Monday, 27 February 2017

எளிய இயற்கை மருத்துவம் :-

எளிய இயற்கை மருத்துவம் :-
1) கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி பலம் பெரும்.
2) தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். தாது விருத்தியாகும்.
3) பூண்டு , வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.
4) கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதடு வெடிப்புக்கு போட்டால் உடனே குணமாகும்.
5) அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் பூசி காலையில் குளித்து வர முகப்பரு நீங்கும்.
6) குடல் புண் குணமாகவும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியவும் அகத்தி கீரை நல்ல உணவு
7) தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
8) அத்திப்பழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
9) முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
10) வெற்றிலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

No comments: