கறிவேப்பிலை- பூண்டு பொடி
பெரிய பூண்டு - 10,
உளுத்தம் பருப்பு - 3/4 கப்,
சிவப்பு மிளகாய் - 10,
கறிவேப்பிலை - 1 1/2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் உப்பு தவிர மற்ற பொருட்களை தனித்தனியே வறுத்து எடுத்துக்
கொள்ளவும். பின்பு, மிக்ஸியில் மிளகாய், பூண்டு போட்டு அரைக்கவும்.
அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியாக கறிவேப்பிலை,
உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும். இந்தப் பொடியில் எண்ணெய் விட்டு,
இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment