பிடி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி: 200 கிராம்
கடலைப் பருப்பு: 1 ஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு: 1 ஸ்பூன்
வர மிளகாய்: 2
தேங்காய் துருவல்: 1 மேஜைக்கரண்டி
இஞ்சி: 1 துண்டு
கறிவேப்பிலை: 1 கொத்து
எண்ணெய்: 1 ஸ்பூன்
உப்பு: தேவைக்கேற்ப
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி: 200 கிராம்
கடலைப் பருப்பு: 1 ஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு: 1 ஸ்பூன்
வர மிளகாய்: 2
தேங்காய் துருவல்: 1 மேஜைக்கரண்டி
இஞ்சி: 1 துண்டு
கறிவேப்பிலை: 1 கொத்து
எண்ணெய்: 1 ஸ்பூன்
உப்பு: தேவைக்கேற்ப
செய்முறை:
•புழுங்கலரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, ரவையாக அரைத்துக்கொள்ளவும்.
•மிளகாய், இஞ்சியைப் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
•வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.
•இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறவும்.
•தண்ணீர் கொதி வந்ததும், ரவையைத் தூவிக் கிளறி இறக்கவும்.
•கிளறிய மாவை சற்றே பெரிய உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
•தக்காளிச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்!

No comments:
Post a Comment