Monday, 27 February 2017

வாயுத் தொல்லையால் ஏற்படும் வயிற்று வலி, வயிறு பெருமல், உப்புசம் போன்ற பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம்

வாயுத் தொல்லையால் ஏற்படும் வயிற்று வலி, வயிறு பெருமல், உப்புசம் போன்ற பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம்.சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைவது,பசியின்மை,மூச்சு வாங்குவது போன்று இருப்பது போன்றவை வாயுத்தொல்லையால் ஏற்படுகிறது. வயிறு கெடுகின்றபோது பல்வேறு நோய்கள் வருகின்றன. தனியா, சீரகத்தை பயன்படுத்தி வயிற்று உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் - தனியா, சீரகம், இந்துப்பு
ஒரு ஸ்பூன் தனியா,அரை ஸ்பூன் சீரகம், சேர்த்து லேசாக வறுக்கவும், இதனுடன் நீர் விட்டு இந்துப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வயிறு பொருமல், உப்புசம் சரியாகும். எளிதில் ஜீரணம் ஆகும். தனியா வயிற்றுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புண்களை ஆற்றும் இது உணவுக்கு சுவை, மணம் தருகிறது. சீரகம் அகத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது. மணம், சிறிது காரத்தை கொண்ட இது வயிற்று பிரச்னைகளை போக்கும். செரிமானத்தை சீர் செய்ய கூடியது.
ஜீரணத்தை தூண்டகக் கூடியது. பூண்டு, வெங்காயத்தை பயன்படுத்தி வாயு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் பொடி, பெருங்காயம், ஒரு பாத்திரத்தில் 2 சின்ன வெங்காயம், 2 பூண்டு பற்கள் தட்டிப்போடவும். இதனுடன் சிறிது உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்து வர அஜீரணம், வாயுத் தொல்லை, உப்புசம் சரியாகும். தினமும் ஒரு வேளை இந்த தேனீரை குடித்து வர இப்பிரச்னைகள் சரியாகும்.
வெங்காயத்தில் உள்ள கந்தகசத்து அற்புதமான மருந்தாகிறது. பூண்டு , மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. பெருங்காயம் வாயு தொல்லையை போக்கக் கூடியது. சொம்பை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஏல அரிசி, சிறிது சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி குடித்து வர அஜீரண கோளாறு போகும்.

No comments: