Saturday, 4 July 2015

ஓட்ஸ் மினி காரக்கொழுக்கட்டை

ஓட்ஸ் மினி காரக்கொழுக்கட்டை
செய்முறை:
ஓட்ஸ்- 1 கப்
பச்சரிசிமாவு- 1 கப்
தேங்காய்த்துருவல்- கால் கப்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொழுக்கட்டை மேல் தூவ:
மிளகாய்த்தூள்- சிறிதளவு மிளகுத்தூள்- சிறிதளவு இட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி
செய்முறை:
• ஓட்சை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.
• கடாயை அடுப்பில் வைத்து திரித்த ஓட்ஸ், அரிசி மாவை போட்டு பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
• வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.
• தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
• அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
• இட்லி தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கி ஆவியில் வேக விடவும்.
• அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.
• கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.
• தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.
• கடைசியாக அதன் மேல் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி தூவிப் பிரட்டவும்.
• மிகவும் ருசியாக இருக்கும் இந்த ஓட்ஸ் மினி காரக்கொழுக்கட்டை


No comments: