும்புத் தொல்லை இருக்காது.
கேஸ் ஸ்டவ்வில் உள்ள பர்னர் ஹீட்டரில் இருந்து பி.டி.எஃப்.இ. (பாலிடெட்ரா ஃப்ளோரோ எத்திலின்) என்ற நச்சு வெளியாகிறது. முடிந்த வரை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம், செராமிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதன் தீவிரத்தைக் குறைக்கலாம். எக்ஸாஸ்ட் ஃபேனைப் பொருத்திவிட்டால் சமையல் அறையில் தேங்கி நிற்கும் நச்சு வாயுவும் போயே போச்சு.
ஃப்ரிஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களைச் சுத்தம்செய்ய, அரை டம்ளர் தண்ணீரில் சிறிது டூத் பேஸ்ட்டைப் போட்டுக் கரைக்கவும். இந்தத் தண்ணீரில் ஒரு ஸ்பாஞ்சை நனைத்துப் பிழிந்து பொருட்களைத் துடைக்கவும். பிறகு தண்ணீரில் அலசிக் கழுவிய பிறகு, உலர்ந்த துணியில் துடைத்தால் பொருட்கள் சூப்பர் சுத்தம்.
ஃப்ரிஜ்ஜில், சமைத்த பொருட்களைத் திறந்துவைக்கும்போது, கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அந்தப் பொருட்களில் ஒட்டிக்கொள்ளும். அதனால், மூடிவைப்பதே நல்லது. ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் வைப்பதும் உத்தமம். வெங்காயம் பாக்டீரியாக்களை இழுக்கும் ஆற்றல் பெற்றது. ஓர் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி வைத்துவிட்டால், வெங்காய வாசமும் வீசாது.
மிக்ஸி ஜாரை சரியாகக் கழுவாதபோது, அதன் மூடிக்குள் படியும் மசாலாப் பொருட்களில் பாக்டீரியாக்கள் தஞ்சம் புகுந்துவிடும். அதனால், மிக்ஸியைப் பயன்படுத்தியவுடன், அதில் தண்ணீரை ஊற்றி, ரின்ஸ் செய்துவிட வேண்டும். மிக்ஸியும் சுத்தமாவதுடன் பிளேடுகளும் கூர்மையாகும்.
எண்ணெய் ஊற்றிவைக்கும் பாட்டில்களில் பிசுக்கு ஏறியிருந்தால், பாட்டிலைத் தண்ணீர் ஊற்றி  இறுக மூடி, அரிசி மாவைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். பிறகு உலர்ந்த துணிகொண்டு துடைத்தால் பிசுபிசுப்பு போயே போச்சு.
தேங்கிய தண்ணீரும் இருட்டும்தான் புழு, வண்டு, கரப்பான் பூச்சிகள் குடியிருக்கக் காரணம். எப்போதும் சமையலறையை வெளிச்சமாகவும், ஈரம் இல்லாமலும் வைத்துக்கொள்ளுங்கள்.
சமையலறையில் ஆங்காங்கே ஜாதிக்காயைப் போட்டுவைத்தால், கரப்பான் பூச்சிகள் நெருங்காது.
அரிசியில் வரும் வண்டு, புழுக்களை விரட்ட, புதினா, காய்ந்த கறிவேப்பிலையைக் காயவைத்துத் தூளாக்கி, 5 கிலோ அரிசிக்கு 25 கிராம் அளவில் போட்டுவைக்கலாம். சமையலும் சுவையாக இருக்கும்.
பயறு வகைகளை அப்படியே வைக்காமல், மிதமான சூட்டில் வறுத்து, ஆறவைத்து டப்பாக்களில் அடைக்கலாம். புழு, பூச்சிகள் வராமல் நெடுநாள் இருக்கும்.
ரவை, மைதா போன்ற மாவுப் பொருட்களில் நாலைந்து கிராம்புகளைப் போட்டுவிடுங்கள். புழு, பூச்சிகள் குட்பை சொல்லிக் கிளம்பிவிடும்!

Tuesday, 23 June 2015

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சந்தைகளில் பல்வேறு hair remover, losans ஆகியவை விற்கப்படுகின்றன. ஆனால் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளை மனதில் கொள்ள வேண்டும்.
பிறகு என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இயற்கையான முறையே எப்போதும் சிறந்தாக இருக்கும்.
மஞ்சளின் மகிமையை அறியாதவர்கள் யாரும் இல்லை. இது முகத்தில் மட்டுமல்ல கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்க பயன்படுகிறது.
தேவையற்ற முடிகளை நீக்க:
* கஸ்தூரி மஞ்சளை பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசி வர, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மறையும். கஸ்தூரி மஞ்சள் மூலிகை கடைகளில் அரைத்தே விற்பனை செய்யப்படுகிறது.
* மஞ்சளுடன் பப்பாளிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் பொலிவு பெறும்.
* பசும்பாலுடன் பாசிப்பயறு தோலை கலந்து அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறைந்து முகம் பளபளக்கும்.
* சாதாரண மஞ்சளை இரவு தூங்கும் போது அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு, காலை இளஞ்சூடான நீரில் கழுவி வந்தால் படிப்படியாக முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

Baked Bread Rolls

Ingredients

10 whole wheat bread slices
melted butter for greasing and brushing

For The Stuffing


2 tsp oil
2 tbsp finely chopped spring onions with the greens
2 tbsp finely chopped capsicum
2 tbsp grated carrot
1/4 cup finely chopped cabbage
1/2 cup boiled whole wheat noodles , roughly chopped
1/4 cup finely chopped paneer (cottage cheese)
1 tsp soy sauce
1 tsp schezuan sauce
a pinch of sugar
salt and freshly ground black pepper (kalimirch) to taste


Method 
For the stuffing

  1. Heat the oil in a broad non-stick pan, add the spring onions, capsicum, carrots and cabbage and sauté on a medium flame for 1 to 2 minutes.
  2. Add the noodles, paneer, soya sauce, schezuan sauce, sugar, salt and pepper and mix well. Keep aside.

How to proceed

  1. Remove the crust from the bread slices and roll each using a rolling pin.
  2. Place a rolled bread slice on a clean, dry surface and spread 1 tbsp of the prepared stuffing at one end of the bread slice and roll it up tightly.
  3. Apply some water at the edges and press to seal the stuffing.
  4. Repeat steps 2 and 3 to make 9 more rolls.
  5. Place the rolls on a greased baking tray, brush little butter evenly on top of the bread rolls and bake in a pre-heated oven at 200ºc (400ºf) for 15 minutes.
  6. Turn them over and bake again for 5 more minutes.
  7. Serve immediately.

Kid-Friendly Snack Recipes

Coconut Cashew Butter Bonbons

Hands-On Time 
 
15 
minutes, 
 
Total Time 
 
15 
minutes 
Makes 12

Ingredients

cup 
crisp rice cereal
1/2 
cup 
cashew butter
tablespoons 
pure maple syrup
1/4 
teaspoon 
fine sea salt or table salt
1/4 
cup 
unsweetened shredded coconut

Directions

  1. Mix together the cereal, cashew butter, maple syrup, and salt in a medium bowl. Form the mixture into 12 1½-inch balls. Roll the balls in the coconut. Refrigerator in an airtight container for up to 5 days.


Eda-Mommy Dip




Hands-On Time 
 
minutes 
 
Total Time 
 
minutes 
Serves 2

Ingredients

2/3 
cup 
shelled edamame
1/2 
ripe avocado
basil leaves
tablespoon 
olive oil
1/2 
teaspoon 
lemon zest plus 1 tablespoon lemon juice
kosher salt
crostini or cut-up vegetables, for serving

Directions

  1. Cook the edamame according to the package directions.
  2. Puree the edamame, avocado, basil, oil, lemon zest, lemon juice, ¼ cup water, and ½ teaspoon salt in a food processor until smooth, 30 seconds to 1 minute. Serve with crostini or vegetables. Store the dip in the refrigerator in an airtight container for up to 2 days.


Strawberries and Cream Tea Sandwich


Hands-On Time 
 
minutes 
 
Total Time 
 
minutes 

Serves 2

Ingredients

slices whole-grain sandwich bread, crusts removed
tablespoons 
whipped cream cheese
teaspoon 
honey
strawberries, sliced

Directions

  1. Toast the bread. Top with the cream cheese, honey, and strawberries; halve.

Parmesan Pita Crisps


Hands-On Time 
 
minutes 
 
Total Time 
 
minutes 
Serves 2

Ingredients

6-inch whole-wheat pita, split
tablespoon 
unsalted butter, at room temperature
tablespoons 
grated Parmesan
pinch of dried oregano
kosher salt

Directions

  1. Heat broiler.
  2. Brush the pita with the butter and sprinkle with the Parmesan, oregano, and a pinch of salt. Cut into triangles.
  3. Broil until golden, 1 to 3 minutes. Serve warm.


Six-Layer Parfait-in-a-Jar


Serves 2

Ingredients

20 
seedless red grapes, halved
3/4 
cup 
plain nonfat Greek yogurt
1/2 
cup 
diced pear
tablespoons 
granola
tablespoons 
roasted pumpkin seeds
teaspoons 
maple syrup

Directions

  1. Layer the grapes, yogurt, pear, granola, pumpkin seeds, and maple syrup, dividing evenly, in 2 jelly jars or glasses.

Cheddar Apple Tartine


Hands-On Time 
 
minutes 
 
Total Time 
 
15 
minutes 
Serves 2

Ingredients

slices whole-wheat cinnamon raisin bread
1/2 
apple, sliced
slices Cheddar
teaspoon 
unsalted butter
pinch of ground cinnamon

Directions

  1. Top the bread with the apple and cheese. Heat the butter in a medium nonstick skillet over low heat. Add the tartine and cook, covered, until the cheese is melted, 8 to 10 minutes Top with the cinnamon.

Apple Snack Cake


Hands-On Time 
 
15 
minutes 
 
Total Time 
 
45 
minutes 
Serves 16

Ingredients
tablespoons 
unsalted butter, melted, plus more for pan
cup 
whole-wheat flour
3/4 
cup 
granulated sugar
3/4 
teaspoon 
baking powder
3/4 
teaspoon 
baking soda
3/4 
teaspoon 
ground cinnamon
1/2 
cup 
applesauce
1/2 
cup 
buttermilk
large 
large egg
confectioners’ sugar, for dusting

Directions

  1. Heat oven to 350° F. Butter an 8-inch baking dish. Whisk together the flour, sugar, baking powder, baking soda, and cinnamon in a medium bowl; set aside. Add the applesauce, buttermilk, butter, and egg and mix to combine. Transfer to the prepared pan and bake until a toothpick inserted in the center comes clean, 20 to 30 minutes. Cool in the pan for 5 minutes, then turn out to cool completely. Dust with the confectioners’ sugar.