Wednesday, 27 May 2015

மச்சிலி அம்ரிஸ்டரி

மச்சிலி அம்ரிஸ்டரி
தேவையான பொருட்கள் :
----------------------------------------------------------------------------
மீன், சாட் மசாலா, ஓமம், கரம் மசாலா, தூள், பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, புதினா, இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, வெங்காயம், எண்ணெய்.
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, உப்பு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து அதோடு மீன் சேர்த்து கலக்கி 10 நிமிடம் ஊறவிடவும்.
2. ஒரு அடுப்பில் கடாயும், மற்றொரு அடுப்பில் தவா (தோசைக்கல்) வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புதினா, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தவாவில் மசாலா கலந்து வைத்துள்ள மீனை போட்டு பொறிக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா தூள், ஓமம் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. இரண்டு அடுப்பையும் அனைத்து மீனை ஒரு தட்டில் எடுத்து அதோடு செய்துள்ள மசாலாவை சேர்த்து பறிமாரவும்.
இப்பொழுது சுவையான "மச்சிலி அம்ரிஸ்டரி" ரெடி.

No comments: