தேவையான பொருட்கள்:
சின்ன நெத்திலி கருவாடு – 20
பச்சை மொச்சை பயறு – 1/4கப்
சின்ன வெங்காயம் – 1/4கப்
நாட்டு தக்காளி – 1/4கப்
பூண்டு – 3
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளித்தண்ணீர் – 1/4கப்
சோம்பு, வெந்தயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பயறை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். கருவாடை வெந்நீரில் 1/2மணி நேரம் ஊறவிட்டு நன்கு மண் போக அலசி தனியே வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம் போட்டு சிவந்ததும் சின்னவெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
பின்பு அதனுடன் தூள் வகைகள், புளித்தண்ணீர், வேகவைத்த பயறு, கருவாடு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்…
சுவையான நெத்திலி கருவாடு குழம்பு தயார்.
No comments:
Post a Comment