திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
சீரக சம்பா அரிசி – 3 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)
புதினா – 1/4 கப் (நறுக்கியது)
தண்ணீர் – 4 1/2 கப் பிரியாணி
மசாலாப் பொடிக்கு…
பட்டை – 4
சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கல்பாசி – 5
சீரகம் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 5
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 1
செய்முறை:
முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கி விட வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும். இறுதியில் அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி, பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும், குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி ரெடி!!!
--------------------------------------------------------------------
ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி – 1 cup
ஆட்டுக்கறி – 200 கிராம்
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பட்டை – சுண்டு விரல் அளவு
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
தக்காளிப் பழம் – 2 (1 cup)
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1
புளித்த தயிர் – 1/4 ka
தேங்காய் பால் – 1/4 கப்
மல்லி இலை – 1/4 கப்
புதினா இலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 4
நல்ல எண்ணெய் அல்லது நெய் – 100 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
பாசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும்.
தக்காளியை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா இலை இவற்றை தனித் தனியாக சிறிது நீர் விட்டு கட்டியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து வாய்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். பின்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை கிளறவும். இத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக சேர்ந்தவுடன் அரைத்து வைத்த மசால் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை கிளறவும். இத்துடன் தேங்காய் பால் சேர்க்கவும். அதுவும் நன்றாக மசாலுடன் சேர்ந்தவுடன், மட்டன் சேர்க்கவும். பின்பு, தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மற்றுமொரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்க விட்டு பாசுமதி அரிசியை போடவும். உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த மசாலில் சேர்க்கவும். பாத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறி, பின்பு இறக்கவும்.
மற்றுமொரு முறையாக, எண்ணெயில் வேக வைத்த மசாலை குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் அரிசி மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கலாம். இது சற்று சீக்கிரம் முடியும்.
தயிர் வெங்காயம் (raitha) அல்லது தால்சா சேர்த்துச் சாப்பிட சுவையான பிரியாணி ரெடி
-----------------------------------------------------------------------------------------------------

லேயர் பனீர் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2, இஞ்சி,
பூண்டு விழுது -3 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா தலா – 1 கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 10,
தேங்காய் – அரை மூடி,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய், நெய் – சிறிது,
பட்டை – 3 துண்டுகள்,
கிராம்பு – 6,
ஏலக்காய் – 6,
பிரிஞ்சி இலை – 2,
தனியா – 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
ஜாதிக்காய் – பாதி,
கசகசா – 1 டீஸ்பூன்,
பாதாம் – 4,
முந்திரி – 1 டீஸ்பூன்,
பனீர் – கால் கிலோ,
சிவப்பு மற்றும் மஞ்சள் ஃபுட் கலர் – தலா 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய்யை ஊற்றி கசகசா, சோம்பு, சீரகம், மிளகு, 3 கிராம்பு, 3
ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை 1, தனியா, பச்சை மிளகாய், முந்திரி, பாதாம்
ஆகியவற்றைப் போட்டு நன்று வறுக்கவும். அத்துடன் 1/2 கைப்பிடி அளவு
கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து
1 1/2 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து,
உப்புச் சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை
துண்டுகளாக்கி கொள்ளவும். தக்காளிப் பழத்தை 3 துண்டுகளாக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றிக்
காய்ந்ததும் மீதமிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு
நன்கு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி, பச்சை
மிளகாய், மீதமிருக்கும் புதினா, கொத்த மல்லி போட்டு வதக்கவும். பின்பு
அரைத்த கலவையையும் பனீர் துண்டுகளையும் அதில் கொட்டி நன்கு கொதித்ததும்
இறக்கவும். கொதித்த கலவையை 3 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். ஒன்றில்
சிவப்பு ஃபுட் கலர், இன்னொன்றில் மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கவும். இன்னொரு
பாகம் பச்சையாகவே இருக்கும் என்பதால் அப்படியே வைத்திருக்கவும். மூன்றிலும்
தேவையான சாதம் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, அதன் மேல் சிவப்பு கலர்
சாதம் கொட்டவும். வறுத்த வெங்காயம் தூவவும். சிறிது தேங்காய்ப் பாலைத்
தெளித்து அழுத்தவும். அடுத்து மஞ்சள் கலர் சாதத்தையும், பச்சை கலர்
சாதத்தையும் இதே போலச் செய்யவும். தேங்காய்ப் பால் தெளித்து அழுத்தவும்.
அதன் மேல் சிறிது வெள்ளை சாதத்தைப் பரப்பி, மறுபடி சிறிது தேங்காய்ப் பால்
தெளித்து, அழுத்தி, தம் போடவும். பாத்திரத்தை மூடி, கனமான பொருள் வைத்து
குறைந்த தணலில் 10 நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். பரிமாறும்போது ஒரு
பக்கமாக வெட்டி பரிமாறவும். பார்க்க 3 கலர் லேயர் கிடைக்கும்
No comments:
Post a Comment