சிசேரியன் மற்றும் அது செய்யப்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
சமீப நாட்களாக, அதிக அளவில் சிசேரியன் செய்வதாக, மகப்பேறு மருத்துவர்களின் மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்று நிலவி வருகிறது.'சுகப்பிரசவமா..? சிசேரியனா..?இதை யார் முடிவு செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும் முன் சிசேரியன் பற்றி சற்றே தெரிந்து கொள்வோம்.
சிசேரியன் என்றால் என்ன?
இயல்பாக, பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை பிரசவிக்க இயலாத நிலையில், மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைதான் சிசேரியன்.17ஆம் நூற்றாண்டு வரை, இறக்கும் தருவாயில் இருக்கும் தாயிடம் சேயைக் காப்பதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட்டது. சிசேரியன் செய்தால், தாய் இறந்து, சேய் மட்டுமே உயிருடன் இருக்கும், என்ற நிலையில் ஆரம்பித்து,பிறகு பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு, தற்போது அடிவயிற்றில் செய்யப்படும் தழும்பு வெளித்தெரியாத சிசேரியனாக வளர்ந்துள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சையின் வகைகள்:
சிசேரியன் அறுவை சிகிச்சை இரண்டு வகைப்படும்.
1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery). 2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).
எந்த முறையாக இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது..!
இந்த எண்ணிக்கை கூடுவதற்கு, தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மட்டும் தான் காரணமா? அரசு மருத்துவமனைகளின் பங்கு என்ன? இந்த சிசேரியனால் ஒரு நன்மை கூட இல்லையா என்று பார்த்தால்,உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது.
சிசேரியன் பெருகுவதற்கான காரணங்கள்:
பெருகும் மக்கள் தொகை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இதில் மிக முக்கியமான மைல்கல்லாக கருதப்படுவது, தொடர்ந்து குறைந்து வரும், தாய் - சேய் இறப்பு சதவிகிதம்..!
ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் 5. அதாவது மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகிதம் என்றஇலக்கினை, தென் மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது.மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது கேரளாவும், தமிழகமும்.!
மருத்துவத் துறையின் முக்கிய வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்த நிலை எப்படி சாத்தியமானது?
நாடெங்கிலும் பிரசவப்பேறு, மருத்துவமனைகளில் மட்டுமே நடந்திட வழிவகுக்கும் திட்டங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் 24x7 செயல்படும் மகப்பேறு மற்றும் மயக்கவியல் துறைகள், பரவலாக பயன்படுத்தப்படும் குழந்தைக்கான மின்னணு கண்காணிப்பு இயந்திரங்கள், ஆபத்தான சூழ்நிலைகளில் தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிசேரியன் சிகிச்சை, மிகவும் குறைவாக பயன்படுத்தப்படும் ஆயுதப் பிரசவங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிக அருமையாக செயல்படுகின்ற பிறந்த குழந்தைக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவை இந்த இலக்கினை எட்ட பெரிதும் உதவியுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது..

No comments:
Post a Comment