Tuesday, 23 May 2017

நில அளவுகள் அறிவோம்!!!!

நில அளவுகள் அறிவோம்.
♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

வியாபாரம்!

� * #தலைக்கு ஷாம்பு வந்தப்புறம்தான் முடிய இழந்துகிட்டு இருக்கோம்...!!

* #பல்லுக்கு பேஸ்ட் வந்தப்புறம்தான் பல்ல இழந்துகிட்டு இருக்கோம்...!!

* #ஒடம்புக்கு சோப்பு வந்தப்புறம் அழகான தோல இழந்துகிட்டு இருக்கோம்..!!

* #ஹைஜீனிக்ன்னு வந்தப்புறம்தான்
நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்துகிட்டு
இருக்கோம்...!!

* #நாப்கின் வந்தப்புறம்தான் கர்ப்பப்பையை இழந்துகிட்டு இருக்கோம்..!!

* #மருத்துவமனைகள் வந்தப்புறம்தான்
ஆரோக்கியத்த இழந்துகிட்டு இருக்கோம்..!!

* #ஆங்கிலப்பள்ளிகள் வந்தப்புறம்தான்
சிந்தனை திறனை இழந்துகிட்டு
இருக்கோம்..!!

* #சுதந்திரம் வந்தப்புறம்தான்
சுதந்திரத்தையும் இழந்துகிட்டு இருக்கோம்..!!

#எதுனா புரியுதா?

இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு
தெரியுதா?

#வியாபாரம்! வியாபாரம்!

#கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்

*#கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்*

*1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*

*2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்*

*3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*

*4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*

*5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*

*6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*

*7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*

*8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்*

*9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு*
*14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*

*10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*

*11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*

*12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*

*13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*

*14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது*

*15    ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*

*16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்*

*17    பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*

*18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*

*19    பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்*

*20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*

*21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*

*22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார். saispiritualcenter.org*

*23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*

*24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*

*25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்*

*26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்    60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*

*27    விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்    14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*

*28    சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*

*29    ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*

*30    இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.*

*எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்*

பானி பூரியை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு சொல்றேன் . அதைப் படித்து வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்....!!!!

இன்னும் கொஞ்ச   நாள்ல ஸ்கூல்லாம் ஆரம்பிச்சிடும். அதனால பசங்களுக்கு இப்போவே இதெல்லாம் செஞ்சி குடுங்க,,,,வெரி Hygienic & Healthy ,,,,!!!!

இங்கு பானி பூரியை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு சொல்றேன் . அதைப் படித்து வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்....!!!!

 பூரிக்கு:--

ரவை - 1/2 கப்
மைதா - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

 பானிக்கு:--

கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 2-3
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
மிளகு - 2 டீஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தண்ணீர் - 1 1/2 லிட்டர் மசாலா.

.. உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது

செய்முறை:--

 முதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு பொடி செய்து கொண்டு, பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 1 1/2 லிட்டர் நீரில் ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து, நீரை வடித்து, அந்த நீரில் அரைத்து வைத்துள்ள மல்லி பேஸ்ட், மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்

. பிறகு மைதா, ரவை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, மாங்காய் தூள், ப்ளாக் சால்ட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால், பானி பூரி ரெடி....!!!!

Lee quan yee- லீ க்வான் யூ..

பராமரிக்க முடியாத ஒரே காரணத்தால், மலேசியா வருத்தத்துடன் கைவிட்ட நாடு- சிங்கப்பூர்...

போதுமான குடிநீர் கிடையாது...
கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது...
ஆனால், தனியாகப் போராடி, தொழில்த் துறையில் வல்லரசுகளுக்குச் சவால் விடும் அளவு முன்னேற்றம்...

மென்பொருள், வன்பொருள் வல்லுனர்கள் அதிகமாய் வேலைக்குச் செல்ல ஆசைப் படும் நாடு(சிலிகான் வேலிக்குப் போட்டியாய்)

சுற்றுலாத்துறையில் அபரிவிதமான வளர்ச்சி...
இத்தனையும் சாத்தியமானது- ஒரே ஒருவரால்- லீ க்வான் யூ...

எப்படி சாத்தியமானது அனைத்தும்...???!!!
அவரது- ஒரே சூத்திரம்- சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்...
தமிழை ஆட்சிமொழி ஆக்கி அழகு பார்த்தார்...
எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான்- அத்தனை தமிழனும்...

தமிழை கவுரவப்படுத்திய அவருக்கு, நன்றி நவில்தல் நம் அனைவரின் கடமை...

இன்னும் முக்கியமாக, இலங்கையில் நடந்தது, இனப்படுகொலை (Genocide) என்று உலக அரங்கிற்கு உரக்கச் சொன்னவர் அய்யா லீ க்வான் யூ..

நம் மொழியையும், இனத்தையும் மதித்த சிங்கப்பூரின் தந்தைக்கு , உலகத் தமிழர் அத்துணை பேரின் சார்பிலும்
புகழ் வணக்கம் செலுத்துவோம்...

Tuesday, 16 May 2017

How to get free bit coin

Please copy and paste following links in your address bar to get free bit coin.

you may check google how much rupees in one bitcoin.


1. http://btcvic.com/r/a9b5f2c290ffc27d341d

Friday, 12 May 2017

பனாட்டு -- அறியப்படாத தின்பண்டம்

அறியப்படாத தின்பண்டம் பனாட்டு



பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான"     (தொல்காப்பியம். எழு. 284)

தொல்காப்பியத்தில் பனாட்டு பற்றி வரும் வரிகள் இவை. மேலும் பனாட்டு என்றால் பிசைதல் என்றும் பொருள்.

நெய்தல் நில கடற்பகுதிகளில் வாழும் சிறுவர்-சிறுமிகளின் திண்பண்டமான பனாட்டு காலப்போக்கில் கடல் காற்றோடு கலந்து காணாமல் போய்விட்டது. இதற்கு பனைமரங்களை அழித்தது  தொலைக்காட்சி விளம்பரம் என காரணங்கள் பல சொல்லாம். இதன் விளைவு  தமிழ் பேசும் பழங்குடியின மக்களிடம் கூட நூடுல்ஸ் நுழைந்து விட்டது.

 இன்று இலங்கையிலும் இராமேஸ்வரம் தீவிலும் அரிதாக உள்ள இந்த திண்பண்டம் செய்யப்படும் செய்முறையைப் பற்றி பார்க்கலாம்.

பனை பழங்களை மேற் கருந்தோலினை உரித்து அதிலுள்ள கொட்டையுடன் கூடிய சந்தன நிற சதைகளை சாறு பிழிந்து ஒரு சட்டியில் கொட்டைகளுன் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பனை சதைகளுடன் கூல் போன்ற பதத்தில் நீரீணை சேர்த்து ஊற வைக்க வேண்டும். கொட்டையுடன் ஊற வைப்பதால் பனை பழத்தில் உள்ள கசப்பு மற்றும் காறல் சுவையை அகற்ற அது உதவுகின்றது.

நன்றாக ஊறியப் பின்னர்  அகன்ற பாத்திரத்தில் (அல்லது சிறிய தொட்டியில்) பனை பழம் சதையையும், பிழிந்த சாற்றினையும், நீரிணையும் சிறிது சிறிதாக ஊற்றி கால்களை நன்றாக கழுவிட்டு நன்றாக மிதிக்க வேண்டும். கூழ் பதம் அடைந்தவுடன் மண் மற்றும் பனை நாரை அகற்ற சல்லடையை பயன்படுத்திக் கொள்ளலாம். கொட்டையில் உள்ள சாற்றினை தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக சாற்றினை எடுக்கவும்.

சல்லடையால் வடிகட்டப்பட்ட பனைச் சாற்றை ஓலைப்பாயில் ஊற்றிப் பரப்ப வேண்டும். நேரடியாக வெயிலில் பனைச் சாற்றை காயவைக்காமல் பந்தல் போட்டு காய வைக்கப்படுகிறது. முதல் அடுக்கு காயந்ததும், இரண்டு மற்றும் மூன்று அடுக்குகளாக பனை சாற்றை அடுத்தடுக்குகளாக பரப்ப வேண்டும். இந்த மூன்று அடுக்கு பனைச் சாற்றினை பந்தல் அடியில் 15 இல் இருந்து 20 நாட்கள் காயவைக்கப்படுகிறது.

பின்னர் காயவைக்கப்பட்ட பனைச் சாறு கேக் போன்ற வடிவில் இரண்டாக மடித்து ஒரு இன்ஞ் வடிவில் கேக் போன்று சதுர வடிவில் வெட்டி இரண்டிலிருந்து மூன்று நாட்கள் காய வைத்தபின்னர். அழகிய ருசியான பனாட்டு தயார்.