Monday, 24 August 2015

கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 2
தயிர் – 2 கப்
வெங்காயம் – 3
சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3
தனியா – 1/2 கப்
எண்ணெய் – 100 மி.லி
உப்பு – தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 3 அரைத்தது
இஞ்சி – 2 
 
செய்முறை:
* கத்தரிக்காய் மேல் சிறிது எண்ணெய் பூசி சுடவும்.
* மேல் காம்பு, தோல் இவற்றை நீக்கவும். சுத்தம் செய்து மசித்து கொள்ளவும்.
* இப்பொழுது தயிர், வெங்காயம் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய், சர்க்கரை தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
* இரண்டு டீ ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிந்தவுடன் எண்ணெயை மசித்த கத்தரிக்காயில் ஊற்றவும். கலந்து குளிரச் செய்யவும்.
* கொத்தமல்லியுடன் அலங்கரித்து குளிர்ச்சியாக ஆன பிறகு பரிமாறவும். ஊற்றவும். சிறுதீயில் வைக்கவும். சொத்தமல்லியை தூவி பராத்தாவுடன் பரிமாறவும்.
* ஹைதராபாத்திலிருந்து அறிமுகமான இந்த உணவை பிரியாணியுடன் பரிமாறலாம்.
குறிப்பு:
கத்தரிக்காய்க்குப் பதிலாக வேறு வகையான பெரிய மிளகாய்களை வறுத்து பயன்படுத்தி மிர்சி காசாலன் செய்யலாம்.

Sunday, 23 August 2015

முந்திரிபருப்பு பகோடா

முந்திரிபருப்பு பகோடா 

முந்திரி - அரை கிலோ
கடலை மாவு - அரை கிலோ
வனஸ்பதி - 1/4 கிலோ
பெ.வெங்காயம்
(நறுக்கியது) - 1/4 கிலோ
அரிசி மாவு - 150 கிராம்
ப.மிளகாய் - 5
கறிவேப்பிலை - 3 கொத்து
இஞ்சி - சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?
வனஸ்பதியில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலை மாவு, அரிசி மாவு, கறிவேப்பிலை ஆகியவை போட்டு நன்கு பிசிறிக் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவை மாவை சிறு கரண்டி அள்ளி போட்டோ அல்லது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க எடுக்க வேண்டும்.சூடான மற்றும் சுவையான முந்திரி பகோடா ரெடி!

கறிவேப்பிலை- பூண்டு பொடி


கறிவேப்பிலை- பூண்டு பொடி 

பெரிய பூண்டு - 10,
உளுத்தம் பருப்பு - 3/4 கப்,
சிவப்பு மிளகாய் - 10,
கறிவேப்பிலை - 1 1/2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் உப்பு தவிர மற்ற பொருட்களை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு, மிக்ஸியில் மிளகாய், பூண்டு போட்டு அரைக்கவும். அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியாக கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும். இந்தப் பொடியில் எண்ணெய் விட்டு, இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு
Health benefits of Peanuts
Peanuts are rich in energy (567 calories per 100 g) and contain health benefiting nutrients, minerals, antioxidants and vitamins that are essential for optimum health.
They compose sufficient levels of mono-unsaturated fatty acids (MUFA), especially oleic acid. MUFA helps lower LDL or "bad cholesterol" and increaseS HDL or "good cholesterol” level in the blood. Research studies suggest that Mediterranean diet which is rich in monounsaturated fatty acids help to prevent coronary artery disease and stroke risk by favoring healthy blood lipid profile.
Peanut kernels are good source of dietary protein; compose fine quality amino acids that are essential for growth and development.
Research studies have shown that peanuts contain high concentrations of poly-phenolic antioxidants, primarilyp-coumaric acid. This compound has been thought to reduce the risk of stomach cancer by limiting formation of carcinogenic nitrosamines in the stomach.
Peanuts are an excellent source of resveratrol, another polyphenolic antioxidant. Resveratrol has been found to have protective function against cancers, heart disease, degenerative nerve disease, Alzheimer's disease, and viral/fungal infections.
Furthermore, studies suggest that resveratrol may reduce stroke risk through altering molecular mechanisms in the blood vessels (reducing susceptibility to vascular damage through decreased activity of angiotensin, a systemic hormone responsible for blood vessel constriction that would elevate blood pressure), and by increasing production of vasodilator hormone, nitric oxide.
Recent research studies suggest that roasting/boiling enhances antioxidant bio-availability in the peanuts. It has been found that boiled peanuts have two and four-fold increase in isoflavone antioxidants biochanin-A andgenistein content, respectively. (Journal of agricultural and food chemistry).
The kernels are an excellent source of vitamin E (a-tocopherol); containing about 8 g per100 g. vitamin E is a powerful lipid soluble antioxidant which helps maintain the integrity of cell membrane of mucus membranes and skin by protecting from harmful oxygen free radicals.
The nuts are packed with many important B-complex groups of vitamins such as riboflavin, niacin, thiamin, pantothenic acid, vitamin B-6, and folates. 100 g of peanuts provide about 85% of RDI of niacin, which contribute to brain health and blood flow to brain.
The nuts are rich source of minerals like copper, manganese, potassium, calcium, iron, magnesium, zinc, and selenium.
Just a handful of peanuts per day provides enough recommended levels of phenolic anti-oxidants, minerals, vitamins, and protein.
Boiled peanuts possess unique flavor and taste. Boiling, in fact, enriches their nutritional and antioxidants profile.
They are nutty, yet pleasantly sweet in taste. Roasting enhances taste, augments antioxidants levels like p-coumaric acid, and helps remove toxic aflatoxin.

Tuesday, 18 August 2015

உடலை சுத்தமாக்கும் உணவுகள்

உடலை சுத்தமாக்கும் உணவுகள்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் உணவு வகைகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,
எலுமிச்சை
எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் இதனை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம், உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
அதுமட்டுமின்றி, எலுமிச்சை உடலின் pH அளவை சீராக பராமரிக்கும்.
மாதுளை
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்படி செய்வதோடு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்களை அழித்து, உடலில் இருந்து வெளியேற்றும்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் மிகவும் சக்தி வாய்ந்த க்ளின்சிங் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இதில் சல்பர், வைட்டமின் சி மற்றும் அயோடின் போன்றவைகளும் உள்ளது.
பீட்ரூட்
பீட்ரூட் பீட்ரூட்டில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவற்றுடன், பீட்டா-சியானின் என்னும் நிறமி, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு.
வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?
கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால் அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுவதும் நனைந்துவிடவும்கூடும்.
அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், யோனிக் குழாயில் செருகும் மாத்திரைகள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்புகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு.
அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகிவிடும். சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால் தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெறவேண்டும்.
நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன. வெட்கமும், அலட்சியமும் கொண்ட பெண்களை வெள்ளைப்படுதல் அதிகம் பாதிக்கிறது

தலைமுடி பராமரிக்கும் முறை:

தலைமுடி பராமரிக்கும் முறை:
1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.
2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.
5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.
6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .
7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .
8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .
9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.
9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.
12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .
13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!
"தொழில் கடன்... கஷ்டமில்லை!”வீட்டிலிருக்கும் பெண்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்ற நல்முயற்சிக்காக, அவர்களுக்குத் தொழில்கடன் வழங்குவது மட்டுமின்றி, அந்தப் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பது, தொழிலுக்கான பயிற்சி, தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த உதவி, சேமிப்புக்கு வழி என்று செயலாற்றி வருகிறது, சென்னையில் உள்ள ‘வரம் கேப்பிடல்’ நிறுவனம். அதன் மேனேஜிங் டைரக்டர் லதா பாண்டியராஜன், திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்டவர். வடஇந்தியாவில் சி.ஏ. முடித்தவர். அவரிடம் பேசியதில் இருந்து...
“கடந்த 15 வருடங்களாகச் சிறுதொழில் கடன் வழங்கிவருகிறோம். முதலில் தமிழ்நாடு மகளிர் திட்டத்தின் கீழ் பல பெண்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ‘வரம் கேப்பிடல்’ மூலமாக நாங்களே கடன் வழங்கி வருகிறோம். தொழில் தொடங்கும் முன்பு, ஒரு வார காலம் அந்தத் தொழில் ரீதியான பயிற்சி, வாங்கும் கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, எப்படி சந்தைப்படுத்துவது என அனைத்து விஷயங்களையும் கற்றுத்தருகிறோம். தொழில் தொடங்கிய பின்பும், தொழில் ரீதியான அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், மீன் விற்பனை போன்ற சிறு தொழில் முதல் அழகு நிலையம், சணல் பை தயாரிப்பு, கேன்டீன், ஃபேஷன் நகை விற்பனை, மொத்த விலை கடையிலிருந்து பொருட்கள் வாங்கி சில்லறை வியாபாரம் செய்வது என இப்படி பல தொழில்களைப் பெண்கள் வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு மட்டும் தனிநபர் கடனாக இல்லாமல், குறைந்தது 4 முதல் அதிகபட்சம் 10 பெண்களுக்கு சேர்த்து ‘ஜாயின் லையபிலிட்டி’ முறையில் கடன் வழங்கி வருகிறோம். குறைந்தபட்சம் 15,000 முதல் 25,000 வரை, ஒரு குழுவுக்கு எத்தனை நபர்களோ அதைப் பொறுத்து கடன்தொகை வழங்குகிறோம். முதலீடு, பெண்களின் தொழில் முயற்சிக்குத் தடையாக இருக்கக்கூடாது எனும் எங்களின் அக்கறையின் வெளிப்பாடே, இந்த முயற்சிக்கான அடிநாதம்!’’
- தன்மையாகச் சொல்லும் லதா, வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி தொழில் தொடங்குவது, உற்பத்தியாகும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பயனுள்ள பல தகவல்களை ’வழிகாட்டும் ஒலி’ மூலம் பகிரவிருக்கிறார்.
ஆகஸ்ட் 11 முதல் 17 வரை 044 - 66802912*   என்ற எண்ணை அழையுங்கள்... தொழில்முனைவோராகும் வழிகளை அறியுங்கள்!

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டலை மாவு, சீயக்காய்த்தூள் இரண்டையும் கலந்து... வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கினால், அவை பளபளக்கும்!
- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

தேங்காயும் பருப்பும் இல்லாமல் ஒரு `திடீர் கூட்டு’ செய்யலாமா..? ஒரு டம்ளர் பாலில் 3 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பொடித்த சீரகம், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்கவிட்டு,... கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்தால், சுவையான கூட்டு தயார்!
- எஸ்.சரோஜா, பம்மல்

களாபாத் தயாரிக்க சாதம் வேகவைக்கும்போது, ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் கலந்தால் சாதம் குழைவாக இருக்கும்.
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

ரியாக லட்டு பிடிக்க வரவில்லையா..? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து பிடித்தால், லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் ருசியாக இருக்கும்.
- விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்

குத்துவிளக்கை முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பிறகு புளி, உப்பால் தேய்த்துக் கழுவினால், எண்ணெய்ப்பிசுக்கு நீங்கி `பளிச்’ என்று ஆகிவிடும்.
- ஆர்.ராஜலட்சுமி, சேலம்

பூரிக்கு கோதுமை மாவைப் பிசையும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் சோயா மாவு, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால், ஹோட்டல் பூரி மாதிரி உப்பலாக வரும்.
- ஹெச்.சீதாலட்சுமி, கேரளா

வா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்துச் செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
- குறள்மணி தேவராஜ், ஈரோடு

பொரித்த அப்பளங்கள் நமர்த்துப் போய்விட்டால், அவற்றைத் துண்டுகளாக்கி வெறும் வாணலியில் வறுத்து... சிறிதளவு தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைத்தால்... சுவையான அப்பளத் துவையல் தயார்!
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4

ர்க்கரைவள்ளிக் கிழங்கை மண்போக கழுவி, தோல் சீவி துருவி, தேவையான சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்த்து சின்னச் சின்ன கப்புகளில் போட்டு இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்தால்... புது வகை ஸ்வீட் ரெடி.
- பத்மா வெங்கட்ராமன், அரியலூர்

புதினா இலைகளைக் காயவைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பெரும்பாலான பல் உபாதைகள் விலகிவிடும்.
- நா.செண்பகா, பாளையங்கோட்டை

வீட்டில் உபயோகப்படுத்தும் கத்தி, அரிவாள்மணைகளில் துருப்பிடித்திருந்தால், அந்த இடத்தில் செங்கல் பொடியைத் தூவி தேய்க்கலாம். உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி தேய்த்தாலும் துரு போய்விடும்.
- ஜி.வளர்மதி கணேஷ், தேனி

றுகாயை பாட்டிலில் போடும் முன்பு பாட்டிலின் உட்புறம் வெதுவெதுப்பான எண்ணெயைத் தடவிவிட்டால், பூஞ்சை ஏற்படாது.
- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

ரவு சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு ஆரஞ்சு பழத்தின் சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால், தூக்கம் நன்றாக வரும்.
- சித்ரா ரகுராமன், நெய்வேலி

ளுந்து வடைக்கு பருப்பு ஊறவைக்கும்போது, ஒரு பிடி துவரம்பருப்பையும் சேர்த்து ஊறவைத்தால்... வடை அதிகம் எண்ணெய் குடிக்காது; அதிக நேரம் ருசி மாறாமல் இருக்கும்.
- கே.எல்.புனிதவதி, கோவை

பாயசம் நீர்த்துப் போய்விட்டால், கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை காய்ச்சிய பாலில் கரைத்துச் சேர்த்தால் போதும். பாயசம் பதமாவதுடன், சுவையும் கூடும்.
- எஸ்.ராஜம், சேலம்

30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்

30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்

Thanks to : Aval Vigatan.

 


தானிய இனிப்பு புட்டு
தேவையானவை: பச்சரிசி மாவு - அரை கப், கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோளம்,  - தலா கால் கப், கோதுமை மாவு - கால் கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - ஒரு கப், முந்திரி - 8 (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் கோதுமை மாவை சிவக்க வறுத்து வைக்கவும் தானிய வகை களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் தனித்தனியாக பொடித்துக்கொள்ளவும். இவற்றுடன் அரிசி மாவு சேர்த்து வெதுவெதுப்பான உப்பு நீர் தெளித்துப் பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, இதனை இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த மாவுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ராகி சேமியா பிரியாணி
தேவையானவை: ராகி சேமியா - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 50 கிராம், நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, நல்லெண்ணெய், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி... வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

புளி அவல்
தேவையானவை: சிவப்பு அவல் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைக்கவும். சிவப்பு அவலை அலசவும். புளிக் கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், அவல் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... வேர்க்கடலைப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி, ஊறவைத்த அவலைப் பிழிந்து சேர்த்துப் புரட்டவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சுண்டல் குழிப்பணியாரம்
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குழையாமல் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து... கேரட் துருவல், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்துக் கிளறினால்... பாசிப்பருப்பு சுண்டல் ரெடி. தோசை மாவில் இந்த சுண்டலை போட்டுக் கலக்கவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, இந்த மாவை குழிகளில் ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், கொண்டைக்கடலை - கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், கெட்டித் தயிர் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும். 6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெங்காய ஊத்தப்பம் வேண்டுமெனில், நறுக்கிய வெங்காயத்தை ஊத்தப்பத்தின் மீது தூவி மிதமான தீயில் பொன்னிறமாக சுடவும்.

பூசணி விதை பாயசம்
தேவையானவை: பூசணி விதை - ஒரு கப் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பாக்கெட்டாக கிடைக்கும்), முந்திரிப்பருப்பு - 15 (நன்றாக உடைத்துக்கொள்ளவும்), பால் - ஒன்றரை கப், பொடித்த சர்க்கரை - அரை கப், ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: முந்திரி, பூசணி விதையை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாத்திரத்தில் பால் ஊற்றி அடுப்பில் வைத்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ஊறிய முந்திரி - பூசணி விதையை சேர்த்து வேகவிடவும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து திரும்ப ஒருமுறை அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் வேகவிடவும். ஒரு கொதி வந்ததும் ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

கம்பு - ஜவ்வரிசி இட்லி
தேவையானவை: கம்பு - ஒரு கப், இட்லி அரிசி - 3 கப், ஜவ்வரிசி - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி  - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3 - 4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


மினி பார்லி இட்லி -  சாம்பார்
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், பார்லி, முழு உளுந்து - தலா அரை கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
சாம்பார் செய்ய: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம், பார்லி எல்லாவற்றையும் நன்றாக அலசி, வெதுவெதுப்பான நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து அரைத்து, 4 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, மாவை மினி இட்லித் தட்டில் (அ) சாதாரண இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
சாம்பார் செய்முறை:  தனியா, கடலைப்பருப்பு, எள், காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றுசேர்த்து நீர் விட்டு... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, புளிக்கரைசல் விட்டு... சாம்பார் பொடி, சிறிது உப்பு  சேர்த்து, பருப்பைக் கடைந்து சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
சாம்பாரை கிண்ணத்தில் விட்டு, அதில் மினி இட்லிகளைப் போட்டு, ஸ்பூன் வைத்து சாப்பிடக் கொடுக்கவும். பெரிய இட்லியாக செய்திருந்தால், சின்னச் சின்னதாக நறுக்கி, சாம்பாரில் போடலாம்.

காக்ரா சாட்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - ஒரு டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்தூள்) - அரை டீஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, நெய், உப்பு தேவையான அளவு.
மேலே தூவ: தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு, சாட் மசாலா, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் மஞ்சள்தூள், ஓமம், அம்சூர் பவுடர், மிளகு - சீரகத்தூள், எண்ணெய், உப்பு சேர்த்து நீர் விட்டு, நன்றாகப் பிசையவும் (கெட்டியாக பிசைந்துகொள்ளவும்). மாவை உருண்டையாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவும். கனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் சிறிதளவு ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு பொன்னிறமாக சுட வும். பிறகு, மெல்லிய சுத்தமான துணியை சுருட்டி, சப்பாத்தியின் மேல் வைத்து அதன் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது போல் சீராக அழுத்தம் தரவும். சப்பாத்தி பழுப்பு நிறமாகும்போது, திருப்பிப் போட்டு, இதே மாதிரி செய்யவும். சப்பாத்தி முறுகலாக, மொறுமொறுப்பாக வரும். அதன் மீது பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி,  உப்பு, சாட் பவுடர் தூவி சாப்பிடலாம். இது சில நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
குறிப்பு: சப்பாத்தி மேக்கரிலும் இதை செய்யலாம்.

ராகி - முந்திரி ரவா தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு - அரை கப், முந்திரிப்பருப்பு - 20 (சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்) ரவை - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன் (உடைத்துக்கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும். (ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்கலாம்). 15 நிமிடம் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசையாக ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவிட்டு முறுகலாக எடுக்கவும்.

வெஜிடபிள் சாலட்
தேவையானவை:  துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ் - தலா கால் கப், மிகவும் மெல்லி யதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன் - பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (குழையாமல் வேகவிடவும்), பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு கிண்ணத்தில்  காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
கசப்பு இல்லாத வெள்ளரிக் காயை துருவி இதனுடன் சேர்க்க லாம்... நறுக்கிய தக்காளியையும் சேர்க்கலாம்.

வெற்றிலை ரசம்
தேவையானவை: வெற்றிலை - 6, புளி - எலுமிச்சை அளவு,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பழுத்த தக்காளி - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், தனியாத்தூள், மிளகு - சீரகப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்), எண்ணெய் - சிறிதளவு, உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்  விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன்  மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நெய்யில் தனியாத்தூள், மிளகு - சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். உடனடியாக வெற்றிலையை நறுக்கிப் போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.

கலவைக்காய் குழம்பு
தேவையானவை: முருங்கைக்காய் - ஒன்று, பச்சை மொச்சைப் பயறு - அரை கப், கத்திரிக்காய் - 4, பூண்டு - 5 பல், தோல் உரித்த சின்ன வெங்காயம் - அரை கப்,  இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: புளியைக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, தோல் சீவிய இஞ்சியைத் தட்டிப் போட்டு, பூண்டையும் நசுக்கி போட்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக் காய் மற்றும் பச்சை மொச்சை சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி, அரை கப்  நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்கு வெந்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: பச்சை மொச்சை கிடைக்கவில்லை என்றால், காய்ந்த மொச்சைப் பயறை 10 மணி நேரம் நீரில் ஊறவைத்து உபயோகப்படுத்தலாம்.


தஹி பூரி
தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா அரை கப், கேரட் துருவல் - கால் கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (மசிக்கவும்), தயிர் - ஒரு கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து, சிறுசிறு பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொரித்த பூரி நடுவே ஓட்டை போட்டு இந்த கலவையை வைத்து, பூரியின் மேல் தயிர் ஊற்றி நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும்.

முருங்கை இலை பொடி சாதம்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், ஆய்ந்த முருங்கை இலை - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 6 பல்,  புளி - நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - கால் கப், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: முருங்கை இலையை நீரில் அலசி, துணியால் நன்கு துடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் இந்த இலையை வறுத்துக்கொண்டு, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கிகொள்ளவும். பூண்டு, உளுத்தம்பருப்பு, எள், காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெயில் வறுத்து... புளி, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். சூடான வடித்த சாதத்தில் சிறிதளவு நெய் விட்டு, செய்து வைத்திருக்கும் பொடி வகைகளைப் போட்டு பிசைந்து சாப்பிடவும்.

பீட்ரூட் கீர்
தேவையானவை: பீட்ரூட் (பெரியது) - 2, காய்ச்சி ஆறவைத்த பால் - 4 கப், ஏலக்காய் - 3, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, முந்திரி - 6 (நெய்யில் வறுக்கவும்), சர்க்கரை - 50 கிராம், நெய் - சிறிதளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, நறுக்கி, குக்கரில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். மேலே குங்குமப்பூ தூவி, வறுத்த முந்திரி சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கூலாக பரிமாறவும்.

சப்பாத்தி உப்புமா
தேவையானவை: சப்பாத்தி - 4, வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம்.

முட்டைகோஸ் சாதம்
தேவையானவை: துருவிய முட்டைகோஸ் - ஒரு கப், வடித்த சாதம் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்), மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: வடித்த சாதம், சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... பட்டை, மிளகு - சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும். இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும். இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஐந்து வற்றல் குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல், அவரைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல் - தலா ஒரு கைப்பிடி அளவு, தக்காளி - 100 கிராம், தோல் உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: மிளகு, சீரகம், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு,  எள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, எல்லா வற்றல்களையும் ஒன்று ஒன்றாக போட்டு தீய்ந்து விடாமல் வதக்கி... சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். குழம்பு வற்றி `திக்’காக வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மிளகுத் தண்ணீர் சூப்
தேவையானவை: மிளகு - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை டீஸ்பூன்,  தக்காளி - பாதியளவு (நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
பொடிக்க: தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - ஒன்று.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு கொதி வந்ததும் மஞ்சள்தூள் சேர்த்து, இந்தப் பொடியை போட்டு, தக்காளி, உப்பு, வெல்லம் சேர்க்கவும். நன்றாக கொதி வந்ததும் இறக்கவும். இதனுடன் முழு மிளகு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.

சீரக ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பூண்டு - 15 பல், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் - 4, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யை அதில் சேர்க்கவும். பூண்டினை தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி... சிறிதளவு நெய்யில்  இளஞ்சிவப்பாக வதக்கவும். மீதமுள்ள நெய்யில் மிளகு, சீரகத்தை வறுத்து கொரகொரப்பாக பொடி செய்யவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மோர் மிளகாய் வற்றலை கருமையாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தில் உப்பு சேர்த்து, முந்திரிப் பொடி, மிளகு - சீரகப் பொடி, பூண்டு, மோர் மிளகாய் வற்றல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

ஸ்பெஷல் வடை
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், பச்சரிசி - 25 கிராம், முழு உளுத்தம்பருப்பு -  2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, அரிசி, முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அலசி, ஒன்றுசேர்த்து நீரில் 2 மணி நேரம்  ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கம்பு மோர்க்கூழ்
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தயிரைக் கடைந்து ஒரு கப் நீர் விட்டுக் கலக்கி மோராக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... சின்ன வெங்காயம், இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, கடைந்த மோரை ஊற்றி, உப்பு போட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கம்பு மாவை போட்டு கைவிடாமல் கிளறவும். மாவு வெந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் - அவல் போஹா
தேவையானவை: வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், அவல் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை  - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (விழுதாக அரைக்கவும்), உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: அவலை நன்றாக நீரில் அலசிவிட்டு, நீரை வடிய விட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்க்கவும். இதனுடன் நீர் வடித்த அவல் சேர்த்து கிளறி, வேகவைத்த சோள முத்துக்களை போட்டு வதக் கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). இதில் மஞ்சள்தூள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் வேகவிடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

வீட் பிரெட் மசாலா டோஸ்ட்
தேவையானவை: வீட் பிரெட் (கோதுமை ரொட்டி) - 6 ஸ்லைஸ், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
அரைக்க: இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு, பூண்டு - 6 பல், சீரகம் - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிதளவு நீர் சேர்த்து, மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்லைஸ்களின் ஒருபுறம் வெண்ணெய் தடவி, அவற்றின் உள்ளே அரைத்த சட் னியை தடவி... குறுக்காக வெட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, வெட்டிய பிரெட் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க சுடவும் (சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சிறிது ஊற்றிக்கொள்ளவும்). இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் செய்து கொள்ளவும்.
குறிப்பு: பிரெட் டோஸ்டர் இருந்தால் அதில் வைத்தும் எடுக்கலாம்.

வெஜ் மசாலா பாத்
தேவையானவை: அரிசி - ஒரு கப், நறுக்கிய காய்கறி கலவை (கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ்) ஒரு கப், உரித்த சின்ன வெங்காயம் - 10, ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, துவரம்பருப்பு - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, பூண்டு - 4 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பை வேகவைக்கவும். குக்கரில் நெய் விட்டு... வெங்காயம், காய்கறி கலவை, பெருங்காயத்தூள், முருங்கைக்கீரையை வதக்கி, அரைத்த மசாலா விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பருப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசியை சேர்த்துக் கிளறவும். பிறகு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, கறிவேப்பிலையை தாளித்து சேர்த்துக் கிளறி பரிமாறவும்..

கார்லிக் பரோட்டா
தேவையானவை: மைதா - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மைதாவோடு உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, நீர் விட்டு, தளர்வான, மிருதுவான மாவாக பிசையவும். இதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இன்னொரு முறை அடித்து பிசைந்து... எண்ணெய் தடவி 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டை களாக உருட்டவும். சப்பாத்தி இடும் மனை மீது சிறிதளவு மைதா தூவி, மாவு உருண்டையை வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும். அதன் மீது எண்ணெயை பரவலாக தடவி, புடவை கொசுவம் போல் மடித்து பின்னர் உருண்டைகளாக்கவும். பிறகு இதனை கனமான பரோட்டாக்களாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, பரோட்டாவைப் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். பிறகு பரோட்டாவின் ஓரங்களை இரண்டு கைகளுக்கு நடுவே வைத்து தட்டவும். இப்போது அடுக்குகளோடு கூடிய கார்லிக் பரோட்டா ரெடி.

குயிக் இனிப்பு இடியாப்பம்
தேவையானவை: ரெடிமேட் இடியாப்பம் - ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - சிறிதளவு, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, உலர்திராட்சை - 10.
செய்முறை: தேவையான அளவு நீரைக் கொதிக்கவைத்து அதில் ரெடிமேட் இடியாப்பத்தை போடவும். 5 நிமிடத்தில் வெந்து பொலபொலவென்று வந்துவிடும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை சேர்த்துக் கிளறவும். பரிமாறுவதற்கு முன் சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.

சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை
தேவையானவை: சிவப்பரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், சிவப்பு அவல் - கால் கப்,  தேங்காய்த் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சிவப்பரிசி, துவரம்பருப்பு, சிவப்பு அவல், காய்ந்த மிளகாயை நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து... அடைபதத்தில் கொரகொரப்பாக அரைக்கவும் (பாதி அரைபடும் போது தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்). வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த  மாவைப் போட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக வெந்த பிறகு இறக்கவும். பிறகு, மாவை கொழுக்கட்டை போல பிடித்து, இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

வறுத்த அரிசி சொஜ்ஜி
தேவையானவை: பச்சைப் பட்டாணி - அரை கப், காய்ந்த மிளகாய் - 5, பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக, இளஞ்சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு... உப்பு பட்டாணி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். இதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பை போட்டு, தேங்காய்த் துருவலை சேர்க்கவும். நன்றாக கலக்கிவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.


பாதாம் மலாய் ஜாமூன்
தேவையானவை: ஆச்சி பாதாம் டிரிங்க் மிக்ஸ் - 200 கிராம், ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸ் - 200 கிராம், நெய் அல்லது எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, பிஸ்தா பருப்பு - 20 (நறுக்கவும்), சர்க்கரை - 500 கிராம், பால் - ஒன்றரை லிட்டர்
செய்முறை: ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸில் சிறிது பால் விட்டு பூரி மாவு பதத்தில் மெத்தென்று பிசைந்து, உருண்டையாகவோ அல்லது கனமான வடை போலவோ செய்துகொள்ளவும். வாணலியில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் ஜாமூன்களை பொன்னிறமாக பொரித்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் சுண்டி ஒரு லிட்டர் அளவு வந்ததும், சர்க்கரை, ஆச்சி பாதாம் டிரிங்க் மிக்ஸ் இரண்டையும் சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். இதில் பொரித்த ஜாமூன் உருண்டைகளைப் போட்டுக் கிளறி, நறுக்கிய பிஸ்தா பருப்பை சேர்த்து அப்படியே ஒரு மணி நேரம் வைக்கவும். ஊறியதும் எடுத்து பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து `ஜில்’ என்றும் பரிமாறலாம். அருமையான இந்த ஸ்வீட்டை பர்த்டே பார்ட்டி போன்ற விசேஷங்களில் செய்து அசத்தலாம்.




கிரில்டு ஃபுட் சாப்பிடலாமா?

கிரில்டு ஃபுட் சாப்பிடலாமா?



சைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கன்றன. எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா?

கிரில்டு உணவுகள் எப்படித் தயாராகின்றன?
இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து , கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இறைச்சிகள் தரமானவையா?
குறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர். மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃபிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள்,  உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம்.
என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
விதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை. ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம்இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
தீயில் சுட்ட சோளம் நல்லது!
சோளத்தை சுட்டு விற்பார்கள். அதில் ரசாயனங்களோ, நிறங்களோ, செயற்கை உப்புகளோ, எண்ணெயோ சேர்ப்பது இல்லை. சோளத்தைச் சுட்ட பிறகுதான், சுவைக்காக உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.