Friday, 14 July 2017

மாண்புமிகு திரு.சகாயம்IAS அவர்கள் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி

👌👌👇 மாண்புமிகு திரு.சகாயம்IAS அவர்கள் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி .....👌👌👇

💪💪 இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக  !!!!!!

💪💪 நாம் பெப்சி மற்றும் கோக கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோக கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.

💪💪 நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.

💪💪 10 அல்லது 20 ருபாய் வரை கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் 10 அல்லது 5 ருபாய் வரை கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்

💪💪 இந்த செய்தியை குறைந்தது 3 குருப்புக்கு அல்லது 10 பேருக்கு அனுப்பவும்
கோக கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்

💪💪 நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும்.

💪💪 வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும்.

💪💪 நாம் எவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம் அதுபோல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புவோம்.

👌👆💪💪💪

Thursday, 13 July 2017

Tamil song

Apple iphone 7 box

கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்....., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய் பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை.. Apple iphone 7 box அவர் கைல.
பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100.
அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்....
"இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்"😠😡😡😡😡😡
😂😂😂😂😂😂😂

இன்னும் என்னவெல்லாம்

👩👩👩👩‍🍳 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
         but
அந்த கரண்டித்தான் எங்க இருக்கூனு தெரியல்ல
                                 
😜😜😜😜😜😜😋😋


🕺 ''டேய்..ஓடாதே..
நில்ரா..

எதுக்குடா

இவளை தூக்கிட்டு ஓடறே ?''

''நீங்கதானே சார் சொன்னீங்க.

விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃


🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"

"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"

"(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"


👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 😉😉😉

                   ***********

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?

கல்யாணத்துக்கு முன்னாடியா,  பின்னாடியா.....?

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....

கல்யாணத்துக்கு முன்னாடி,
எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் .....

அப்போ பின்னாடி.....?

அட,
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே
இல்லை.....!!!

                  **********

                       

சத்தியவான் சாவித்திரி .....
தன் கணவனை.....
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்.....

கதையின் கருத்து :--
ஒரு புருஷன...
பொண்டாட்டிகிட்ட இருந்து .....
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது.....!!!

              *************
                       
                       

மனைவி:
ஏங்க!  உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்.....!

கணவன்:
செருப்பு இந்தா இருக்கு.....!
புத்திக்கு எங்கே போவ!!??

                  *************

                           

கணவன்:
"என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு...
நல்லாவேயில்லை"....

மனைவி:
"கடவுளே! .....
இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !

                 **************

                           

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா!
எவ்வளவு அதிகாரங்கள்.

😳😳🙄

     ********************

 🤒 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,

🤕 மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..

        *******************

😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜

       ******************

🙋‍♂ தக்காளி சோறு பிரியாணி மாறி இருந்தா அது அம்மா சமையல்!

💁‍♂ பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்!

😤 சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்!
😂😂
     
        ***************

💰 பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு

ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...

அவன் தான் நகை கடைக்காரன்😆

       *************.. காலை வணக்கம்...

வீட்டுக்கு வெளியே

🏡🏘🏚🐕🐩😴😴😴
வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.

அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது.
அவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது.

 மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.
மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார்.

உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது.

 வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.

பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது.

இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.

இங்கே எதற்காக வந்தது.?

எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.

 வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.

மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.

இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்.

ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார்.

மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது.

படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..

"அன்பு மிக்கவருக்கு வணக்கம்.

இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".

பி.கு.
"ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன."

இது எப்படி இருக்கு?....😁😄🤣😜😝😝

நல்ல மேட்டர் படிங்க

நல்ல மேட்டர் படிங்க

Sundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

Kannan: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

Sundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

Kannan: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

Sundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

Kannan: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

Sundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

Kannan : எப்படிச் சொல்றீங்க?

Sundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

Kannan : நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

Sundar: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

Kannan : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!😜😜😜

Tamil letters

பதினாறு வகையான அர்தங்கள்

பதினாறு வகையான அர்தங்கள்
---------------------

1] எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!