நெய் சோறு செட்டிநாட்டுச் சமையல்
அரிசி – 1 கப்,
தேங்காய்ப் பால் – 2 கப்,
கீறிய பச்சை மிளகாய் – 4
பொடியாக நறுக்கிய தக்காளி – 2,
நெய் – 1/4 கப்,
கொத்தமல்லி, புதினா – 1 கைப்பிடி,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க…ஏலக்காய் – 4,
பட்டை – 4,
கிராம்பு – 2,
பிரிஞ்சி இலை – 1,
சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்.
வதக்க…
நெய் (அல்லது) எண்ணெய் – 1/4 கப்,
மெலிதாக நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய் ஊற்றி உருகியதும் தாளிப்புப் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும். அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பின் அரிசி, தக்காளியை போட்டு வதக்கி, தேங்காய்ப் பால் ஊற்றி இரு மடங்கு தண்ணீரும் அளந்து ஊற்றி உப்பு போட்டு குக்கரில் வைக்கவும். சாதத்தை இறக்கி, மீதமிருக்கும் 1/4 கப் நெய்யை ஊற்றிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment