Monday, 27 February 2017

கைக் குழந்தைகள் - அழுதுகொண்டே இருந்தால்

1. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..இன்றைய பதிவு மிகவும் முக்கியமானது..அனைவரும் தவறாமல் படிக்கவும்..முக்கியமாக கைக் குழந்தைகள் உள்ள வீடுகளில் இன்றைய பதிவு உபயோகமாக இருக்கும்..
2. ஆரோக்கியமாக இருக்கும் சில குழந்தைகள் திடீரென எந்த காரணங்களும் இல்லாமல் அழுதுகொண்டே இருக்கும்...பொதுவாக கைக் குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால் இரண்டு காரணங்களால் தான் பெரும்பாலும் அழுகும்..ஒன்று வயிற்று வலியாக இருக்கலாம் அல்லது காது வலியாக இருக்கலாம்..அதனால் திடீரென்று இடைவெளியில்லாமல் குழந்தை அழுகும் போது குழந்தைகள் சிறப்பு மருத்துவரிடம் சென்று காண்பிப்போம்..அவரும் பரிசோதித்து விட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுப்பார்..ஆனால் அந்த மருந்துகளை கொடுத்தாலும் குழந்தை தொடர்ந்து அழுத்துகொண்டே இருக்கும்..இவ்வாறு அழுகும் போது பெற்றோர்களுக்கும் ஒன்றும் புரியாமல் கவலைப் படுவார்கள்..அதுமட்டுமின்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி மேலும் குழப்புவார்கள்..பல வீடுகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி பெரிய சண்டைகள் கூட நடக்கும்..இறுதியாக வேறு வழியின்றி குழந்தைகளுக்காகவே அவர்களுடைய பாரம்பரிய முறையான மந்திரிக்கும் சில மனிதர்களிடம் அழைத்து சென்று காண்பிப்பார்கள்..அவர் சில கயிறை மந்திரித்து, வேறு சில வழிமுறைகளையும் கூறி இரண்டொரு நாட்களில் அனைத்தும் சரியாகி விடும் என்று கூறி அனுப்பி வைப்பார்..ஆச்சரியமளிக்கும் வகையில் இரண்டொரு நாட்களில் குழந்தை அழுவதை முற்றிலும் நிறுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும்..
3. நண்பர்களே..உண்மையில் மருத்துவ காரணங்கள் இருந்தால் மருந்துகள் மட்டுமே உபயோகப்படும்..ஆனால் மருத்துவ காரணங்கள் அன்றி வேறு சில எதிர்மறை சக்திகள் மூலம் குழந்தைகள் பாதிக்கப்படும்போது எந்த மருந்துகள் கொடுத்தாலும் குழந்தை அழுவதை நிறுத்தவே நிறுத்தாது...அதுமட்டுமின்றி சில குழந்தைகளின் பார்வை, அதன் செயல்பாடுகள் போன்றவைகள் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக இருக்கும்..பெற்றோர்கள், முக்கியமாக குழந்தையின் தாய் இந்த வித்தியாசத்தை எளிதில் உணர்வார்கள்..குழந்தைகள் சில எதிர்மறை சக்திகளால் எளிதில் பாதிக்கப்படுவார்கள்..இதை விளக்க ஆரம்பித்தால் பதிவு மிக நீளும்..ஆனால் இதுபோல் வித்தியாசமாக மருத்துவ காரணங்கள் எதுவும் இன்றி குலன்ஹே அழுதாலோ அல்லது மருத்துவரிடம் காண்பித்தும் குழந்தை தொடர்ந்து அழுதாலோ அதற்கு உடனடியாக சில வழிமுறைகளை செய்தால் குழந்தை உடனடியாக குணம் பெறும்..அது என்னவென்று பார்ப்போம்...
4. முதலில் நல்ல சுத்தமான மஞ்சள் தூளை ஒரு அகன்ற பாத்திரத்தில் இரண்டு கைப் பிடியளவு நீரில் கலந்து வைத்துக் கொள்ளவும்..அதன்பின் பாதி அளவு தொட்டாங்குச்சியை ஒரு இடுக்கி மூலம் பிடித்து அடுப்பில் சிறிது நேரம் காண்பித்தால் தொட்டாங்குச்சி தீயில் எரிய ஆரம்பிக்கும்..அதை இடுக்கியில் பிடித்தவாறு , நாம் எற்கனவே கலந்து வைத்துள்ள மஞ்சள் கலந்த நீருக்கு நேராக மேலே பிடிக்க வேண்டும்..தொட்டாங்குச்சியிலிருந்து தீக் கங்குகள் சிறிது சிறிதாக மஞ்சள் கலந்த நீரின் மேல் விழ ஆரம்பிக்கும்..அதேநேரம் இன்னொருவர் குழந்தையை அந்த தீக் கங்கை பார்க்கும்படி செய்ய வேண்டும்..குழந்தை தீக் கங்கை ஆச்சரியமளிக்கும் வகையில் தொடர்ந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொன்டே இருக்கும்..தீக் கங்கு மஞ்சள் கலந்த நீரின் மேல் விழுந்துகொண்டிருக்கும் அதே நேரம் மஞ்சள் கலந்த நீர் முற்றிலும் சிவப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்..எந்த அளவு சிவப்பாக மாறுகிறதோ அந்த அளவு எதிர்மறை சக்திகள் விலகிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்..தொட்டாங்குச்சி முழுவதும் எரிந்த பின் மீதமுள்ள தொட்டாங்குச்சியின் பகுதிகளை அதே நீரில் கலக்கி அந்த நீரை வீட்டிற்கு வெளியே ஊற்றிவிட வேண்டும்..
5. நண்பர்களே..மேலே சொல்லியிருக்கும் முறை உடனடியாக பலனளிக்கும் முறை..இதை நேரடியாக பலமுறை நாங்கள் செய்ய சொல்லி அதன் பலனை பார்த்திருக்கிறோம்..பிறந்து 6 மாதம் முதல் 3 வயது வரை இந்த செயல்முறை மூலம் நல்ல பலனை அடையலாம்..இந்த செயல்முறையை குழந்தை அழும்போது மட்டுமின்றி மாதம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் எந்த எதிர்மறை சக்திகளும் குழந்தைகளை நெருங்காது..இந்த முறையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..பாடி வைத்திய முறை என்றோ, நாட்டு வைத்திய முறை என்றோ அல்லது மூட பழக்கம் என்றோ எதுவாக வேண்டுமானாலும் நீங்கள் கருதலாம்..ஆனால் அனுபவத்தில் பலமுறை நாங்கள் இதன் பலனை பார்த்திருக்கிறோம்..காரணமே இன்றி குழந்தை இடைவெளியில்லாமல் அழும்போது, அனைத்து மருத்துவ முறைகளையும் பார்த்த பின்பும் குழந்தை அழுவதை நிறுத்தாதபோது பெற்றோர்கள் படும் வேதனை அவர்களுக்கு மட்டுமே தெரியும்..அதனால் இதுபோன்ற சமயங்களில் மேலே கண்ட செயல்முறையை பின்பற்றி பாருங்கள்..மேலும் மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..இதனால் எந்த கெடுதல்களும் இல்லை..யாரேனும் இதை பயன்படுத்தினால் உங்கள் அனுபவங்களை இனிவரும் நாட்களில் தெரியப்படுத்துங்கள்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..நன்றி!

No comments: