Wednesday, 18 March 2015

ரசகுல்லா

ரசகுல்லா 
  • 2 கப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பால் கொதித்தவுடன் எலுமிச்சை
  • சாறை ஊற்ற வேண்டும்.
  • இப்பொழுது பால் திரிவதை (பனீர்) பார்க்கலாம்.
  •  பால் நன்கு திரிந்தவுடன் தீயை அணைத்துவிட வேண்டும் (பனீரை ரொம்ப நேரம்  கொதிக்க விடக்கூடாது)
  • பிறகு ஒரு துணியில் பனீரை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய
  •  பனீரின் மேல் தண்ணீர் விட வேண்டும். (எலுமிச்சை வாசனை போக)
  • பின் நன்றாக துணியை பிழிந்து தண்ணீரை எடுக்க வேண்டும்..
  • வடிகட்டிய பனீரை மெதுவாக உள்ளங்கையால் பிசைய
  • வேண்டும். ஒரு பந்துபோல் வந்தவுடன் சிறுத் துண்டை எடுத்து கையில்
  • உருட்டி பார்க்க வேண்டும்.
  • பனீரை சிறு சிறு பந்துகளாக உருட்ட வேண்டும். குக்கரில்
  •  2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சர்க்கரை போட்டு தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறு பனீர் பந்துக்களை அதில் போட வேண்டும். பின் குக்கரை மூடி 7
  • அல்லது 8 நிமிடங்கள் மீடியம்-ஹை சூட்டில் வைக்கவும்.
  • குக்கரின் மேல் குளிர்ந்த நீரை விட வேண்டும். ரசகுல்லாவை
  • (பனீர் பந்துக்கள்) எடுத்து வைக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் 2 கப் பாலை ஊற்றி 15 நிமிடம் மிதமான சூட்டில்
  • கொதிக்க வைக்கவும். பின் ஏலக்காய், நறுக்கிய பிஸ்தா, பாதாம்,
  • முந்திரியுடன் 5 அல்லது 6 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து 5 நிமிடம்
  • கொதிக்க வைக்கவும்.
  • இப்பொழுது எடுத்து வைத்த ரசகுல்லாவில் உள்ள தண்ணீரை
  • சிறிது பிழிந்து கொதிக்கும் பாலில் போட வேண்டும். பின் 2 நிமிடத்திற்கு பிறகு
  • தீயை அணைத்து விடவும்.
  • குளிர்ந்த பிறகு குங்குமப்பூ தூவி பிறகு சில்லென்று பரிமாறவும்.

No comments: