Tuesday, 3 March 2015

சிக்கன் மிளகு குழம்பு:


சிக்கன் மிளகு குழம்பு:
தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 சிறியது
பூண்டு - 10 பல்
மிளகுத்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு -2
பிரிஞ்சி இலை -2
செய்முறை :
* சிக்கனை சுத்தம் செய்யவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
* வதங்கியதும் தனியாத்தூள், மிளகுத்தூள், வினிகர், சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தேவையானளவு நீர், உப்பு போட்டு வேகவிடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

No comments: