Monday, 27 February 2017

ஸ்லிம்மான உடம்பை பெறுவதற்கு ஒரு டம்ளர் கறிவேப்பிலை ஜூஸ் போதுமே!

ஸ்லிம்மான உடம்பை பெறுவதற்கு ஒரு டம்ளர் கறிவேப்பிலை ஜூஸ் போதுமே!
அன்றாடம் நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், தாது உப்புக்கள், கொழுப்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரச்சத்து, கந்தகச்சத்து, குளோரின், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனால் கறிவேப்பிலையை நாம் தொடர்ந்து கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டால், தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளருவதுடன், நமது உடலில் சேருகின்ற அதிகப் படியான கொழுப்பையும் கரைக்கிறது.
கறிவேப்பிலையின் ஜூஸ் தரும் நன்மைகள்
ஆயுர்வேத மருத்துவத்தில், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்களுக்கு, கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. எனவே நாம் கறிவேப்பிலையை பச்சையாக ஜூஸ் செய்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
நமது உடம்பில் செரிமான பிரச்சனை இருந்தால், கெட்ட கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தும் இதனால் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால், உடல் பருமன் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
கறிவேப்பிலை நமது உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றி, நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலை மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளை

மாதுளை
மாதுளை பழத் தோலை (5கிராம்) அரைத்து புளித்த மோரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு , பற்கள் உறுதியாகும்.
மாதுளம் பழத்தை , இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து , அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவினால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி , ரத்தக் கசிவும் நிற்கும்.
மாதுளம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து , அதை சூடுபடுத்தி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வருவது நிற்கும்.
தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.
மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.
கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.

#மூட்டு #வலிக்கு_சிறந்த_மருந்தாகும் #உருளைக்கிழங்கு #சாறு !!!!!

#மூட்டு #வலிக்கு_சிறந்த_மருந்தாகும் #உருளைக்கிழங்கு #சாறு !!!!!


#மூட்டு_வலி_வரக்_காரணம்_மூட்டு #தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
மூட்டழற்சி:
இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்குவாதம்:
இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டழற்சியின் அறிகுறிகள்:
நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள்:
இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
காரணம்:
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

புற்று நோய் வராமல் தடுக்கும் 3 வகையான வெள்ளரி நீரும், அவற்றின் நன்மைகளும் - இயற்கை மருத்துவம்

புற்று நோய் வராமல் தடுக்கும் 3 வகையான வெள்ளரி நீரும், அவற்றின் நன்மைகளும் - இயற்கை மருத்துவம்

வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன. இதனுடன் மற்ற காய் பழங்களையும் சேர்த்து செய்யப்படும் நீர் வகைகளை குடிப்பதான் உண்டாகும் பலன்களும் செய்முறைகளும் பார்க்கலாம். விட்டமின் சி நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய் வராமல்
வெள்ளரி, எலுமிச்சை நீர் :
வெள்ளரி- அரை
எலுமிச்சை - 1
புதினா இலை = கையளவு
உப்பு - சிறிதளவு.
நீர்
எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டுக் கொள்ளவும். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.
பலன்கள் :
கொழுப்பை குறைக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சூட்டை தணிக்கும்.
திராட்சை வெள்ளரி நீர் :
வெள்ளரி - அரை
பச்சை திராட்சை - 10
எலுமிச்சை - அரை மூடி
மிளகுத் தூள் - தூவ.
நீர்
வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்
பலன்கள் :
உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.
இள நீர் மற்றும் வெள்ளரி நீர் :
வெள்ளரிக்காய் - 1
இள நீர் - 1
எலுமிச்சை இலை - 2
சீரகப்பொடி - சிறிதளவு
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்தகலவைகளை போட்டு இவற்றுடன் இள நீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்
பலன்கள் :
அனைத்து சத்துக்களும் கிடைக்கும். நீரசத்து சமன் செய்யும். புற்று நோய் வராமல் தடுக்கும். முதுமையை தடுக்கும்.

நெல்லிக்காய்_பற்றிய_அற்புதமான #தகவல்


#பக்கவாதம்_நரம்புத்தளர்ச்சி_போன்ற #நோய்கள்_ஏற்படுவதைத்_தடுக்கிறது
#சிறுநீரக_கோளாறுகளை_நீக்குகிறது
#நெல்லிக்காய்_பற்றிய_அற்புதமான #தகவல்..!!
#அன்றாடம்_உட்கொள்ளும் #நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.
ஐந்து சுவை கொண்டது
ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.
உயிர்சத்துக்கள்
உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.
பித்தம் தணிக்கும்
ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.
நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும்.
நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.
பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.
நினைவாற்றல் கூடும்
பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.
சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.
பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

அல்சர் பிரச்சனைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் :-

அல்சர் பிரச்சனைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் :-

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு மிகப்பெரிய மூலகாரணமாகும். சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.
* தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.
* முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
* காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
* இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
* மற்றொரு சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான், நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
* தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
* பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
* வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம்:-

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம்:-

* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.
* வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.
* சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.
* மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.
* 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.
* நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
* பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
* படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
* நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

மூலிகை குடி நீர் செய்வது எப்படி

மூலிகை குடி நீர் செய்வது எப்படி

மண் குவளை
நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது.
தேவையான மூலிகை பொருட்கள்.

1. ஜாதிகாய்
2. ஏலக்காய்
3. லவங்கம் (கிராம்பு)
4. வெட்டிவேர்
5. சுத்தமான வெள்ளை துணி.
6. சுத்தமான குடி நீர் 1 லிட்டர்
ஒரு ஜாதிகாயில் எட்டில் ஒரு பங்கு மட்டும் அதாவது 0.5 கிராம் (ஜாதிகாயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்), நசுக்கிய ஏலக்காய் எண்ணிக்கை - 2 , லவங்கம் (கிராம்பு) 2 மட்டும், வெட்டி வேர் 1 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி கொள்ளவும். பிறகு, ஒரு லிட்டர் குடி நீரை பாத்திரத்தில் எடுத்து (புதிய மண் பத்திரமாக இருந்தால் மிகவும் நன்று) அதில் கட்டி வைத்துள்ள மூலிகை மூட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற விட்டு விடவும்.
மறுநாள் காலை மூலிகை மூட்டையை அதே நீரில் நன்கு அலசி எடுத்து விடவும். தயார் செய்த மூலிகை நீரை ஐந்து லிட்டர் தண்ணிரில் கலந்து கொள்ளவும் (தங்களின் சுவைக்கு ஏற்றது போல் நீரின் அளவை மற்றிக் கொள்ளவும்). இன்நீரை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள நீரை மட்டும் பயன்படுத்தவும். பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்கப்ப்டும் குடி நீர் நீண்ட நாட்கள் கெட்டுபோகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்கபட்டிருக்கலாம் இது மூலிகை தன்மையை கெடுத்து விடும். ஐந்து லிட்டர் மூலிகை குடி நீர் தயார் செய்ய 5 ரூபாய் கூட தேவைப்படாது.
மூலிகை குடி நீரினால் என்ன பயன்?
இம் மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல்வலி , வாயுதொல்லை, அஜீரணம், வாந்தி, மயக்கம், தசை வலி, வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், சிறு நீரக பிரச்சனைகள், வாய் துருநாற்றம் ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் காம பெருக்கியாகவும், உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சியடையவும் செய்கிறது.

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு.
இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம்.
சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.
மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.
5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.
தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.
வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.
சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி.
காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.
சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

🍎🍎சர்க்கரை 🍎நோயாளிகளுக்கான🍎🍎 சத்தான🍎🍎 பழங்கள்!🍎🍎

🍎🍎சர்க்கரை 🍎நோயாளிகளுக்கான🍎🍎 சத்தான🍎🍎 பழங்கள்!🍎🍎
சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.
ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட சத்தான எட்டு பழங்களும், அதன் பலன்களும் இங்கே...
🍎🍎ஆப்பிள்🍎🍎
நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.
Aska Svn
🍅🍅ஆரஞ்சு🍅🍅
ஆரஞ்சில் வைட்டமின்-சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ள பழம். தாராளமாக எடுத்துக் கொள்லலாம்.
செர்ரி
பீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.
🍏🍏பேரிக்காய்🍏🍏
வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்
🍓🍓கருப்பு ப்ளம்ஸ்🍓🍓
ஆன்தோ சைனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட், சீராகச் செரிப்பதற்கும், சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.
🍆🍆ஸ்ட்ராபெர்ரி🍆🍆
ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
🍉🍉கிவி🍉🍉
வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.
🍏🍏கொய்யாப்பழம்🍈🍏
நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.🍏

கொன்றை_மலர்கள் & தங்கமலர்_சரக்கொன்றை

🌹#கொன்றை_மலர்கள் 🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹
வெப்ப மண்டலம் மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும். கோடை வறட்சியையும் தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

#தங்கமலர்_சரக்கொன்றை 🌹

கொன்றை மலர்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி சரியாகும். கூடவே வயிற்றுக்கோளாறு, மேகக்கோளாறு போன்றவையும் சரியாகும்.
சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை, நாம் சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். இன்னும் பல பலன்கள் இந்த சரக்கொன்றை மலரில் உள்ளது.

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

ஆரோக்கியமாக வாழ… ​நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!

ஆரோக்கியமாக வாழ…
​நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.
23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.
29. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
30. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன்.

PCOD / PCOS ( நீர் கட்டி) - தமிழ் மருத்துவத்தில் எளிய தீர்வு !!

PCOD / PCOS ( நீர் கட்டி) - தமிழ் மருத்துவத்தில் எளிய தீர்வு !!
******************************************
PCOD என்றால் என்ன ?
பாலி) என்பது பல
Cyst(சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.

OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.
ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.
ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.
Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள் Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
--------------------------------------
1) குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.
2) ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.
3) ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது.
2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும்.
சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும்.
சிலருக்கு மிகுதியாக இருக்கும்.
4) முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.
5) எடை அதிகரித்தல் - மாதவிடாய் தள்ளிப்போவதால் உடல் எடை அதிகரிக்கிறது..
6) முகப்பரு வரலாம்.
7) நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.
இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை.
சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்.
காரணம
----------------------------------
சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்
1) நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
2) பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.
3) வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
4)கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.
ஆய்வக பரிசோதனை
------------------------------------------
ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.
ஆலோசனைகள்
----------------------------------
1)உடல் எடையை குறைத்தல்
2) உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
3) உணவு கட்டுப்பாட்டு - அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்
தவிர்த்தல் நல்லது.
4) காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
5) புகை - புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.
மருத்துவம்
---------------------
1) மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீன மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
2) ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.
எப்போது மருத்துவரை உடனே சந்திக்கவேண்டும்
-----------------------------------------
1) 14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.
2) ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய் ஏற்படுகிறது என்றால்.
3) மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.
4) உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்
5) அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.
6) கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்பட்டால். உடனே மருத்துவரை சந்திக்கவும்.
*++++++++++++++******+++++-+++++++
சித்த வைத்தியம் என்ன சொல்கிறது ?
*+++++++++++****+++++++++++++++++
சினைப்பை நீர்க்கட்டி : சித்த மருத்துவம் மாயமாக்கும்
1)பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம்.
2) பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது.
3) கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது.
4) ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.
5) இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.
6) மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.
7) சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
8) பிரச்னைக்குக் காரணம் என்ன?
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
9) நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர் இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
10) எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமான நடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும்.
மூலிகைத் தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மா சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
உணவு முறை என்ன?
------------------------------------------
1) பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும்.
அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிட வேண்டும்.
கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.
வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும்.
சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.
மீசை வளர்வது ஏன்?
---&--------------------&-----------------------
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில் சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.
சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதி மருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி - யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம் சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்.

உணவுகளில் உள்ள பூச்சி மருந்து, ரசாயனம் அகற்ற 6 எளிய வழிகள்..!

உணவுகளில் உள்ள பூச்சி மருந்து, ரசாயனம் அகற்ற 6 எளிய வழிகள்..!


சந்தையில் கிடைப்பவை அத்தனையும் சுத்தமான பழங்கள் அல்ல. அவற்றில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருக்கலாம்; ரசாயனம் கலக்கப்பட்டிருக்கலாம். எனவே, பழங்களைச் சுத்தப்படுத்திவிட்டுப் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறை. பழங்களைச் சுத்தப்படுத்துவதற்கு இங்கே ஆறு எளிய வழிமுறைகள்...
ரசாயனம்
* பழங்களின் மேல் தோலில் படிந்திருக்கும் பூச்சி மருந்துப் படலம், பழத்தின் வீரியத்தைக் குறைத்துவிடும். மிதமான சூடுள்ள வெந்நீரால் பழங்களைக் கழுவினால், பூச்சி மருந்துப் படலம் முழுதாக நீங்கவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறையும். இதற்கு, அதிகச் சூடான வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது.
வினிகர்
* ஒரு பாத்திரம் நிறையத் தண்ணீரை ஊற்றி, அதில் ஆப்பிளைப் போட்டு, ஊறவைக்கவும். அதோடு சிறிது வினிகரைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் பழத்தை ஊறவைத்த பின்னர், ஆப்பிளை வெளியே எடுத்துத் தண்ணீரில் கழுவவும். இப்படிச் செய்வதால், ஆப்பிளின் மேல் தோலில் உள்ள பூச்சி மருந்தின் தாக்கம் குறையும்.
பழங்களை சுத்தம் செய்தல்
* பழங்களைத் தண்ணீல் கழுவிய பின்னர், சுத்தமான துணில்யால் துடைக்கவும். இதனால் பழத்தின் மேல் தோலில் ஒட்டியிருக்கும் மீதமுள்ள பூச்சி மருந்தும் வெளியேறிவிடும்.

அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.

அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.


கருங்குருவை- விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா- இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
கைகுத்தல் புழுங்கல் அரிசி- low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
காட்டுயானம்- ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
அன்னமழகி- மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
இலுப்பைப் பூச்சம்பா- பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
கல்லுண்டைச்சம்பா- இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
காடைச்சம்பா- இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
காளான் சம்பா- உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
கிச்சிலிச்சம்பா- பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
குறுஞ்சம்பா- பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
கைவரை சம்பா- உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
சீதாபோகம்- உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
புழுகுச்சம்பா- இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
மணக்கத்தை- தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
மணிச்சம்பா- அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
மல்லிகை சம்பா- நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
மிளகு சம்பா- உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
மைச்சம்பா-வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
வளைத்தடிச் சம்பா- வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
வாலான் அரிசி- மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
மூங்கில் அரிசி- மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
பழைய அரிசி- பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும், கபமும் குறையும்.
கார் அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
கோரைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்

உமீழ் நீர்: உயிர் நீர் *

உமீழ் நீர்: உயிர் நீர் *
🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈🍵
* சர்க்கரை நோய்க்கான எளிய, முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!
* சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?
* உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!
* உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!
* வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!
* அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!
* அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!
* உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!
* "தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!
* நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!
* தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!
* அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!
* வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!
* உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!
* நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!
* உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!
* நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!
* சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!
எனவே, நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!
* நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!
** நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!! **
**** "நொறுங்கத் தின்னா நூறு வயசு...." ****